Telegram Web
⚪️🔴 ராமர் பாலத்தின் அருகே தரிசனம் செய்வதற்காக சுவர் ஒன்றைக் கட்டக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு.

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க உத்தரவிடக் கோரிய மற்றொரு மனுவையும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.

சுவர் கட்ட நீதிமன்றம் எப்படி உத்தரவிட முடியும்? இது அரசின் நிர்வாக ரீதியான முடிவு - நீதிபதிகள் கருத்து.

- @u7news
⚪️🔴பொதுகூட்டம் நடத்தி நீபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்'

கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பற்றி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு அவதூறாக பேச்சு

ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி தான் பேசியதற்கு குமரகுரு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நூதன நிபந்தனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

- @u7news
⚪️🔴அக்டோபர் 12-ஆம் தேதி கூடுகிறது காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 88வது கூட்டத்திற்கு, குழுவின் தலைவர் வினீத் குப்தா அழைப்பு

கடந்த 29ஆம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டது

3,000 கன அடி நீர் திறக்கும் உத்தரவை ரத்து செய்ய கர்நாடகா கோரிக்கை வைத்திருந்த நிலையில், 12ஆம் தேதி ஒழுங்காற்று குழு கூட்டம் கூடுகிறது

- @u7news
⚪️🔴தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருகிறது.

அதிகபட்சமான வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவது இல்லை.

குற்றசெயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்ற பெண், பட்டியலினத்தவர் என்பதால் பதவியேற்க முடியவில்லை.

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 7 சதவீத குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்படுகின்றனர்- கடலூர் நந்தனார் குருபூஜை விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

- @u7news
⚪️🔴மயிலாடுதுறை: தில்லையாடி கிராமத்தில் வெடி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

- @u7news
⚪️🔴தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தி அறிவிப்பு.

அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பால் கொள்முதல் விலையை உயர்த்தியது ஆவின்.

தரமான பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.1 ஊக்கத்தொகை - அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு

பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டாலும் விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படவில்லை

- @u7news
⚪️🔴டெல்லி ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கை கைது செய்தது அமலாக்கத்துறை

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சோதனையை தொடர்ந்து கைது

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது

- @u7news
⚪️🔴அரசுப் பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1,000லிருந்து ரூ.1,400 ஆகவும், அரசு கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1,100ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

- @u7news
⚪️🔴இனி போன் நம்பர் தேவையில்லை.. யூசர் நேம் போதும்..

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்று வாட்ஸ் அப்பிலும் 'Username' வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்:

மெட்டா குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தற்போது புதிய வசதியை கொண்டு வர உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய அப்டேட்:

அதன்படி, வாட்ஸ் அப்பில், 'Username' ஆப்ஷனை மெட்டா நிறுவனம் கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் இருப்பதுபோன்று 'Username' ஆப்ஷனை மெட்டா கொண்டு வர உள்ளது.

ஏற்கனவே, வாட்ஸ் அப்பில் நம்பர் ஆப்ஷன் மட்டும் உள்ளது. இந்நிலையில், வரக்கூடிய 'Username' ஆப்ஷன் பயனர்களின் செல்போன் எண் மற்ற பயனர்களுக்கு காட்டப்படாது.

Join Now U7news Whatsapp Channel :
https://whatsapp.com/channel/0029Va49E0w1CYoQS52kol0w

மேலும், உங்கள் மொபைலில் பதியாத எண்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட எண்களுக்கும் கூட உங்களது வாட்ஸ் எண் காட்டப்படாது. இதன் மூலம் மொபைல் எண்கள் மூலம் நடக்கும் மோசடியை இது தடுக்கும்.

இருப்பினும், உங்கள் மொபைலில் பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கு உங்கள் மொபைல் நம்பர் காட்ட விரும்பினால், அதற்கு ஏற்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளலாம்.

அதாவது, பயனர்களுக்கு 'Username' அல்லது 'Phone Number' என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், திரையில் ஏதாவது ஒன்று தான் தோன்றும். Setting ஆப்ஷனுக்குள் சென்று profile- ஐ கிளிக் செய்து, அதற்கு வலதுபக்கத்தில் 'Create Username' என்ற ஆப்ஷன் இருக்கும்.

அங்கு, தங்களுக்கு விருப்பப்பட்ட Username-ஐ பயனர்கள் வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
⚪️🔴JUST IN: போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது.

சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்திரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது.

- @u7news
⚪️🔴இன்று முதல் தொடங்குகிறது உலக கோப்பை கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் கோலாகலமாக தொடங்குகிறது.

இந்தியாவில் நடைபெறும் இந்த தொடர் நவம்பர் 19 வரை நடைபெற உள்ளது. இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

- @u7news
⚪️🔴10 அணிகள் உலகோப்பைக்கு தேர்வு பெற்றது எப்படி:

உலககோப்பை தொடரை நடத்தும் அணி என்ற அடிப்படையில் இந்தியா, நேரடியாக பங்கேற்கிறது.

ஐ.சி.சி., உலக கோப்பை சூப்பர் லீக் தொடரில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த 13 அணிகள் இடை யிலான, 83 போட்டிகள் (இருதரப்பு மோதல்) முடிவில் ‘டாப்-7' அணிகள் உலக தொடருக்கு முன்னேறின.

இதன்படி ஆஸ்திரேலியா, நியூசி லாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென்ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் என 7 அணிகள் தகுதி பெற்றன.

மீதமிருந்த 5 அணிகள் உலக கோப்பை தகுதிச்சுற்றில் மோதின. முடிவில் இலங்கை, நெதர்லாந்து முன்னேற, மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன.

உலக கோப்பை அரங்கில் முதல் இருமுறை (1975, 1979) சாம்பியன் ஆனது வெஸ்ட் இண்டீஸ். தகுதிச்சுற்றில் ஏமாற்றிய இந்த அணி, 48 ஆண்டுகளில் முதன் முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெறாமல் வெளியேறியது.

- @u7news
🔴⚪️கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தீர்மானம்: பேரவையில் ஆதரவு, சமூக வலைதளத்தில் பாஜக எதிர்ப்பு


*பாஜக ஆதரவு!*

. சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானத்தை ஆதரித்தார் பாஜக MLA வானதி சீனிவாசன்!

▪️. கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நாடகம் என அண்ணாமலை விமர்சனம் செய்த சில நிமிடங்களிலேயே வானதி சீனிவாசன் ஆதரவு தெரிவிப்பு.
⚪️🔴வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்

மசோதா தாக்கல்

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு.

▪️. நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டது
⚪️🔴 இன்றைய நாடகம், கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்: அண்ணாமலை விமர்சனம்!

சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, குழந்தைகள், பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள், அதிகரித்து வரும் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறைகள் என, தமிழகம் இதுவரை இல்லாத மோசமான இருண்ட காலத்தில் இருக்கும்போது, நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு என்று நாடகமாடிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அவரது இன்றைய நாடகம், கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்.

கடந்த இருபது ஆண்டுகளில், இலங்கை அரசால், ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து பல துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்குக் காரணம், இன்றைய முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களின் தந்தை மறைந்த கருணாநிதி அவர்கள், கடந்த 1974 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்தபோது, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸுடன் சேர்ந்து, கச்சத்தீவு மீதான உரிமையை விட்டுக் கொடுத்ததுதான்.

கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்க முழு சம்மதம் தெரிவித்துத் தமிழக மீனவ மக்களுக்குத் துரோகம் செய்ததோடு, கடந்த ஐம்பது ஆண்டுகளாக, ஒவ்வொரு தேர்தலின் போதும், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு, தமிழர்கள் உரிமை, என்றெல்லாம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக.

கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது, மறைந்த இந்திரா காந்தி அவர்களின் ராஜதந்திரம் என்று கூறினார் தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை. தமிழக மீனவ மக்களுக்குச் செய்த துரோகம், உங்களுக்கு ராஜதந்திரமா?

காங்கிரஸுடன் சேர்ந்து கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்த பிறகு, பல முறை, மத்திய அரசில், பசையான அமைச்சர் பதவிகளை மட்டும் வாங்கிக் கொண்டு, கச்சத்தீவு விவகாரத்தில் கள்ள மௌனம் மட்டுமே சாதித்துக் கொண்டிருந்தது திமுக. கடந்த நாற்பது ஆண்டுகளில் மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தபோது, கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக? இலங்கைப் போரின்போது, திமுக நடத்திய மூன்று மணி நேர உண்ணாவிரதம் உள்ளிட்ட கபட நாடகங்களை மக்கள் மறந்து விட்டார்கள் என்று திரு.ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, இலங்கை ராணுவத்தால், 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது, மத்திய அமைச்சர்களாக இருந்து ஊழல் செய்வதில் மட்டுமே மும்முரமாக இருந்த திமுக, தமிழக மீனவர்கள் உயிரைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது நம் கண்முன்னே கண்ட வரலாறு.

கடந்த 2014 ஆம் ஆண்டு, இலங்கை அரசால் தமிழக மீனவர்களுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட போது, அவர்களை பத்திரமாக மீட்டது நமது பாரதப் பிரதமர் திரு @narendramodi அரசு. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் பிரதமர் பொறுப்பேற்ற பிறகு, இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்கள், உடனுக்குடன் மீட்கப்படுகிறார்கள். அவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் நேராமல், சட்டப்பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த பாரத நாடும், நமது மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது.

கச்சத்தீவை விட்டுக் கொடுத்து, ஐம்பது ஆண்டுகள் மௌனமாக இருந்து, தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு மீட்போம் என்று கபட நாடகம் ஆடும் திரு. ஸ்டாலின் அவர்களையோ, திமுக காங்கிரஸ் கூட்டணியையோ, பொதுமக்கள் நம்பப் போவதில்லை.
⚪️🔴கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது தவறில்லை”

“கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது சரிதான்; காங்கிரஸ் ஒருபோதும் அதை தவறு என சொல்லாது; வெறும் 272 ஏக்கர் நீர் இல்லாத அந்த வானம் பார்த்த பூமியை கொடுத்துவிட்டு, பல லட்சம் ஏக்கர் நிலத்தை இந்தியாவிற்கு பெற்று கொடுத்தவர் இந்திரா காந்தி இப்போது மீனவர்கள் தங்களது உரிமை வேண்டும் என சொல்கிறார்கள்; அதற்காக அவற்றை திரும்பப் பெற வேண்டும் என்பதை ஆதரிக்கிறோம்"

- தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை

285 ஏக்கர் கச்சத்தீவை கொடுத்துவிட்டு, 4,600 சதுர கிலோமீட்டர் வட்ஜ் பேங்கை இந்தியாவிற்கு பெற்றுத் தந்தவர் இந்திராகாந்தி.

கச்சத்தீவு ஒப்பந்தத்தைப் பற்றி பேசுபவர்கள் வட்ஜ் பேங்க் ஒப்பந்தத்தை பேசுவதில்லை

பேரவையில் கச்சத்தீவை மத்திய அரசு மீட்க வேண்டும் என்ற தீர்மானத்தின் மீது காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை பேச்சு
⚪️🔴 வக்ஃப் மசோதா - கிரண் ரிஜிஜூ விளக்கம்!

“அரசியல் சாசனத்தின் வரம்புக்குள்ளேயே மசோதாவில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன; நாங்கள் நேர்மையான நோக்கங்களுடன் இந்த மசோதாவை விவாதத்துக்கு கொண்டு வந்துள்ளோம்” - மத்திய சிறுபான்மையினர் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம்

“இந்தியாவில்தான் உலகிலேயே மிகவும் அதிக அளவில் வக்ஃப் சொத்துக்கள் உள்ளன; இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள் தங்கள் இதயத்தை தொட்டுப் பார்க்க வேண்டும்

வக்ஃப் சொத்துக்கள் அதிகரித்தாலும், அதன் மூலம் ஈட்டப்படும் வருமானம் அதிகரிப்பதில்லை; வக்ஃப் சொத்துக்கள் சரியாக நிர்வாகிக்கப்பட்டால் தேசத்தின் தலைவிதியே மாறிவிடும்

வக்ஃப் மசோதா மூலம் மசூதிகள் கையகப்படுத்தப்படும் என்பது தவறான பிரசாரம்; CAA விவகாரத்திலும் இப்படி தவறான வதந்திகள் பரப்பப்பட்டன

நம்பிக்கை என பொருள்படும் வகையில் வக்ஃப் சட்ட தலைப்பின் சுருக்கம் 'உமீத்' என ஆங்கிலத்தில் உள்ளது

நேர்மையாக வக்ஃப் சொத்துக்கள் மூலம் அதிக வருமானம் ஈட்டப்பட்டால், ஏழை இஸ்லாமியர்களுக்கு உதவிகரமாக இருக்கும்"

- மக்களவையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ விளக்கம்
⚪️🔴வக்பு வாரிய மசோதா நிறைவேறியது.

12 மணி நேர விவாதத்திற்கு பிறகு வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.

வக்பு வாரிய மசோதாவிற்கு ஆதரவாக 288 வாக்குகளும் எதிராக 232 வாக்குகளும் பதிவானது.

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் இருந்ததால் மக்களவையில் நிறைவேறியது.
⚪️🔴மக்களவையைத் தொடர்ந்து, மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்ஃப் சட்டத் திருத்த மசோதா.

நள்ளிரவில் நிறைவேற்றம்

✍️. மக்களவையைத் தொடர்ந்து, மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா.

ஆதரவாக 128,
எதிராக 95
எம்.பி.க்கள் வாக்களித்தனர்.

▪️. 12 மணி நேரத்திற்கு மேலாக விவாதம் நடைபெற்று, நேற்று நள்ளிரவு 2 மணிக்கு மேல் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது.
⚪️🔴❤️ச்சே.. என்னா மனுஷன்..!”

பெங்களூரு: Ok Credit என்ற நிறுவனத்தில் |இருந்து பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு வேறு இடத்தில் வேலை வாங்கிக் கொடுக்கும் அந்நிறுவனத்தின் CEO ஹர்ஷ் போக்கர்னா!

இதுவரை பணி நீக்கம் செய்த 70 பேரில், 68 பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளார். “இது எங்களின் தவறு. இதற்கு நாங்களே பொறுப்பேற்கிறோம்” என ஹர்ஷ் கூறுகிறார்
2025/04/07 08:57:33
Back to Top
HTML Embed Code: