Telegram Web
வரலாற்றில் இன்று.

16, ஜூன் 2024, ஞாயிறு


363 : ரோமப் பேரரசர் யூலியான் ,
டைகிரிஸ் ஆறு வழியே பின்வாங்கி, தமது சரக்குக் கப்பல்களைத் தீயிட்டுக் கொளுத்தினார். ரோமப் படைகள் பாரசீகரிடம் 
இருந்து பெரும் இழப்புகளைச் சந்தித்தன.

632 : மூன்றாம் யாஸ்டெகெர்டு 
செசனியப் பேரரசின் மன்னராக 
முடிசூடினார். இவரே செசனிய வம்சத்தின் (இன்றைய ஈரான்) கடைசி அரசராவார்.

1487 : ரோஜாப்பூ போர்களின் கடைசிப் போர் ஸ்டோக் ஃபீல்டு என்ற இடத்தில் நடைபெற்றது.

1586 : ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி, இரண்டாம் பிலிப்பைத் தனது முடிசூட்டு வாரிசாக அறிவித்தார்.

1654 : ஸ்வீடனின் 
கிறிட்டினா மகாராணி
முடி துறந்தார். பத்தாம் சார்லஸ் குஸ்த்தாவ் புதிய மன்னராக முடிசூடினார்.

1745 : ஆஸ்த்திரிய வாரிசு உரிமைப் போர்: நியூ இங்கிலாந்து 
குடியேற்றப் படையினர் புதிய பிரெஞ்சு 
லூயிஸ்பேர்க் கோட்டையைக் கைப்பற்றினர்.

1773 : வங்காளம் 
பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியின் 
முதன்மை மாகாணமானது.
உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டது.

1779 : ஸ்பெயின்  பெரிய பிரிட்டன் மீது போரை அறிவித்தது. 
ஜிப்ரால்ட்டர்
 மீதான போர் ஆரம்பமானது.

1819 : குஜராத் 
மாநிலம்,
 கச்சு என்ற இடத்தில் ஏற்பட்ட 
நிலநடுக்கத்தில் 
1,550 பேர் உயிரிழந்தனர்.

1846 : ஒன்பதாம் பயஸ் 
திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். இவரே நீண்ட காலம் (32 ஆண்டுகள்) பதவியில் இருந்த திருத்தந்தை 
ஆவார்.

1883 : இங்கிலாந்தில்
 விக்டோரியா நாடக அரங்கில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 183 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

1897 : ஹவாய் குடியரசை ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கும் ஒப்பந்தம் எழுதப்பட்டது.

1903 : ஃபோர்டு கார் நிறுவனம் 
நிறுவனமயப்
படுத்தப்பட்டது.

1903 : ருவால் அமுன்சென் தனது முதலாவது 
வடமேற்குப் பெருவழியின் 
கிழக்கு-மேற்கு நோக்கிய கடற்பயணத்தை 
ஒஸ்லோவில் இருந்து ஆரம்பித்தார்.

1911 : ஐபிஎம் 
நிறுவனம்
 நியூயார்க்கில் 
ஆரம்பிக்கப்பட்டது.

1911 : 772 கிராம் எடையுள்ள விண்கல்
 விஸ்கொன்சின் ,
கில்பேர்ன் நகரில் விழுந்தது.

1922 : அயர்லாந்து
பொறுப்பில் உள்ள மாநிலத்தில் நடைபெற்ற 
பொதுத்தேர்தலில் 
சின் பெயின் கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது.

1940 : 
லிதுவேனியாவில் 
கம்யூனிச அரசு ஆட்சிக்கு வந்தது.

1944 : ஐக்கிய அமெரிக்கா 14-வயது ஜார்ஜ் ஸ்டின்னி என்பவரை தூக்கிலிட்டது.

1948 : மலாயன் 
கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்கள் மூன்று பிரிட்டிஷ்
தோட்ட அதிகாரிகளைக் கொன்றதால் அங்கு 
அவசர காலச் சட்டம் கொண்டு
வரப்பட்டது.

1955 : 
அர்ஜெண்டினாவில் உவான் பெரோன் தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் பொருட்டு, அரசுக்கு ஆதரவான பேரணி ஒன்றின் மீது கடற்படையினர் குண்டுகள் வீசியதில் 364 பேர் கொல்லப்பட்டனர், 800 கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

1958 : 1956 ஹங்கேரியப் புரட்சியில் ஈடுபட்ட தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

1963 :
 வஸ்தோக் 6: 
ரஷ்யாவின் 
வேலன்டினா டெரெஷ்கோவா, 
விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

1976 : 
தென்னாபிரிக்காவில் ஸ்வெட்டாவில் 15,000 கறுப்பின மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 566 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

1997 :  அல்ஜீரியாவில் நடத்த தீவிரவாதத் தாக்குதலில் 50 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

2010 : பூட்டான் 
புகையிலைப் 
பயன்பாட்டை முற்றிலும் தடை செய்த முதலாவது நாடானது.

2012 : ஐக்கிய அமெரிக்க விமானப்படையின் 
தானியங்கி போயிங் எக்ஸ்-37 ராக்கெட் 
469-நாள் பயணத்திற்கு பிறகு பூமி திரும்பியது.

2012 : சீனா 
சென்சூ 9 
விண்கலத்தை 
லியு யங் என்ற பெண் உட்பட மூவருடன் வெற்றிகரமாக ஏவியது.

2013 : வட இந்திய மாநிலமான 
உத்தரகாண்டில் 
பெரும் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் பெரும் அழிவுகள் ஏற்பட்டன.

2014 : பாகிஸ்தான் வான்படை, வரிஜிஸ்தானில்
உள்ள‌ தெரிக்ஹீ தாலிபான் தீவிரவாதிகள் 27 பேரை குண்டு வீசி கொன்றது.

2015: பி.பி.சி முதல் முறையாக தொலைக்காட்சி தொடரை ஆரம்பித்தது.

2017: ஜெருசலேம் நகரில் டமஸ்க்கு கேட் அருகே நடைபெற்ற தாக்குதலில் 2
பாலஸ்தீன தீவிரவாதிகள்
கொல்லப்பட்டனர்.

2019 : சிரியா மற்றும் துருக்கி படைகளுக்கு நடுவில் பயங்கர சண்டை
நடைபெற்றது.
வரலாற்றில் இன்று.

பதிவு நாள்.

17 - 06 - 2024.

MONDAY.



திருவள்ளுவர் ஆண்டு 2055.

ஆனி 03-ந் தேதி.

திங்கட்கிழமை.


கிரிகோரியன் ஆண்டின் 168 ஆம் நாளாகும்.

நெட்டாண்டுகளில் 169 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 197 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்.

653 – திருத்தந்தை முதலாம் மார்ட்டின் கைது செய்யப்பட்டு தேசத்துரோகக் குற்றச்சாட்டுடன் கான்ஸ்டண்டினோபில் கொண்டு செல்லப்பட்டார்.

1244 – பாரிசில் பெருந்தொகையான யூத சமய கையெழுத்துப்படிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

1397 – டென்மார்க், சுவீடன், நோர்வே இணைந்த கல்மார் ஒன்றியம் டென்மார்க்கின் முதலாம் மார்கரெட்டின் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

1579 – சர் பிரான்சிஸ் டிரேக் நோவா அல்பியனில் (இன்றைய கலிபோர்னியா) தரையிறங்கி அதனை இங்கிலாந்துக்காக உரிமை கோரினார்.

1596 – இடச்சு நாடுகாண் பயணி வில்லியம் பாரென்ட்சு ஆர்க்டிக் தீவுக்கூட்டமான ஸ்பிட்சுபெர்கனைக் கண்டுபிடித்தார்.

1631 – மும்தாசு மகால் பிள்ளைப்பேற்றின் போது இறந்தார். அவரது கணவர் முகலாயப் பேரரசர் ஷாஜகான் அடுத்த 17 ஆண்டுகளுக்கு மும்தாசுக்கான நினைவுச்சின்னமான தாஜ்மகாலைக் கட்டுவதில் முனைந்தார்.

1767 – ஆங்கிலேயக் கப்பல் தலைவர் சாமுவேல் வாலிசு தாகித்தியைக் கண்டறிந்தார்.

1794 – ஆங்கிலோ-கோர்சிக்கன் இராச்சியம் அமைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் இது கலைந்தது.

1839 – அவாய் இராச்சியத்தில், ரோமன் கத்தோலிக்கர்கள் சுதந்திரமாக சமய வழிபாட்டில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.

1843 – நியூசிலாந்தில் மாவோரி பழங்குடியினருக்கும், பிரித்தானியக் குடியேறிகளுக்கும் இடையில் சமர்கள் இடம்பெற்றன.

1885 – விடுதலைச் சிலை நியூயார்க் துறைமுகத்தை வந்தடைந்தது.

1900 – மேற்கு கூட்டுப் படைகளும் சப்பானியப் படைகளும் இணைந்து சீனாவின் தியான்ஜின், தாக்கு கோட்டைகளைக் கைப்பற்றின.

1911 – செங்கோட்டை வாஞ்சிநாதன் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டு சாவடைந்தார்.

1929 – நியூசிலாந்து மர்ச்சிசன் நகரில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17 பேர் உயிரிழந்தனர்.

1933 – அமெரிக்காவின் கேன்சசு நகரில் கொள்ளைக்காரன் பிராங்க் நாஷ் என்பவனை விடுவிக்கும் பொருட்டு கொள்ளைக்காரர் நடத்திய தாக்குதலில் நான்கு எஃப்பிஐ பணியாளர்களும், பிராங்க் நாஷும் கொல்லப்பட்டனர்.

1939 – பிரான்சில் கடைசித் தடவையாக பகிரங்கமாகக் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இயூசன் வீடுமேன் என்பவர் இவ்வாறு கொல்லப்பட்டார்.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் லான்காஸ்ட்ரியா கப்பல் செருமானிய லூப்டுவாபே படையினரால் சென் நசேர் அருகில் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதில் குறைந்தது 3,000 பேர் உயிரிழந்தனர்.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படையினர் லிபியாவின் கப்பூசோ கோட்டையைத் தாக்கி இத்தாலியப் படையினரிடம் இருந்து கைப்பற்றினர்.

1940 – எசுத்தோனியா, லாத்வியா, லிதுவேனியா ஆகிய மூன்று பால்ட்டிக் நாடுகளும் சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டினுள் வந்தன. 1991 இலேயே இவை விடுதலை பெற்றன.

1944 – ஐசுலாந்து டென்மார்க்கிடம் இருந்து விடுதலையை அறிவித்து குடியரசானது.

1948 – டக்லசு டிசி-6 என்ற அமெரிக்க விமானம் பென்சில்வேனியா, கார்மேல் குன்றில் மோதியதில் அனைத்து 43 பயணிகளும் கொல்லப்பட்டனர்.

1953 – பனிப்போர்: பெர்லினில்கிழக்கு செருமனி அரசுக்கெதிராக தொழிலாளர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் சோவியத் படைகளினால் நசுக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

1960 – நே பெர்சு அமெரிக்கப் பழங்குடியினர் 1863 உடன்படிக்கைப்படி அவர்களது 7 மில்லியன் ஏக்கர் நிலம் குறைவாக மதிப்பீடு (4 சதம்/ஏக்கர்) செய்யப்பட்டு கொள்வனவு செய்யப்பட்டமைக்காக $4 மில்லியன் இழப்பீடு பெற்றனர்.

1963 – தெற்கு வியட்நாமில் பௌத்தர்கள் 2,000 பேர் வரை கலகம் செய்தனர். ஒருவர் கொல்லப்பட்டார்.

1967 – அணுகுண்டு சோதனை: சீனா தனது முதலாவது ஐதரசன் குண்டை வெற்றிகரமாகப் பரிசோதித்ததாக அறிவித்தது.

1985 – டிஸ்கவரி விண்ணோடத்தில் முதலாவது அராபிய விண்வெளிவீரர் (சுல்தான் பின் சல்மான் பின் அப்துலசீசு அல் சவுதி) விண்வெளிக்கு சென்றார்.

1991 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: தென்னாப்பிரிக்கர்கள் அனைவரும் பிறப்பின் போது இனவாரியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற சட்டத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்தது.

1992 – "கூட்டு ஆயுதக்குறைப்பு" ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், உருசிய அரசுத்தலைவர் போரிஸ் யெல்ட்சின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

2006 – மன்னார் பேசாலைப் பகுதியில் கடற்படையினருக்கும் புலிகளுக்கும் இடையிலான மோதலின் பின்னர் ஆறு பொதுமக்கள் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2015 – சார்லசுட்டன் படுகொலை: தென் கரொலைனாவில் ஆப்பிரிக்க மெதடித்த தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

2017 – மத்திய போர்த்துகல் பகுதியில்காட்டுத்தீ பரவியதில் 64 பேர் உயிரிழந்தனர், 204 பேர் காயமடைந்தனர்.


பிறப்புகள்.

1239 – முதலாம் எட்வர்டு, ஆங்கிலேய மன்னர் (இ. 1307)

1704 – ஜான் கே, ஆங்கிலேயப் பொறியியலாளர் (இ. 1780)

1800 – வில்லியம் பார்சன்சு, ஆங்கிலேய-அயர்லாந்து வானியலாளர், அரசியல்வாதி (இ. 1867)

1882 – இகோர் ஸ்ட்ராவின்ஸ்கி, உருசிய இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1971)

1883 – மயிலை சின்னத்தம்பிப் பிள்ளை ராஜா, தமிழக அரசியல்வாதி (இ. 1943)

1898 – மௌ. கொ. எசர், இடச்சு வரைகலைஞர் (இ. 1972)

1921 – மீ. ப. சோமு, தமிழக எழுத்தாளர் (இ. 1999)

1939 – இயன் கிருகரன், இலங்கை-செருமானியத் தொழிலதிபர்

1942 – முகம்மது அல்-பராதிய், நோபல் பரிசு பெற்ற எகிப்திய அரசியல்வாதி

1950 – ப. அருளி, தமிழக சொல்லாய்வறிஞர்

1973 – லியாண்டர் பயஸ், இந்திய டென்னிசு வீரர்

1976 – ஸ்காட் அட்கின்ஸ், ஆங்கிலேய நடிகர்

1980 – வீனஸ் வில்லியம்ஸ், அமெரிக்க டென்னிசு வீராங்கனை

1981 – ஷேன் வாட்சன், ஆத்திரேலியத் துடுப்பாளர்

1988 – ஸ்ரெபனி றைஸ், ஆத்திரேலிய நீச்சல் வீராங்கனை


இறப்புக்கள்.

656 – உதுமான், பாரசீக ஆட்சியாளர் (பி. 577)

676 – இரண்டாம் ஆதேயோதாத்துஸ் (திருத்தந்தை)

1631 – மும்தாசு மகால், சாஜகானின் மனைவி (பி. 1593)

1674 – ஜிஜாபாய், மராத்தியப் பேரரசரின் தாயார் (பி. 1598)

1839 – வில்லியம் பென்டிங்கு பிரபு, பிரித்தானிய இந்தியாவின் 14வது தலைமை ஆளுநர் (பி. 1774)

1911 – ஆஷ் துரை, திருநெல்வேலி மாவட்டத்தின் தற்காலிக ஆட்சியாளர் (பி. 1872)

1911 – வாஞ்சிநாதன், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1886)

1967 – செகவீர பாண்டியனார், தமிழகத் தமிழறிஞர் (இ. 1886)

1996 – மதுகர் தத்ரேய தேவ்ரஸ், இந்திய அரசியல்வாதி (பி. 1915)

2021 – கென்னத் கவுண்டா, சாம்பியாவின் 1-வது அரசுத்தலைவர் (பி. 1924)


சிறப்புநாள்.

தந்தையர் தினம் (எல் சால்வடோர், குவாத்தமாலா)

விடுதலை நாள் (ஐசுலாந்து, டென்மார்க்கிடம் இருந்து 1944)

ஆக்கிரமிப்பு நாள் (லாத்வியா)

பாலைவனமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட நாள்.
*ஜூன் 18*

*மாக்சிம் கார்க்கி அவர்களின் நினைவுநாள்*

மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (உருசியம்: Алексе́й Макси́мович Пешко́в; 28 மார்ச் [யூ.நா. 16 மார்ச்] 1868 – 18 சூன் 1936) உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி.

இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.

Prepared by
Covai women ICT_போதிமரம்
*ஜூன் 18*

*கக்கன் அவர்களின் பிறந்தநாள்*

பி. கக்கன் (P. Kakkan, 18 சூன் 1908 – 23 திசம்பர் 1981),[1] விடுதலைப் போராட்ட வீரர்,
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டித்) தலைவர்,
இன்னும் இதர பல பொறுப்புகளை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்த, அரசியல்வாதி ஆவார்.

Prepared by
Covai women ICT_போதிமரம்
வீராங்கனைகளைப் போற்றுவோம்!.

ஜான்சி இராணி இலட்சுமிபாய் நினைவு தினம் இன்று.
(நவம்பர் 19, 1828–ஜூன் 18, 1858)

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகப் போராடி, விடுதலைப் போராட்ட வீரர்களின் மத்தியில் சிறந்த வீராங்கனையாகவும், தைரியத்தின் மறுவடிவமாகவும் திகழ்ந்த இராணி இலட்சுமிபாய். 1857 ஆம் ஆண்டு இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடிகளில் ஒருவராவர்.

1828 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி காசியில் (இன்றைய வாரணாசியில்) மராத்தியர் குடும்பத்தைச் சேர்ந்த மௌரியபந்தர்-பகீரதிபாய் தம்பதியினருக்குப் மகளாகப் பிறந்தார் இராணி லட்சுமிபாய். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் மணிகர்ணிகா. குடும்ப உறுப்பினர்கள் அவரை அன்போடு ‘மனு’ என்று அழைத்தனர்.

தனது நான்காவது வயதிலேயே தாயை இழந்ததால், குடும்பப் பொறுப்புகளனைத்தும் அவரின் தந்தை மீது விழுந்தது. பள்ளிப்பாடம் படித்து கொண்டிருந்த சமயத்தில், குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் மற்றும் கத்தி சண்டை போன்ற தற்காப்புக் கலைகளையும் முறையாக பயிற்சி மேற்கொண்டு கற்றுக் கொண்டார்.

1842 ஆம் ஆண்டு, ஜான்சியின் மகாராஜாவாக இருந்த ‘இராஜா கங்காதர் ராவ் நிவால்கர்’ என்பவரை மணமுடித்தார். திருமணத்திற்கு பின், அவருக்கு ‘இலட்சுமிபாய்’ என்ற பெயர் வழங்கப்பட்டது. அவரது திருமண விழா, பழைய ஜான்சி நகரில் அமைந்துள்ள, விநாயகர் கோவிலில் நடைபெற்றது. 1851 ஆம் ஆண்டில் அவர்கள் இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான். துரதிருஷ்டவசமாக அந்த குழந்தை நான்கு மாதங்களில் இறந்து விட்டது.

1853 ஆம் ஆண்டில், மகாராஜா கங்காதர் ராவின் உடல்நிலை பலவீனமானதால், அவர்கள் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்தனர். இந்தத் தத்தெடுப்பின் மீது ஆங்கிலேயர்கள் பிரச்சனை எழுப்பக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்த இலட்சுமிபாய் அவர்கள், உள்ளூர் ஆங்கிலேய பிரதிநிதிகளைச் சாட்சியாக வைத்து இந்த தத்தெடுப்பை நடத்தினார்.

நவம்பர் 21 ஆம் தேதி, 1853 ஆம் ஆண்டு மகாராஜா கங்காதர் ராவ் இயற்கை எய்தினார். அந்த காலகட்டத்தில், பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ‘லார்ட் தல்ஹௌசீ’ என்பவர் ஆட்சியில் இருந்தார்.

இராணி லட்சுமிபாய் அவர்கள், தத்தெடுத்த குழந்தைக்குத் ‘தாமோதர் ராவ்’ என்று பெயரிட்டார். இந்துமத மரபின் படி, அக்குழந்தையே இலட்சுமிபாய் அவர்களின் சட்ட வாரிசாக இருந்தது. இருப்பினும், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் கிழக்கிந்திய நிறுவனத்தின் அவகாசியிலிக் கொள்கையின்படி, தத்துப்பிள்ளையை அதிகாரபூர்வமாக சட்ட வாரிசாக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். மறுப்பு கோட்பாட்டின் (Doctrine of Lapse) படி, லார்ட் தல்ஹௌசீ அவர்கள் ஜான்சி அரசைப் பறிமுதல் செய்ய முடிவுசெய்தார்.

இராணி இலட்சுமிபாய் அவர்கள், ஒரு ஆங்கிலேய வழக்கறிஞரிடம் சென்று ஆலோசனை கோரினார். அதன்பிறகு, அவர் இலண்டனில் அவரது வழக்கிற்கான ஒரு முறையீட்டை மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. ஆங்கிலேய அதிகாரிகள், இலட்சுமிபாய் அவர்களின் அரசு நகைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், 1854 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ராணி லட்சுமிபாய்க்கு 60000 ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து ஜான்சிக் கோட்டையை விட்டு வெளியேறிச் செல்லுமாறு ஒரு ஆணை நிறைவேற்றப்பட்டதால், ராணி இலக்ஷ்மி பாய் அவர்கள், ஜான்சியிலுள்ள ‘ராணி மஹாலுக்கு’ சென்றார். அந்நேரத்திலும், இலட்சுமிபாய் அவர்கள், ஜான்சி அரசைப் பாதுகாப்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.

இராணி இலட்சுமிபாய் அவர்களை ஜான்சியை விட்டு வெளியேறச் சொல்லி பிறப்பித்த ஆணை, ஜான்சியை எழுச்சியின் இடமாக மாற்றியது. ஜான்சி இராணி அவர்கள் தனது நிலையை வலுப்படுத்தத் தொடங்கினார். பிறரது ஆதரவை நாடிய அவர், அவரது ஆதரவாளர்களைக் கொண்டு ஒரு தொண்டர் படையை உருவாக்கினார். அவர் உருவாக்கிய இராணுவத்தில் ஆண்கள் மட்டும் முக்கிய பங்கு வகிக்கவில்லை, அதில் பெண்களும் கூட தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது நடந்த கிளர்ச்சியில்,இராணி இலட்சுமிபாய், அவரது தளபதிகளுடன் இணைந்து போர் புரிந்தார்.

1857 ஆம் ஆண்டு செப்டம்பரிலிருந்து அக்டோபர் வரை, இலட்சுமிபாய் அவர்கள் அவரது அண்டை நாடுகளான ஓர்ச்சா மற்றும் டாடியாவை படையெடுத்து, அந்நாட்டுப் படைகளின் மூலமாக ஜான்சியைப் பாதுகாத்தார்.

ஆயினும் 1857ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி இந்தியக் கிளர்ச்சி மீரட்டில் ஆரம்பமாகியது. போர் வீரர்களுக்குப் புதிதாக வழங்கப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளில் பசு மற்றும் பன்றியினதும் கொழுப்புப் பூசப்பட்டதாகப் பரவிய வதந்தியையடுத்தே இக்கிளர்ச்சி ஏற்பட்டுப் பரவத் தொடங்கியது. இச்சந்தர்ப்பத்தில், ஆங்கிலேயர்கள் இந்தியக் கிளர்ச்சி சம்பந்தமாகவே கவனம் செலுத்தினர். ஜான்சி பற்றி அதிகக் கவனம் செலுத்தவில்லை. இதன் காரணமாக,இராணி இலட்சுமிபாய் தனியாகவே ஜான்சியை ஆட்சி செய்தார்.
வடமத்திய இந்தியாவிலே ஜான்சி அமைதியான பிரதேசமாக இருந்தமையைக் காட்டுவதற்காகவும் ஜான்சி எந்த விதமான முற்றுகையை எதிர்கொள்வதற்கான அபாயத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதனைத் தெளிவுபடுத்துவதற்காகவும் இராணி இலட்சுமிபாயால் ஹால்டி குங்குமப் பண்டிகை ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டாடப்பட்டது.

ஆனாலும் இராணி இலட்சுமிபாய் ஆங்கிலேயர்களை எதிர்க்கக்கூடும் என்ற அச்சம் ஆங்கிலேயர்களிடம் இருக்கவே செய்தது. இதனால், ஆங்கிலேயர்கள் 1857ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி ஜோக்கன் பாக்கில் ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரிகளைப் படுகொலை செய்ததில் இராணி இலட்சுமிபாய்க்கும் பங்கு உள்ளதாகக் கூறினர். பொதுமக்களும் விவசாயிகளும் இராணி இலட்சுமிபாய் மீது வைத்திருந்த மதிப்பைச் சீர்குலைக்கவே இவ்வாறு செய்தனர்.

இதனையே காரணமாக வைத்து, 1858ஆம் ஆண்டு மார்ச்சு 23 ஆம் தேதி ஹீ ரோஸ் தலைமையில் ஆங்கிலேயர்களின் படை ஒன்று ஜான்சியைக் கைப்பற்றுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஜான்சியின் படைகளுக்கு உதவி செய்வதற்காகத் தாந்தியா தோபேயின் தலைமையில் 20000 பேரைக் கொண்ட படை அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் அப்படை மார்ச்சு 31ஆம் தேதி ஆங்கிலேயர்களின் படையுடன் இணைந்த காரணத்தினால் தாந்தியா தோபேயினால் ஜான்சி இராணிக்கு உதவ முடியாமல் போனது.ஆனாலும் சான்சி இராணி ஆங்கியேர்களிடம் அடிபணிய மறுத்துத் தமது படைகளுடன் இணைந்து கடுமையாகப் போர் புரிந்தார். தனது நாட்டை விட்டுக் கொடுக்க மறுத்த ஜான்சி இராணி இலட்சுமிபாய், தனது படை வீரர்களை முன்னின்று வழி நடத்திச் சென்று பெரும் ஆற்றலுடனும் மிகுந்த துணிச்சலுடனும் போர் புரிந்தார்.

ஜான்சிக்கும், பிரிட்டிஷ் இராணுவத்திற்குமான மோதல் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தது. இறுதியாக, இரண்டே வாரங்களில் ஆங்கிலேய அரசு ஜான்சி நகரத்தைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. எனினும், அவர் ஒரு ஆண்மகன் வேடம் பூண்டிருந்ததால், அவரை யாரும் அடையாளம் காணவில்லை. தனது வளர்ப்பு மகனை மடியில் ஏந்தியபடியே தப்பித்தார். கடுங்கோபத்திலிருந்த ஆங்கிலேய படை, அரண்மனையைச் சூறையாடிப் பொருட்களைக் கொள்ளையடித்தனர்.

ஆங்கிலேயர் பிடியிலிருந்து தப்பித்த இலட்சுமிபாய் அவர்கள், கல்பியில் தஞ்சமடைந்தார். அங்கு அவர், 1857 ஆம் ஆண்டில் நடந்த கிளர்ச்சியில் பங்கேற்ற ஒரு மாவீரரான ‘தந்தியா டோப்’ என்பவரைச் சந்தித்தார். ஆங்கிலேயர்களின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. ஆங்கிலேயப் படையை எதிர்த்து, கோட்டாகி சேராய் என்ற இடத்தில் ஜான்சிராணி போரிட்டார். ஆனால், ஆங்கிலேயர்களின் நவீன போர்க்கருவிகளை எதிர்க்க முடியாமல், 18 ஜூன் 1858 ஆம் ஆண்டு ஜான்சி ராணி அவர்கள் இறந்தார்.

அவரது மரணத்திற்குப் பின், மூன்று நாட்களில், குவாலியரை ஆங்கிலேய அரசு கைப்பற்றியது. இராணி லட்சுமிபாய் அவர்களின் வீரமும், மகத்தான முயற்சியும், அவரை ‘இந்திய தேசிய இயக்கத்தின் உருவம்’ என்று குறிப்பிட வைத்தது. தனது வளர்ப்பு மகனான தாமோதரைப் பாதுகாப்பதே இராணி இலட்சுமிபாய் அவர்களின் நோக்கமாக இருந்தது. அவரது வீர வரலாறு எதிர்வரும் சுதந்திர போராட்ட வீரத் தலைமுறைகளுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக ஆனது என்றால் அது மிகையாகாது.

வெள்ளையர் எதிர்ப்புக்காக நேதாஜி பெண்கள் படை உருவாக்கியபோது அதற்கு "ஜான்சிராணி ரெஜிமெண்ட்" எனப் பெயரிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
*ஜீன் 19*

*ஆங் சான் சூச்சி அவர்களின் பிறந்தநாள்*

ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi, பிறப்பு: சூன் 19, 1945) என்பவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் மக்களாட்சி ஆதரவாளரும் ஆவார்.

இவர் மியான்மரின் அரச ஆலோசகராக பதவி வகிக்கிறார்.

இவர் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு என்ற கட்சியின் தலைவராக உள்ளார்.

தன் நாட்டில் மக்களாட்சியை ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார்.

1991 இல் அமைதிக்கான நோபல் பரிசினை ஆங்சான் சூச்சி பெற்றார்.

Prepared by
Covai women ICT_போதிமரம்
*ஜூன் 20*

*கவிஞர் சுரதா அவர்களின் நினைவுநாள்*

சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார்.

கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார்.

தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர்.

செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர்.

இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.

Prepared by
Covai women ICT_போதிமரம்
வரலாற்றில் இன்று.



20 - 06 - 2024.

THURSDAY.



திருவள்ளுவர் ஆண்டு 2055.

ஆனி 06-ந் தேதி.

வியாழக்கிழமை.


கிரிகோரியன் ஆண்டின் 171 ஆம் நாளாகும்.


நெட்டாண்டுகளில் 172 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 194 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்.

1248 – ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் அரச அங்கீகாரத்தைப் பெற்றது.

1631 – அயர்லாந்தில் பால்ட்டிமோர் நகரம் அல்சீரியாவின் கடற்கொள்ளையாளர்களால் சூறையாடப்பட்டது.

1685 – மொன்மூத் இளவரசர் ஜேம்சு ஸ்கொட் இங்கிலாந்தின் அரசனாகத் தன்னைத் தானே அறிவித்தார்.

1756 – பிரித்தானியப் படைவீரர்கள் கல்கத்தாவின் வில்லியம் கோட்டைக்கு அருகில் நவாபுகளினால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

1819 – அமெரிக்காவின் சவன்னா என்ற கப்பல் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரை அடைந்தது. அத்திலாந்திக்கைக் கடந்த முதலாவது நீராவிக் கப்பல் இதுவாகும்.

1837 – விக்டோரியா பிரித்தானியாவின் பேரரசி ஆனார்.

1840 – சாமுவெல் மோர்சு தந்திக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

1858 – இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் முடிவுக்கு வந்தது.

1862 – உருமேனியாவின் பிரதமர் பார்பு கட்டார்ஜியூ படுகொலை செய்யப்பட்டார்.

1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேற்கு வர்ஜீனியா 35வது அமெரிக்க மாநிலமாக இணைந்தது.

1877 – அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதலாவது வர்த்தக முறைத் தொலைபேசி சேவையை கனடா, ஆமில்ட்டனில் ஆரம்பித்தார்.

1887 – சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் மும்பையில் திறக்கப்பட்டது.

1900 – எதுவார்த் தோல் என்பவர் தலைமையிலான 20-பேர் கொண்ட குழு வடமுனைக்கான ஆய்வுப் பயணத்தை உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் இருந்து ஆரம்பித்தது. இக்குழு திரும்பி வரவேயில்லை.

1921 – சென்னையில் பக்கிங்காம், கர்னாட்டிக் ஆலைத் தொழிலாளர்கள் நான்கு-மாதப் பணி நிறுத்தத்தை ஆரம்பித்தனர்.

1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி பிரான்சை ஊடுருவியது, ஆனால் இது தோல்வியில் முடிவடைந்தது.

1942 – பெரும் இன அழிப்பு: கசிமியெர்சு பைச்சோவ்ஸ்கி மற்றும் மூவர் சுத்ஸ்டாப்பெல் காவலர்களாக உடையணிந்து அவுசுவித்சு வதைமுகாமில் இருந்து தப்பிச் சென்றனர்.

1943 – அமெரிக்காவில் டிட்ராயிட் மாநிலத்தில் இனக் கலவரம் ஆரம்பித்தது. மூன்று நாட்கள் நீடித்த இக்கலவரத்தில் 34 பேர் கொல்லப்பட்டனர்.

1944 – சோதனை ஏவுகணை எம்.டபிள்யூ 18014 வி-2 176 கிமீ உயரத்தை அடைந்து வெளியுலகிற்குச் சென்ற முதலாவது மனிதனால் செய்யப்பட்ட பொருள் என்ற சாதனை படைத்தது.

1948 – கூட்டுப்படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த மேற்கு செருமனியில் இடாய்ச்சு மார்க் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1955 – 11-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் மிக நீண்ட கதிரவ மறைப்பு இலங்கை உட்படப் பல நாடுகளில் அவதானிக்கப்பட்டது. மொத்தம் 7 நிமிடங்கள் 7.74 செக்கன்களுக்கு இது நீடித்தது.

1956 – வெனிசுவேலாவைச் சேர்ந்த லீனியா 253 விமானம் நியூ செர்சி, அசுபரி பார்க் அருகே அத்திலாந்திங்குப் பெருங்கடலில் மூழ்கியதில் 74 பேர் உயிரிழந்தனர்.

1959 – அரிதான சூன் மாத வெப்ப மண்டலச் சூறாவளி கனடாவில் சென் லாரன்சு குடாவைத் தாக்கியதில் 35 பேர் உயிரிழந்தனர்.

1960 – மாலி கூட்டமைப்பு பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது. இது பின்னர் மாலி, செனிகல் என இரண்டாகப் பிரிந்தது.

1973 – அர்கெந்தீனா, புவெனஸ் ஐரிஸ் நகரில் இடதுசாரிகள் மீது குறிசுடுநர்கள் சுட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர், 300 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

1990 – கல்முனைப் படுகொலைகள்: இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனையில் இலங்கைப் படைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1990 – 5261 யுரேக்கா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.

1990 – ஈரானின் வடக்கே 7.4 Mw நிலநடுக்கம் ஏற்பட்டதில் 35,000–50,000 வரையானோர் உயிரிழந்தனர்.

1991 – செருமனியின் தலைநகரை பான் நகரில் இருந்து பெர்லினுக்கு மாற்றுவதற்கு ஆதரவாக செருமன் நாடாளுமன்றம் வாக்களித்தது.

1994 – ஈரானில் இமாம் ரேசா மதத்தலத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர், 300 பேர் வரை காயமடைந்தனர்.

2003 – விக்கிமீடியா நிறுவனம் புளோரிடாவின் சென். பீட்டர்சுபர்க் நகரில் ஆரம்பமானது.[1]


பிறப்புகள்.

1760 – ரிச்சர்டு வெல்லசுலி, பிரித்தானிய அரசியல்வாதி, குடியேற்றத் திட்ட நிர்வாகி (இ. 1842)

1861 – பிரெடரிக் கௌலாண்ட் ஆப்கின்சு, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய உயிரிவேதியியலாளர் (இ. 1947)

1884 – மேரி ஆர். கால்வெர்ட், அமெரிக்க வானியலாளர் (இ. 1974)

1927 – கே. கே. பாலகிருஷ்ணன், கேரள அரசியல்வாதி (இ. 2000)

1939 – ரமாகாந்த் தேசாய், இந்தியத் துடுப்பாளர் (இ. 1998)

1941 – சிலோன் சின்னையா, இலங்கைத் தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2011)
1949 – கோட்டாபய ராஜபக்ச, இலங்கையின் 8-வது அரசுத்தலைவர்

1952 – விக்ரம் சேத், இந்திய எழுத்தாளர், கவிஞர்

1954 – சுந்தரம் கரிவரதன், இந்தியத் தானுந்து விளையாட்டு வீரர் (இ. 1995)

1967 – நிக்கோல் கிட்மேன், அமெரிக்க-ஆத்திரேலிய நடிகை

1970 – கானா பாலா, தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்

1971 – ஜோஷ் லுகாஸ், அமெரிக்க நடிகர்

1974 – லெனின் எம். சிவம், இலங்கை-கனடிய இயக்குநர், தயாரிப்பாளர்

1978 – பிராங்கு லம்பார்டு, ஆங்கிலேயக் கால்பந்து வீரர்

1984 – நீத்து சந்திரா, இந்திய நடிகை


இறப்புக்கள்.

656 – உதுமான், அரேபிய கலிபா (பி. 577)

1617 – முதலாம் இராச உடையார், மைசூர் மன்னர் (பி. 1552)

1837 – நான்காம் வில்லியம், ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் (பி. 1765)

1966 – ஜார்ஜஸ் இலமேத்ர, பெல்ஜிய இயற்பியலாளர், கணிதவியலாளர், மதகுரு (பி. 1894)

1971 – மகாகவி உருத்திரமூர்த்தி, ஈழத்துக் கவிஞர் (பி. 1927)

2005 – ஜாக் கில்பி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்., பொறியியலாளர் (பி. 1923)

2006 – சுரதா, தமிழகக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், எழுத்தாளர் (பி. 1921)

2015 – ஆர். பிச்சுமணி ஐயர், தமிழக வீணை இசைக்கலைஞர் (பி. 1920)


சிறப்புநாள்.

உலக அகதி நாள்

மாவீரர் நாள் (எரித்திரியா)
*ஜூன் 21*

*உலக இசை நாள்*

உலக இசை நாள் (World Music Day,[1] Fête de la Musique, Music Day,[2] Make Music Day[3][4] என்பது ஆண்டுதோறும் சூன் 21 அன்று நிகழ்த்தப்படும் இசைக் கொண்டாட்டங்கள் ஆகும்.

இந்நாளில் ஒரு நகரம் அல்லது நாட்டின் குடிமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் அல்லது பொது இடங்கள் அல்லது பூங்காக்களில் இசைக்கருவிகளை வாசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

இலவச இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

அங்கு இசைக்கலைஞர்கள் வேடிக்கையாக கட்டணம் இன்றி பாடி அல்லது இசைக்கருவிகளை இசைத்து மகிழ்கிறார்கள்.

Prepared by
Covai women ICT_போதிமரம்
*பன்னாட்டு யோகா நாள்*

பன்னாட்டு யோகா நாள் (International Yoga Day) ஆண்டுதோறும் சூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.

ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில்

சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார்.

சூன் 21 ஆம் நாளை அவர் இதற்காகப் பரிந்துரைத்திருந்தார்.

Prepared by
Covai women ICT_போதிமரம்
வரலாற்றில் இன்று.




21 - 06 - 2024.


FRIDAY.



திருவள்ளுவர் ஆண்டு 2055.

ஆனி 07-ந் தேதி.

வெள்ளிக்கிழமை.


கிரிகோரியன் ஆண்டின் 172 ஆம் நாளாகும்.


நெட்டாண்டுகளில் 173 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 193 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்.

1307 – குலுக் கான் மங்கோலியர்களின் ககான் (பேரரசர்) ஆகவும் யுவான்களின் அரசராகவும் முடி சூடினார்.

1529 – பிரெஞ்சுப் படையினர் வடக்கு இத்தாலியில் இருந்து எசுப்பானியர்களால் வெளியேற்றப்பட்டனர்.

1621 – முப்பதாண்டுப் போர்: பிராகா நகரில் 27 செக் உயர்குடியினர் தூக்கிலிடப்பட்டனர்.

1734 – மொண்ட்ரியால் நகரை தீயிட்டுக் கொழுத்தி பெரும் சேதத்தை உண்டுபண்ணியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மரீ-யோசப் அஞ்செலீக் என்ற அடிமைப் பெண் தூக்கிலிடப்பட்டார்.

1736 – இலங்கையில் உள்ளூர் மொழிகளில் நூல்கள் அச்சிட அச்சியந்திரசாலையை ஒல்லாந்தர் நிறுவினர்.[1]

1749 – ஹாலிஃபாக்ஸ் அமைக்கப்பட்டது.

1788 – நியூ ஹாம்சயர் ஐக்கிய அமெரிக்காவின் 9வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1791 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயியும் அவரது குடும்பத்தினரும் பாரிசை விட்டு வெளியேறினர்.

1898 – அமெரிக்கா எசுப்பானியாவிடம் இருந்து குவாமைக் கைப்பற்றியது.

1900 – பேரரசி டோவாகர் சிக்சியின் ஆணைப்படி அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்சு, சப்பான் ஆகியவை மீது சீனா போரை அறிவித்தது.

1919 – கனடா, வினிப்பெக் நகரில் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் சுட்டதில் இருவர் உயிரிழந்தனர்.

1919 – இசுக்கொட்லாந்து, ஓர்க்னியில் செருமானியக் கப்பல் ஒன்றை அதன் கப்டன் லூர்விக் வொன் ரியூட்டர் வேண்டுமென்றே மூழ்கடித்ததில் ஒன்பது மாலுமிகள் உயிரிழந்தனர். இதுவே முதலாம் உலகப் போரின் கடைசி உயிரிழப்புகளாகும்.

1929 – மெக்சிக்கோவில் கிறிஸ்தேரோ போர் முடிவுக்கு வந்தது.

1930 – பிரான்சில் இராணுவத்துக்கு கட்டாய ஆட்சேர்ப்பு ஓராண்டுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

1940 – வடமேற்குப் பெருவழி ஊடான மேற்கிலிருந்து கிழக்குக்கான முதலாவது வெற்றிகரமான கடற்பயணம் பிரிட்டிசு கொலம்பியா, வான்கூவரில் இருந்து ஆரம்பமாகியது.

1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி பிரான்சு மீது நடத்திய முற்றுகை தோல்வியடைந்தது.

1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய நீர்மூழ்கி ஒன்று அமெரிக்கா, ஓரிகன் மாநிலத்தில் கொலம்பியா ஆற்றில் இருந்து குண்டுகளை ஏவியது.

1942 – இரண்டாம் உலகப் போர்: துப்ருக் இத்தாலிய, செருமனியப் படையினரிடம் வீழ்ந்தது.

1945 – இரண்டாம் உலகப் போர்: ஒகினவா சண்டை முடிவுக்கு வந்தது.

1963 – கருதினால் கியோவன்னி பத்தீசுத்தா மொண்டினி ஆறாம் பவுல் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1964 – அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில், குடிசார் இயக்க உரிமைத் தொழிலாளர்கள் மூவர் கு கிளக்சு கிளான் இயக்க உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1990 – மன்னாரில் கொண்டச்சி இராணுவ முகாம் விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.

2000 – ஐக்கிய இராச்சியத்தில் நிறைவேற்றப்பட்ட தற்பால்சேர்க்கையை 'ஊக்குவிப்பது' சட்டவிரோதமானது என்ற சட்டமூலம் இசுக்கொட்லாந்தில் 99:17 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

2002 – உலக சுகாதார நிறுவனம் ஐரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக அறிவித்தது.

2004 – முதலாவது தனியார் விண்ணூர்தி ஸ்பேஸ்சிப்வன் மனித விண்வெளிப் பறப்பை மேற்கொண்டது.

2006 – புளூட்டோவின் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு துணைக்கோள்களுக்கு நிக்ஸ், ஹைட்ரா எனப் பெயரிடப்பட்டது.

2009 – கிறீன்லாந்து தன்னாட்சி பெற்றது.

2012 – 200 ஆப்கானிய ஏதிலிகளைக் கொண்ட படகு இந்தியப் பெருங்கடலில் சாவகத்திற்கும்கிறிஸ்துமசு தீவுக்கும் இடையில் மூழ்கியதில் 17 பேர் உயிரிழந்தனர், 70 பேர் காணாமல் போயினர்.


பிறப்புகள்.

598 – முதலாம் மார்ட்டின் (திருத்தந்தை) (இ. 656)

1863 – மேக்சு வுல்ஃப், செருமானிய வானியலாளர் (இ. 1932)

1870 – கிளாரா இம்மெர்வார், போலந்து-செருமானிய வேதியியலாளர் (இ. 1915)

1880 – ஆர்னல்டு கெசெல், அமெரிக்க மருத்துவர், உளவியலாளர் (இ. 1961)

1905 – இழான் பவுல் சார்த்ர, பிரான்சிய மெய்யியலாளர், நூலாசிரியர் (இ. 1980)

1916 – எர்பெர்ட் ஃபிரீடுமேன், அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (இ. 2000)

1925 – வே. ஆனைமுத்து, பெரியாரிய அறிஞர் (இ. 2021)

1926 – கான்ராடு ஹால், பிரான்சிய-அமெரிக்க ஒளிப்பதிவாளர் (இ. 2003)

1927 – பீ. ஜீ. வர்கீஸ், இந்திய இதழியலாளர், எழுத்தாளர் (இ. 2014)

1947 – சீரீன் இபாதி, நோபல் பரிசு பெற்ற ஈரானிய நீதிபதி, செயற்பாட்டாளர்

1953 – பெனசீர் பூட்டோ, பாக்கித்தானின் 11வது பிரதமர் (இ. 2007)

1955 – மிச்செல் பிளாட்டினி, பிரான்சிய துடுப்பாட்ட வீரர்
1961 – ஜோக்கோ விடோடோ, இந்தோனேசியாவின் 7வது அரசுத்தலைவர்

1965 – யங் லிவே, சீன விண்வெளிவீரர்

1965 – லானா வச்சோவ்சுக்கி, அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர்

1967 – யிங்லக் சினாவத்ரா, தாய்லாந்தின் 28வது பிரதமர்

1979 – கிறிஸ் பிராட், அமெரிக்க நடிகர்

1982 – இளவரசர் வில்லியம், கேம்பிரிட்ச் கோமகன்

1982 – சிக்கில் குருசரண், தமிழக கருநாடக இசைப் பாடகர்

1983 – எட்வேர்ட் சுனோவ்டன், அமெரிக்க செயற்பாட்டாளர்


இறப்புக்கள்.

1377 – மூன்றாம் எட்வர்டு, இங்கிலாந்தின் மன்னர் (பி. 1312)

1527 – நிக்கோலோ மாக்கியவெல்லி, இத்தாலிய வரலாற்றாளர் (பி. 1469)

1591 – அலோசியுஸ் கொன்சாகா, இத்தாலியப் புனிதர் (பி. 1568)

1631 – யோன் சிமித், ஆங்கிலேயத் தேடலறிஞர் (பி. 1580)

1857 – லூயி ஜாக் தெனார், பிரான்சிய வேதியியலாளர் (பி. 1777)

1874 – ஆண்டர்ஸ் யோனாஸ் ஆங்ஸ்டிராம், சுவீடன் இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1814)

1940 – கேசவ பலிராம் ஹெட்கேவர், இந்துத்துவவாதி (பி. 1889)

1954 – கிடியொன் சண்டுபெக்கு, பல்லிணைவுப் பட்டிகையை உருவாக்கிய சுவீடன்-அமெரிக்கப் பொறியியலாளர் (பி. 1880)

1957 – ஜொகன்னஸ் ஸ்டார்க், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1874)

1970 – சுகர்ணோ, இந்தோனேசியாவின் 1வது அரசுத்தலைவர் (பி. 1901)

1994 – வில்லியம் வில்சன் மார்கன், அமெரிக்க வானியலாளர், வானியற்பியலாளர் (பி. 1906)

2001 – கே. வி. மகாதேவன், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1918)


சிறப்புநாள்.

தந்தையர் தினம் (எகிப்து, லெபனான்,ஜோர்தான், சிரியா, உகாண்டாபாக்கித்தான், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா)

பன்னாட்டு யோகா நாள்

உலக இசை நாள்

உலக மனிதநேய நாள்

உலக நீராய்வியல் நாள்

தேசிய பழங்குடிகள் நாள் (கனடா)
*ஜூன் 23*

*கிஜூபாய் பதேக்கா அவர்களின் நினைவுநாள்*

கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) சித்தல் நகரில் பிறந்த இவர்,

இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார்.
இவர் “மீசை உள்ள அம்மா“ எனவும் அறியப்படுகிறார்.

முதலில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.

1923 – ல் அவருடைய மகன் பிறந்த பிறகு, அவர் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியில் தனது ஆர்வத்தை செலுத்தினார்.

1920-ல் பதேகா “ பால மந்திர்” என்னும் முன் தொடக்கப் பள்ளியை  நிறுவினார்.

“ பகல் கனவு“ போன்ற பல கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளார்.

Prepared by
Covai women ICT_போதிமரம்
வரலாற்றில் இன்று.



23 - 06 - 2024.

SUNDAY.



திருவள்ளுவர் ஆண்டு 2055.

ஆனி 09-ந் தேதி.

ஞாயிற்றுக்கிழமை.

கிரிகோரியன் ஆண்டின் 174 ஆம் நாளாகும்.


நெட்டாண்டுகளில் 175 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 191 நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்.

1305 – பிளெமிசு, பிரான்சியருக்கிடயே அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.

1532 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியும் பிரான்சின் முதலாம் பிரான்சிசும் புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசுக்கு எதிராக இரகசிய உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டனர்.

1565 – மால்ட்டா மீதான படையெடுப்பின் போது உதுமானியக் கடற்படைத் தளபதி திராகுத் இறந்தார்.

1594 – அடிமைகளையும் பெறுமதியான பொருட்களையும் ஏற்றுச் சென்ற போர்த்துகல்லின் சிங்கோ சாகாசு கப்பல் ஆங்கிலேயக் கப்பல்களினால் தாக்கப்பட்டதில் 687 பேர் கொல்லப்பட்டனர்.[1]

1611 – என்றி அட்சனின் நான்காவது பயணத்தின் போது என்றி, அவரது மகன், மற்றும் ஏழு மாலுமிகளும் அட்சன் விரிகுடாவில் தரையிறங்கினர். இவர்கள் பின்னர் காணாமல் போயினர்.

1658 – இலங்கையில் போர்த்துக்கேயரின் கடைசிப்பிடியாக இருந்த யாழ்ப்பாணக் கோட்டையை டச்சுக்காரர் கைப்பற்றினர்.[2]

1713 – அகாடியாவின் பிரெஞ்சுக் குடிகள் பிரித்தானியாவுடன் பற்றுறுதியை ஏற்படுத்த ஓராண்டு காலம் தவணை கொடுக்கப்பட்டது. இல்லையேல் அவர்கள் நோவா ஸ்கோசியாவை விட்டு வெளியேற வற்புறுத்தப்பட்டனர்.

1757 – பிளாசி சண்டை: ராபர்ட் கிளைவ் தலைமையிலான 3,000 படையினர் சிராச் உத் தவ்லா தலைமையிலான 50,000 இந்தியப் படையினரைத் தோற்கடித்தனர்.

1760 – ஏழாண்டுப் போர்: லாண்டிசட் சமரில் ஆஸ்திரியா புருசியாவைத் தோற்கடித்தது.

1794 – உருசியாவின் இரண்டாம் கத்தரீன் கீவ் நகரில் யூதர்கள் குடியேற அனுமதி வழங்கினார்.

1865 – இலங்கையில் இராணுவ செலவீனங்களை விசாரிக்கும் பொருட்டு அரச ஆணைக்குழு அமைக்கப்பட்டது.[3]

1868 – தட்டச்சுக் கருவி கண்டுபிடிப்புக்கான காப்புரிமத்தை கிறித்தோபர் சோலசு பெற்றார்.

1894 – பியர் தெ குபர்த்தென்னின் முன்னெடுப்பில் பன்னாட்டு ஒலிம்பிக் குழு பாரிசில் அமைக்கப்பட்டது.

1940 – இட்லர் மூன்று மணித்தியால சுற்றுப் பயணமாக பாரிசு சென்றார். ஒரேயொரு தடவை மட்டுமே அவர் பாரிசு சென்றார்.

1940 – என்றி லார்சன் வடமேற்குப் பெருவழியால் மேற்கில் இருந்து கிழக்கு வரையான பயணத்தை வான்கூவரில் இருந்து ஆரம்பித்தார்.[4]

1941 – இலித்துவேனிய செயற்பாட்டு முன்னணி சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்து, இடைக்கால அரசை அமைத்தது.

1942 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் போர் வானூர்தி வேல்சில் தவறுதலாகத் தரையிறங்கிய போது கைப்பற்றப்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: முதன் முதலாக அவுசுவித்சு வதை முகாமில் நச்சு வாயு அறையில் சேர்ப்பதற்காக முதல் தொகுதி யூதர்கள் பாரிசில் இருந்து தொடருந்தில் அனுப்பப்பட்டனர்.

1946 – கனடாவின் வான்கூவர் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

1960 – பத்திரிசு லுமும்பா கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் ஆனார்.

1961 – பனிப்போர்: அண்டார்க்டிக்காவில் இராணுவ நடவடிக்கைகளைத் தடை செய்யும் அண்டார்டிக்கா ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.

1967 – பனிப்போர்: அமெரிக்க அரசுத்தலைவர் லின்டன் பி. ஜான்சன் சோவியத் பிரதமர் அலெக்சி கொசிஜினை நியூ செர்சியில் சந்தித்தார்.

1980 – இந்திய அரசியல்வாதி சஞ்சய் காந்தி விமான விபத்தில் உயிரிழந்தார்.

1985 – அயர்லாந்தில் அட்லாண்டிக் கடலின் மேல் 9500 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த இந்தியாவின் போயிங் விமானத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அதில் பயணம் செய்த 329 பேரும் கொல்லப்பட்டனர்.

2001 – பெருவின் தெற்கே இடம்பெற்ற 8.4 Mw நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையால் 74 பேர் உயிரிழந்தனர்.

2010 – உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் ஆரம்பமானது.

2016 – ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதற்கு ஆதரவாக அந்நாட்டு மக்கள் 52 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.

2017 – பாக்கித்தானில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் 96 பேர் கொல்லப்பட்டனர்.


பிறப்புகள்.

1616 – ஷா ஷுஜா, முகலாய இளவரசர் (இ. 1661)

1668 – கியாம்பாட்டிஸ்டா விக்கோ, இத்தாலிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1744)

1876 – க. பாலசிங்கம், இலங்கை அரசியல்வாதி (இ. 1952)

1877 – நார்மன் பிரிட்சர்டு, இந்திய-ஆங்கிலேய நடிகர் (இ. 1929)

1889 – அன்னா அக்மதோவா, உக்ரைனிய-உருசியக் கவிஞர் (இ. 1966)

1894 – எட்டாம் எட்வர்டு, ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் (இ. 1972)

1906 – திரிபுவன் வீர விக்ரம் ஷா, நேபாள மன்னர் (இ. 1955)

1912 – அலன் டூரிங், ஆங்கிலேயக் கணிதவியலாளர், கணினி அறிவியலாளர் (இ. 1954)

1922 – ராஜகோபால தொண்டைமான், புதுக்கோட்டை சமத்தான அரசர் (இ. 1997)
1925 – ஜான் ஷெப்பர்ட் பேரோன், தன்னியக்க காசளிப்பு இயந்திரத்தைக் கண்டுபிடித்த பிரித்தானியர் (இ. 2010)

1924 – ரணசிங்க பிரேமதாசா, இலங்கை அரசுத்தலைவர் (இ. 1993)

1934 – வீரபத்ர சிங், இந்திய அரசியல்வாதி

1937 – மார்ட்டி ஆத்திசாரி, பின்லாந்தின் 10வது அரசுத்தலைவர், நோபல் பரிசு பெற்றவர்

1940 – வில்மா ருடோல்ஃப், அமெரிக்க ஓட்ட வீரர் (இ. 1994)

1943 – வின்டு செர்ப்பு, அமெரிக்க இணைய முன்னோடி

1946 – இறபீக் சாமி, சிரிய-செருமனிய எழுத்தாளர்

1972 – ஜீனடின் ஜிதேன், பிரான்சியக் காற்பந்தாட்ட வீரர்

1974 – ஜோல் எட்கர்டன், ஆத்திரேலிய நடிகர்

1980 – ராம்நரேஷ் சர்வான், கயானாத் துடுப்பாளர்

1980 – பிரான்செசுகா இசுகியவோனி, இத்தாலிய டென்னிசு வீராங்கனை


இறப்புக்கள்.

79 – வெசுப்பாசியான், Roman உரோமைப் பேரரசர் (பி. 9)

1836 – ஜேம்ஸ் மில், இசுக்காட்டிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (பி. 1773)

1891 – வில்கெம் எடுவர்டு வெபர், செருமானிய இயற்பியலாளர் (பி. 1804)

1891 – நார்மன் இராபர்ட் போகுசன், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1829)

1939 – கிஜூபாய் பதேக்கா, இந்தியக் கல்வியாளர் (பி. 1885)

1953 – சியாமா பிரசாத் முகர்ஜி, இந்தியக் கல்வியாளர், அரசியல்வாதி (பி. 1901)

1971 – சிறீ பிரகாசா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், நிர்வாகி (பி. 1890)

1980 – சஞ்சய் காந்தி, இந்தியப் பொறியியலாளர், அரசியல்வாதி (பி. 1946)

1983 – மியரி ஜேம்சு துரைராஜா தம்பிமுத்து, இலங்கை-ஆங்கிலேய கவிஞர், இதழாசிரியர், திறனாய்வாளர், பதிப்பாளர் (பி. 1915)

1984 – அலெக்சாண்டர் செமியோனவ், உருசிய ஓவியர் (பி. 1922)

1995 – யோனாசு சால்க், அமெரிக்க உயிரியலாளர், மருத்துவர் (பி. 1914)

2015 – நிர்மலா ஜோஷி, இந்திய கத்தோலிக்க அருட் சகோதரி (பி. 1934)

2015 – பிரபுல் பிட்வாய், இந்திய இதழாளர், செயற்பாட்டாளர் (பி. 1949)


சிறப்புநாள்.

தந்தையர் தினம் (நிக்கராகுவா, போலந்து)

பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள்

வெற்றி விழா (எசுத்தோனியா)
*பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள்*

உலகம் முழுவதும்
 கணவன்மார்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஜூன் 23 ம் தேதியினை 
பன்னாட்டு விதவைகள் நாள் (பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள்) என ஐ.நா. சபை அறிவித்துள்ளது.

 இந்த நாளில் உலகம் முழுவதும் உள்ள ‌கோடிக்கணக்கான
 கைம்பெண்கள் 
சந்தித்துவரும் பிரச்சனைகள், மற்றும் இன்னல்கள் குறித்து ஐ.நா. கண்காணித்துத் தீர்வுக்கு வழி வகுக்கும்.

பன்னாட்டுக் கைம்பெண்கள் நாளை அறிவிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உலகத் தலைவர்களும் ஐ.நா.சபையில் பேசி வந்தனர். காபூன் 
நாட்டின் ம‌றைந்த முன்னாள் அதிபர் ஒமர் பூன்கோ ஒடிம்பாவின் மனைவி சில்‌‌வையோ பூன்கோ ஒடிம்பாவின் கோரிக்கைப்படி ஐ.நா.வின் பொதுச்சபைக்
கூட்டத்தில் மொத்தம் 195 பிரதிநிதிகளின் சார்பில் அமைக்கப்பட்ட 3வது குழுவின் அறிக்கையடிப்
படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து ஐ.நா. பொதுச் சபையில் 23 டிசம்பர், 2010 அன்று ஒருமனதாகத் தீர்மானமும் நிறைவேறியது.
2024/10/01 02:48:12
Back to Top
HTML Embed Code: