Telegram Web
வரலாற்றில் இன்று செப்டம்பர் 30.

பி.சீனிவாசராவ் நினைவுநாள்.

கீழ்த் தஞ்சை பகுதிகளில் தலித் மக்களுக்கு இழைக்கப்பட்டு வந்த சாணிப்பால் சவுக்கடி தீண்டாமைக்கெதிராக களம் கண்டவர்.

அடித்தால் திருப்பி அடி, உதைத்தால் திருப்பி உதை, திட்டினால் திருப்பித்திட்டு என தலித்துகளுக்கு தைரியம் ஊட்டிய போராளி.

இவர் தலைமையிலான கீழ்த் தஞ்சை விவசாயப் போராட்டத்தின் காரணமாக அன்றைய தி.மு.க. அரசு கீழ்த் தஞ்சை கூலிச் சட்டம் என்ற சட்டத்தை கொண்டு வந்தது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆலயப்பிரவேசம், பொதுச்சாலைகளில் நடக்க வைப்பது, செருப்பு போட்டு, குடைபிடித்து, தோளில் துண்டணிந்து நடக்க வைப்பது போன்ற போராட்டங்களை தலைமையேற்று வெற்றி கண்டவர்.

போராளி சீனிவாசராவ் அவர்களுக்கு வீரவணக்கம்.
வரலாற்றில் இன்று . செப்டம்பர் 30

1954 - உலகின் முதல் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான, அமெரிக்காவின் நாட்டிலஸ் பயன்பாட்டுக்கு வந்த நாள்

இதற்கான திட்டத்தை உருவாக்கிய ஹைமென் ரிக்கோவர், அணுசக்திக் கடற்படையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இரண்டாம் உலகப்போரில் சிறப்பாகச் செயல்பட்ட அமெரிக்காவின் கப்பலின் பெயரே இதற்குச் சூட்டப்பட்டது. பண்டைய கிரேக்க மொழிச் சொல்லான நாட்டிலோஸ் என்பதிலிருந்து உருவான லத்தீன் மொழிச் சொல்லான நாட்டிலஸ் என்பதற்கு மாலுமி என்று பொருள். இப்பெயரில் ஆழ்கடலில் வசிக்கும் நத்தை போன்ற ஓர் உயிரினமும் உள்ளது. லத்தீன் மொழியில் நாட்டிகஸ் (கிரேக்;க நாட்டிகோஸ்) என்பதற்கு மாலுமிகள் தொடர்பான என்று பொருள். அதனாலேயே கடல் மைல்கள் நாட்டிகல் மைல் என்று அழைக்கப்படுகின்றன. 1870இல் வெளியான ஓர் அறிவியல் புதினத்தில் நாட்டிலஸ் என்ற பெயரில் ஒரு நீர்மூழ்கி குறிப்பிடப்பட்டிருந்தது. சிறிய அணுமின் உலையைக் கொண்டு நீரைக் கொதிக்கவைத்து, நீராவிமூலம் இந்த நீர்மூழ்கி இயக்கப்படும். இதற்குக் கடல் நீரையே உப்புநீக்கம் செய்து பயன்படுத்துவார்கள். அணுசக்திக்கு முன்பு, நீர்மூழ்கிகள் பெட்ரோலியத்தாலும், மின்கலத்தாலும் இயக்கப்பட்டபோது, புகையை வெளியேற்றவும், மின்கலத்தை ரீச்சார்ஜ் செய்யவும் அடிக்கடி மேலே வரவேண்டும். உண்மையிலேயே நீர்மூழ்கிகளாக, மிக நீண்ட காலம் நீருக்கடியில் இருப்பது அணுசக்தி வந்தபின்னரே சாத்தியமானது. எரிபொருளைச் சேமிப்பதற்கான இடம் முதலானவையும் தேவையற்றுப் போயின. இந்த நீர்மூழ்கி 1958இல் நீருக்கடியிலேயே பயணித்து வடதுருவத்தை அடைந்தது. 1960இல் அமெரிக்காவின் மற்றொரு அணுசக்தி நீர்மூழ்கி, நீருக்கடியிலேயே உலகைச் சுற்றிவந்தது. பெரிய விமானந்தாங்கிக் கப்பல்களிலும் அணுசக்தி பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும் அணுமின் உலையின் நிறுவுதல், பராமரிப்பு செலவுகள் அதிகம் என்பதால், பொதுவாக ராணுவத்தில் மட்டுமே அணுசக்தி கப்பல்கள், நீர்மூழ்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.
வரலாற்றில் இன்று செப்டம்பர் 30

பொருளின் அணுத்தன்மையை உறுதி செய்த, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய-அமெரிக்க இயற்பியலாளர் சான் பத்தீட்டு பெரென் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 30, 1870).

சான் பத்தீட்டு பெரென் (Jean Baptiste Perrin) செப்டம்பர் 30, 1870ல் பிரான்சு நாட்டில் லீல் என்ற ஊரில் பிறந்தார். இவர் தந்தை ஓர் இராணுவ அலுவலர். அவர் பிரெஞ்சு-புருசியப் போரில் வீர மரணமடைந்தார். எனவே இவருடைய தாயார் பெரினையும் அவரின் இரண்டு சகோதரிகளையும் வளர்த்து ஆளாக்க மிகவும் துன்புற்றார். பெரென் உள்ளூரிலுள்ள பொதுப்பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கினார். பின்னர் பாரிசில் 'லைசி ஜேன்சன் டி செய்லி' என்ற கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். கட்டாய இராணுவ சேவை காரணமாக 1891ல் இராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். இப்பயிற்சியின் போதுதான் இவருக்கு இயற்பியலில் ஆர்வம் ஏற்பட்டது. 1897ல் என்றியட் டுபோர்டல் என்ற பெண்னை பெரின் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், இரு மகள்களும் பிறந்தனர்.

1894-97 ஆண்டுகளில் பெரென் ஈகோல் நார்மலே என்ற இடத்தில் இயற்பியல் ஆய்வு உதவியாளராகச் சேர்ந்து பணிகளில் ஈடுபடார். அப்பொழுது, எதிர்மின் கதிர்கள், எக்ஸ் கதிர்கள் இவற்றைப் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். அவற்றையே ஆய்வறிக்கையாக அளித்து இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றர். அப்பொழுது வெற்றிடக் குழாயில் மின்னிறக்கம் செய்யும்போது எதிர்மின் வாயிலிருந்து எதிர்மின் கதிர்கள் தோன்றுகின்றன என்பதை அறிவியலறிஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இக்கதிர்கள் எதிர்மின் துகள்களால் ஆனவை. அவை அலை வடிவாக வெளியிடப்படுகின்றன என்பதிலும் கருத்து வேறுபாடுகள் தோன்றின. 1895ல் பெரென் ஆய்வுகளில், எதிர்மின் கதிர்கள் காந்தப்புலத்தில் விலகலடைகின்றன என்பது மிக முக்கியமான முடிவாகும். இவை எதிர் மின்தன்மை உடையவை. இத்துகள்களின் மின்னூட்டம்-நிறை இவற்றுக்குள்ள விகிதத்தைக் கண்டறிய முற்பட்டார். ஆனால் ஜெ. ஜெ. தாம்சன்‎ இவருக்கு முன்னால் அதைக் கண்டறிந்தார்.

1901ல் இயல்வேதியலில், பிரௌனியன் இயக்கம் மற்றும் மூலக்கூறு பற்றி ஆய்வுகளை மேற்கொண்டார். 1928ல் இராபர்ட் பிரௌன் என்பவர் 'நீரில் மூழ்கியுள்ள மகரந்தத்துகள்கள் தொடர்ந்து இங்குமங்குமாக ஒழுங்கின்றி இயங்குகின்றன.' என்று கூறினார். 1905ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இதற்கான விளக்கத்தை துகள்கற்றை இயற்பியலின் அடிப்படையில் தந்தார். 'நீர்மூலக்கூறுகளினால் இத்துகள்கள் இயக்கப்படுகின்றன. ஒரு துகளினால் கடத்தப்படும் தூரம், அவற்றிற்கு இடைப்பட்ட நேரத்தின் வர்க்கத்திற்கேற்ப அதிகரிக்கிறது. எனக் குறிப்பிட்டார். வெப்பநிலை, துகள்களின் அளவு, இயங்குகின்ற திரவம் இவற்றில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் துகள்கள் எவ்வாறு இயங்குகின்றது என்பதை ஐன்ஸ்டீன் தெளிவாக விளக்கினார். 1908ல் ஐன்ஸ்டீனின் கருத்துகளை ஆய்வுகளின் மூலம் பெரின் மெய்ப்பித்தார்.

ரிச்சர்ட் சீய்க்மாண்டி(Richard Zeigmandy), ஹென்றி சீடண்டாப் (Henry Siedentop), என்ற அறிவியலறிஞர்கள் 1903ல் உருவாக்கிய நுட்பமான நுண்ணோக்கிகள் இந்த ஆய்வுகளுக்குப் பெருமளவில் உதவின. ஐன்ஸ்டீனின் சமன்பாடுகளைப் பயன்படுத்தி, நீர் மூலக்கூறின் அளவு மற்றும் அவகாட்ரோ எண்ணிற்கான திடமான மதிப்பையும் கணக்கிட்டார். இந்த ஆய்வுகளுக்காக இவருக்கு 1926ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1913ல் அணுக்கள் என்ற தலைப்பில் இவர் ஒரு நூலை வெளியிட்டார். இவருடைய ஆய்வு விளக்கங்களாக மட்டுமன்றி இந்நூல் கதிரியக்க வேதியல், கரும்பொருள் கதிரியக்கம், மூலக்கூறுகளின் முழுத்தன்மையையும் வெளிப்படுத்துவதாகவும் அமைந்தது. 1936க்குள் இது பல பதிப்புகள் அச்சிடப்பட்டு சுமார் 30,000 பிரதிகள் விற்பனையாயின. பல மொழிகளிலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டது. இது போல் பல நூல்களை பெரின் வெளியிட்டார். ஜெ. ஜெ. தாம்சன்‎ இவருடைய கருவிகளைப் பயன்படுத்தியே தன்னுடைய முடிவுகளை வெளியிட்டார். சார்போனில் உள்ள பாரிஸ் பல்கலைக்கழகத்தில் இயல் வேதியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பிறகு அத்துறையின் தலைவரானார்.

1896ல் ராயல் கழகத்தின் ஜூல் பரிசு, 1911ல் ராயல் கழகத்தால் மத்யூக்கி பதக்கம், 1912ல் போலோக்னாவின் வல்லௌரி (Vallauri) பரிசு, 1914ல் பாரிசின் அறிவியல் கழகத்தினால் லா கேசு (La Caze)பரிசு போன்ற பரிசுகள் பெற்றார். பிரசல்சு,லைகே, கெம், கொல்கத்தா, நியூயார்க், பிரிசுடன், மான்செசுடர் மற்றும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகங்கள் இவருக்கு மதிப்பியல் முனைவர் பட்டம் அளித்துச் சிறப்பித்தன. ராயல் கழகம், மற்றும் பெல்சியம், சுவீடன், பிரேக், உருமானியா போன்ற நாடுகளில் உள்ள அறிவியல் கழகங்கள் இவரை உறுப்பினராக ஏற்றுக் கொண்டன. இங்கிலாந்து, பெல்ஜிய அரசுகளின் மதிப்புமிக்க பட்டங்கள் இவருக்கு அளிக்கப்பட்டன. அறிவியல் அறிஞர்கள் ஆய்வு செய்வதற்கென பிரெஞ்சு நாட்டில் தேசிய மையம் ஒன்றை அமைக்க இவர் பெரு முயற்சி எடுத்துக்கொண்டார்.
1914-18 ஆம் ஆண்டுகளில் நடந்த போரின் போது பொறியாளர் படைக்குத் தலைமை அலுவலராகப் பொறுப்பேற்றார். 1040ல் ஜெர்மானியர் ஊடுருவியபோது இவர் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார். ஆல்பர்ட் ஐன்சுடீனின் விளக்கத்தையும் மெய்ப்பித்து, பொருளின் அணுத்தன்மையை உறுதி செய்த சான் பத்தீட்டு பெரென் ஏப்ரல் 17, 1942ல் தனது 71வது அகவையில் நியூயார்க், அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். 1948ல் போருக்குப் பின் இவருடைய பொருள்கள் சொந்த நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு புதைக்கப்பட்டன. இவரைச் சிறப்பிக்கும் வகையில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டது.
வரலாற்றில் இன்று செப்டம்பர் 30

நிலநடுக்க ரிக்டர் அளவீடு அலகினைக் கண்டறிந்த அமெரிக்க இயற்பியலாளர் சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 30, 1985).

சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் (Charles Francis Richter) ஏப்ரல் 26, 1900ல் அமெரிக்காவில் ஓகியோ மாவட்டத்தில் ஹேமில்டன் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் பிரெட் டபிள்யூ கின்சிங்கர். தாயார் வில்லியன் அன்னா ரிக்டர். சார்லஸ் ரிக்டர் 14 மாதக் குழந்தையாக இருந்தபோது காலரா நோயால் பாதிக்கப்பட்டு பிழைப்பதே கடினம் என்ற நிலையிலிருந்து மீண்டு உயிர் பிழைத்தார். இவருடைய சிறுவயதில் இவருடைய பெற்றோர்கள் கருத்து வேறுபாடு காரணமாக மணமுறிவு பெற்று விலகினர். எனவே தாயார் வழித் தாத்தாவின் அரவணைப்பில் வாழ்ந்தார். 1909ல் இவரது குடும்பம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடியேறியது. தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தோடு இணைந்த தொடக்கப்பள்ளியில் இவருடைய இளவயதுக் கல்வி தொடங்கியது. பள்ளிக்கல்வி முடிந்ததும் தனது 16 வயதில் தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

வானவியலில் ஆர்வம் கொண்டிருந்த ரிக்டர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியலை முதன்மைப் பாடமாகக் கொண்டு பட்டப்படிப்பில் சேர்ந்தார். 1920ல் இயற்பியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். கலிபோர்னியா தொழில் நுட்பப் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து கோட்பாட்டு இயற்பியலில் ஆய்வுகளை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். 1927ல் வாஷிங்டனில் உள்ள கார்னெகி பயிற்சி நிறுவனத்தில் தலைவராகப் பணியாற்றி வந்த நோபல் பரிசு பெற்ற இராபர்ட் மில்லிகன்(Robert Millikan) என்ற அறிவியலறிஞரின் அழைப்பை ஏற்று அங்கு ஆய்வு உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கு பைனோ கூட்டன்பர்க் என்பவரின் நட்பு கிடைத்தது. இந்நிலையில் புவியில் ஏற்படும் நில நடுக்கங்கள், அதன் காரணமாக உருவாகும் அலையியக்கங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. பைனோ கூட்டன்பர்க் காட்டிய வழியில் பாசடேனா என்ற ஊரில் புதிதாக அமைக்கப்பட்ட நில நடுக்க ஆய்வுக் கூடத்தில் சேர்ந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். 1928ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த எழுத்தாள ஆசிரியராகப் பணியாற்றிவந்த லில்லியன் பிராண்ட்(Lillian Brandt) என்ற மங்கையைத் திருமணம் செய்துகொண்டார்.



கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் நில நடுக்கவியல் ஆய்வுக்கூடத்தில், தெற்கு கலிபோர்னியாவில் அப்போது ஏற்பட்ட நில நடுக்கங்கள் பற்றிய ஒழுங்கான தொடர் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வந்தன. அதனுடைய வலிமையையும் தொடர்ந்து எழ பதிவு செய்து ஆராயவேண்டிய தேவைகள் உருவாயின. கியூ வாடட்டி (Kiyoo Wadati) என்பவரின் ஆலோசனைப்படி நில நடுக்க அலைகளை உருவாக்கும் புவியின் இடப்பெயர்ச்சியைத் தொடர்ந்து அளக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது பைனோ கூட்டன்பர்க், சார்லஸ் ரிக்டர் இருவரும் அங்கு சென்று இணைந்து செயல்பட்டு நில நடுக்க வரைவுமானி (Seismograph) ஒன்றை உருவாக்கினர். அதனுடைய தீவிரத்தை(Intensity) அளப்பதற்கு மடக்கை அலகு (Logarthimic Scale) ஒன்றைப் பயன்படுத்தினார். ரிக்டர் சிறுவயதில் இருந்தே வானவியல் ஆர்வம் கொண்டவர் என்பதால் அவர் பெயரிலேயே இதற்கு 'ரிக்டர் அளவுகோல்' என்று பெயரிட்டனர். ரிக்டர் அளவுகோல் என்பது இயற்பியல் கருவியல்ல, கணித வாய்பாடு.

இந்த ஆய்வில் கூட்டன்பர்க் அதிகளவில் உதவிய போதும், ஆய்வுக்கான விளக்கங்களை அளிப்பதில் அவருடைய ஆர்வமின்மையால் அவருடைய பெயர் இந்த அளவுகோலில் சேர்க்கப்படவில்லை. 1935ல் இது வெளியிடப்பட்டு செயல்முறையில் பயன்படுத்தப்பட்டது. 1936 வரை கார்னெகியில் பணியாற்றிய சார்லஸ் ரிக்டர் 1937ல் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்திற்கே திரும்பச் சென்று ஆய்வுப்பணிகளைத் தொடர்ந்தார். 1952ல் நிலநடுக்கப்பேராசிரியராகப் பணியேற்றார். 1941ல் இவர் கூட்டன்பர்க்குடன் இணைந்து ‘புவியின் நிலநடுக்கம்’ என்ற நூலை எழுதி வெளியிட்டனர். 1954ல் இந்நூல் மீண்டும் பதிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. 1958ல் ‘அடிப்படை நிலநடுக்கவியல்’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். இளநிலைப் பட்டப்படிப்புக்கு முற்பட்ட பாடங்களுக்குரிய ஆசிரியர்களுக்குத் தேவையான குறிப்புகளைக் கொண்டதாக இந்நூல் அமைந்தது.

1959-1960ல் ஜப்பான் சென்றார் புல்பிரைட் விருது அறிஞராக (Fulbright Scholar) அங்கு சென்று, நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழக்கூடிய பகுதிகளில் கட்டடங்களை எப்படி அமைப்பது என்பதற்கான கட்டடப் பொறியியல் வழிமுறைகளைக் கொண்ட நிலநடுக்கப் பொறியியல் என்ற பாடத்திட்டத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கினை மேற்கொண்டார். 1971ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நிகழ்ந்த ஒரு மிகப்பெரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு ரிக்டரின் எச்சரிக்கைகள் கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்க கலை அறிவியல்கழக உறுப்பினர், அமெரிக்க நில நடுக்க ஆய்வுக் கழகத்தின் தலைவர் என்ற பொறுப்புகளை வகித்தார். ஆனால் அந்நாட்டின் தேசிய அறிவியல் கழகத்தில் இவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
1970ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் இயற்கை ஆர்வலர் என்ற முறையில் உலகில் ஆடை அணியாமல் நிர்வாண மக்கள் வாழ்ந்து வந்த மக்கள் குடியிருப்புப் பகுதிகள் எங்கெங்கு உள்ளதோ அந்த இடங்களுக்கெல்லாம் மணைவியுடன் சென்று அவர்களைப் பற்றிய விவரங்களை அறிவதில் ஆர்வம் காட்டினார். கர்நாடக இசையில் ஈடுபாடு, அறிவியல் புனைகதைகளைப் படித்தல், தொலைக்காட்சித் தொடர்களைக் காண்பது இவருடைய பொழுதுபோக்காக இருந்தது. தென்கலிபோர்னியா மலைப்பகுதிக்குச் சென்று அங்கு நடைஉலா செல்வது இவருக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகும். நிலநடுக்க ரிக்டர் அளவீடு அலகினைக் கண்டறிந்த சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 30, 1985ல் தனது 85வது அகவையில் கலிபோர்னியாவில் உள்ள பாசடேனா என்ற ஊரில் மாரடைப்பால் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
வரலாற்றில் இன்று [ 30செப்டம்பர் ]

தமிழறிஞர் இராய. சொக்கலிங்கம் இறந்த நாள் செப்டம்பர் 30

ராய. சொக்கலிங்கம் (1898 அக்டோபர் 30 – 1974 செப்டம்பர் 30 ) என்னும் ராயப்ப செட்டியார் சொக்கலிங்கம் தமிழறிஞர்; கவிஞர்; சமய அறிஞர்; எழுத்தாளர்; சமூகச் சீர்திருத்தக்காரர்; காந்தியர்.

பிறப்பு

ராய. சொக்கலிங்கம் (ராய.சொ.) சிவகங்கை மாவட்டம் அமராவதிப்புதூரில் ராயப்பச் செட்டியாருக்கும் அழகம்மை ஆச்சிக்கும் மகனாக 1898 அக்டோபர் 30ஆம் நாள் பிறந்தவர்.[1]

கல்வி

சொக்கலிங்கம் தனது ஆரம்பக்கல்வியை ஆசிரியர் சுப்பையா என்பவரின் திண்ணைப் பள்ளியில் தொடங்கினார். பதினெட்டாவது அகவை முதல் இருபதாம் அகவை வரை பண்டித சிதம்பர் அய்யர் என்பவரிடம் தமிழிலக்கண, இலக்கியங்களைக் கற்றார்.[2] இடையில், தனது ஒன்பதாம் அகவையில் தன் தந்தை பாலக்காட்டில் நடத்திய கடையில் வேலை செய்தார். அப்பொழுது மலையாளம் கற்றார். 1911 ஆம் ஆண்டு முதல் 1916 ஆம் ஆண்டு வரை மலேசியாவில் உள்ள பிலாப்பம் என்னும் ஊரில் தன் பெற்றோருடன் வாழ்ந்தார். அங்குள்ள கடையில் பணியாற்றிக்கொண்டே மலாய் மொழியும் ஆங்கிலமும் கற்றார்.[1]

இந்து மதாபிமான சங்கம்

ராய. சொக்கலிங்கம் இளமையிலேயே தமிழார்வம் உடையவராக இருந்தார். குமரன் இதழின் ஆசிரியர் சொ. முருகப்பர் என்பவருடன் இணைந்து செட்டிநாட்டுப் பகுதியில் தமிழ்ப்பணியில் ஈடுபட்டார். 1917 செப்டம்பர் 10 ஆம் நாள் இந்து மதாபிமான சங்கத்தைத் தோற்றுவித்தார். விவேகானந்தர் படிப்பகத்தை நிறுவினர்.[1][3] அதன் தலைவராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். இச்சங்கத்திற்கு வருகைதந்த சுப்பிரமணிய பாரதியாயருடன் 1919 நவம்பர் 9 ஆம் நாள் தன் நண்பர்கள் சூழ ஒளிப்படம் எடுத்துக்கொண்டார். பாரதியார் இச்சங்கத்தைப் பற்றி ஹிந்து மதாபிமான சங்கத்தார் என்னும் தலைப்பில் ஏழு விருத்தங்கள் எழுதியுள்ளார்.

திருமணம்

ராய. சொக்கலிங்கம் 1918 ஆம் ஆண்டில் பள்ளத்தூரில் பிறந்த உமையாள் ஆச்சி என்பவரை மணந்தார். குழந்தைப் பேறு இல்லாத காரணத்தால் இராயவரம் குழந்தையன் செட்டியாரைத் தன் மகனாகக் கருதினார். 1960 அக்டோபர் 31ஆம் நாள் உமையாள் ஆச்சி காலமானார். அதன் பின்னர் ராய. சொ. அமராவதிப் புதூரில் இருந்து காரைக்குடிக்குக் குடிபெயர்ந்தார்.[1]

இதழாளர்

சொ. முருகப்பா என்பவர் 1920 ஆம் ஆண்டில் தொடங்கிய தன வைசிக ஊழியன் என்னும் இதழின் ஆசிரியப் பொறுப்பை ராய. சொக்கலிங்கம் 1922 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொண்டார். இதழின் பெயர் ஊழியன் என மாற்றப்பட்டது. 1942 ஆம் ஆண்டு வரை இவ்விதழ் காரைக்குடியிலும் சென்னையிலும் இடம்மாறி வெளிவந்தது.

விடுதலைப் போராட்டம்

காந்தியரான ராய.சொக்கலிங்கம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1932 ஆம் ஆண்டில் சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார். 1934 ஆம் ஆண்டில் காந்தியடிகளைத் தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து விருந்து படைத்தார்.

அரசியல்

ராய. சொக்கலிங்கம் 1938 ஆம் ஆண்டில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வென்று 1941 ஆம் ஆண்டு வரை காரைக்குடி நகரவையின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். அப்பொழுது அங்கு நான்கு தொடக்கப்பள்ளிகளே இருந்தன. அவற்றைப் பதினேழாகப் பெருக்கினார். காந்தி மாளிகை என்னும் பெயரில் நகரவைக் கட்டிடம் கட்டினார்.

படைப்புகள்

ராய. சொக்கலிங்கம் 28 சமய நூல்களையும் 5 கட்டுரைத் தொகுப்புகளையும் 8 கவிதைத் தொகுதிகளையும் 2 ஆய்வு நூல்களையும் எழுதியிருக்கிறார். அவை அனைத்தும் தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித் துறையால் 2009-10 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. அதற்கு ஈடாக ஐந்து லட்சம் ரூபாய் பரிவுத்தொகையாக அவர் மரபுரிமையினருக்கு வழங்கப்பட்டது.

கவிதை நூல்கள்

தாலாட்டும் கும்மியும்
காந்தி பதிணென்பா
புதுமைப்பாக்கள்; 1935; ஊழியன் பிரஸ், சென்னை
பெண் விலைக் கண்டனச் செய்யுட்கள்; தனவைசிய ஊழியன் பிரஸ், காரைக்குடி.
காந்திக்கவிதை; 1969; அழகப்பா கல்லூரி, காரைக்குடி.
கட்டுரை நூல்கள் தொகு
குற்றால வளம்; 1947 மார்ச்; பாரத சக்தி நிலையம்; புதுவை.
வில்லியும் சிவனும்; 1966; அழகப்பா கல்லூரி, காரைக்குடி.
கம்பனும் சிவனும்; 1966; அழகப்பா கல்லூரி, காரைக்குடி.
தொகுத்த நூல்கள் தொகு

பூசைப் பாமாலை; 1958;
திருத்தலப் பயணம்; 1966; க.வெ.சித.வெ.அறக்கட்டளை, சென்னை 85

பதிப்பு

அம்மைச்சி இயற்றிய வருண குலாதித்தன் மடல் (1949 பாரதி பிக்சர் பாலெஸ், காரைக்குடி)
சரவணப் பெருமாள் கவிராயர் இயற்றிய சேதுபதி விறலிவிடு தூது (1947 – இலக்கியப் பதிப்பகம். காரைக்குடி)
சுப்ரதீபக் கவிராயர் இயற்றிய கூளப்ப நாயக்கன் விறலிவிடு தூது (1949 – பாரதி பிக்சர் பாலெஸ், காரைக்குடி)
சேத்தனார் இயற்றிய திருப்பல்லாண்டு (1967)
சைவ எல்லப்ப நாவலர் இயற்றிய அருணாசலப்புராணம் (5.12.1970 - அருணாசலேசுவரர் கோவில், திருவண்ணாமலை)
ஆகிய நூல்களை இவர் பதிப்பித்துள்ளார்.

பட்டம்
1958 ஆம் ஆண்டில் அவரது மணிவிழாவின் பொழுது காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தினர் தமிழ்க்கடல் என்னும் பட்டத்தை வழங்கினர்.
1961 ஆம் ஆண்டில் இரங்கூன் நகர நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் தர்ம பரிபாலன சபையினர் சிவமணி எனப் பட்டம் வழங்கினர்
1963 ஆம் கோலாலம்பூர் அருள் நெறித் திருக்கூட்டத்தினர் சிவம்பெருக்கும் சீலர் என்னும் பட்டம் வழங்கினர்
வண்கவி வள்ளல் என்னும் பட்டமும் வழங்கப்பட்டது.[4].

நூலகம்

ராய. சொக்கலிங்கம் தான் சேர்த்து வைத்திருந்த நூல்களை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நூலகத்திற்கு வழங்கி விட்டார்.

மறைவு

ராய. சொக்கலிங்கம் 1974 செப்டம்பர் 24ஆம் நாள் காரைக்குடியில் காலமானார்.

வாழ்க்கை வரலாறு

ராய. சொக்கலிங்கத்தின் வாழ்க்கை வரலாற்றை "தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கம்" என்னும் நூலாக சா. கிருட்டிணமூர்த்தி, ச. சிவகாமி ஆகிய இருவரும் பதிப்பித்து இருக்கின்றனர். அந்நூலை சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2005 ஆம் ஆண்டில் வெளியிட்டு இருக்கிறது.

நினைவேந்தல்

இவரது நினைவாக கோயமுத்தூர் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் ராய. சொக்கலிங்கம் நினைவுச் சொற்பொழிவு நடைபெறுகிறது.
வரலாற்றில் இன்று-[ 30 செப்டம்பர் ]

அமெரிக்காவில் அரிசோனா-நெவாடா மாகாணங்களுக்கிடையே கட்டப்பட்ட ஹூவர் அணை திறக்கப்பட்ட நாள் - செப்.30, 1935

1931-ஆம் ஆண்டு கட்ட தொடங்கப்பட்ட இந்த அணை 1936-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே தேதியில் கட்டி முடிக்கப்பட்டது

அமெரிக்காவின் அரிசோனா-நெவாடா மாகாணங்களுக்கிடையே பாயும் கொலராடோ ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள அணைதான் ஹூவர் அணை. 1931-ஆம் ஆண்டு கட்ட தொடங்கப்பட்ட இந்த அணை 1936-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே தேதியில் கட்டி முடிக்கப்பட்டது. 1936-ல் இந்த அணை கட்டி முடிக்கப்பட்டபோது, இதுவே உலகின் பெரிய கான்கிரீட் கட்டிடமாகவும், அதிகம் மின் உற்பத்தி செய்யும் மின்நிலையமாகவும் விளங்கியது.
வரலாற்றில் இன்று-[ 30 செப்டம்பர் ]

தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்ட நாள் செப்டம்பர் - 30- 2003

விக்கிப்பீடியா, ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால் 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி ஆரம்பிக்கப்பட்டது.

விக்கிப்பீடியா, ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால் 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி ஆரம்பிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் ஜனவரி 21, 2001ம் ஆண்டு இணையத்தில் தொடங்கப்பட்டது.

அனைத்து மனித அறிவும் இலவசமாக, மொழிகளைக் கடந்து எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்பதே விக்கிப்பீடியாவின் உயரிய நோக்கம். இத்திட்டம் இலாப நோக்கமற்றது, நடுநிலைமையை வலியுறுத்துவது. இத்திட்டத்தின் வழி இதுவரை, பல மொழிகளிலுமாக சேர்த்து 1 கோடியே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இதில் ஆங்கில மொழியில் மாத்திரம் 2.7 மில்லியனிற்கும் அதிகமான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
புற்றாக வளர்ந்து நிற்கும் சித்தர் ராமர் பாண்டியன்!

நெல்கட்டும்செவல் ஜமீன்தாரை பற்றி
பலரும் அறிந்திருக்கலாம்.

அவர் விடுதலை போராட்டத்திற்கு வித்திட்ட மன்னர்.

ஆனால் அவரது வாரிசுதாரர் ஒருவர் சித்தராக வாழ்ந்திருக்கிறார் என்ற செய்தி எத்தனை பேருக்கு தெரியும்.

18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடந்த வரலாறு இது.

நெல்கட்டும் செவல் பாளையத்தின் ராணி, கோமதிமுத்து நாச்சியார்.

அவரது தந்தையான வீராதி வீரர் புலித்தேவர் மறைந்து விட்டார்.

அவருக்குப் பின் ஆட்சி செய்த ஆண் வாரிசு இல்லாததால், பாளையத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பு, ராணி கோமதிமுத்து நாச்சியார் வசம் வந்து சேர்ந்தது.

வெள்ளையர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி ஒரு பக்கம். கூட இருந்தே குழி பறிக்கும் பக்கத்து பாளையக்காரர்களின் வஞ்சகம் ஒரு பக்கம்.

ராணி என்னதான் செய்துவிட முடியும். ‘இந்தச் சிக்கலான சூழ்நிலையில் கணவர் ராமர் பாண்டியன் தன்னுடன் இருந்திருந்தால் இவ்வளவு துன்பப்பட வேண்டியிருக்காதே?’ என்று நினைத்து மனம் குமுறினார்,ராணி கோமதிமுத்து நாச்சியார்.

ராணியின் கணவர் ராமர் பாண்டியன், ஒரு வித்தியாசமான மனிதர்.

கோமதிமுத்து நாச்சியாருடன் குடும்ப வாழ்க்கை நடத்தும் போதே, ராமர் பாண்டியனின் மனம் துறவு வாழ்க்கையை நாடிச் சென்றது.

மகராஜா புலித்தேவரின் மரு மகன் என்று பெருமை பட்டுக்கொள்ள அவருக்கு விருப்பம் இல்லை.

எப்போதுமே தத்துவ விசாரணையிலேயே
தன் மனதைக் கொண்டு சென்றார்.

அரச பந்தங்களை விட்டு அகன்று செல்லத் துடித்தார்.

எங்காவது மடத்தில் சேர்ந்து துறவியாகி விடலாமா? என்று கூட சிந்தித்துக்கொண்டிருந்தார்.

தம்பதிகளின் ஐந்து வருட இல்லற வாழ்க்கையில் ஆண் குழந்தை பிறந்தது.

அதுவும் கொடி சுற்றிப் பிறந்தது.

கொடி சுற்றிப்பிறந்த குழந்தை குடும்பத்திற்கு ஆகாது.

குறிப்பாக தாய்மாமனுக்கு ஆகாது என்று அரண்மனை ஜோதிடர்கள் கூறிவிட்டார்கள்.

திகைத்தார் கோமதிமுத்து நாச்சியார்.

குழந்தைக்கு அமுது கொடுக்காமலும் கவனிக்காமலும் விட்டு விட்டார்.

குழந்தை இறந்துவிட்டது. மனமுடைந்தார் ராமர் பாண்டியன்.

அவரால் அரண்மனையில் இருக்க முடியவில்லை.

கால்போன போக்கில் நடந்தார்.

கண்காணாத தேசத்துக்கு சென்றுவிட்டார்.

கணவனைக் காணாத கோமதிமுத்து நாச்சியார், கவலையில் மூழ்கினார்.

தந்தை புலித்தேவர், சகோதரர்கள் சித்திர புத்திரதேவர், சிவஞான பாண்டியன் ஆகியோர் ஆரம்ப காலகட்டத்தில் ஆதரவு தந்தனர்.

தந்தையும், சகோதரர்களும் மரணமடைந்து விட்ட பின்னர்தான்,தானே
ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை வந்து விட்டது.

தனது ஆட்சிக்கு துணையாக அனுபவம் நிறைந்தவர் தேவை.

எனவே ராமர் பாண்டியனை எட்டு திக்கும் தேடினார்கள்.

எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லையே?.

அவர் ஆன்மிகத்தில் மூழ்கி விடுபவர். எங்காவது ஆதினத்தில் சேர்ந்திருப்பார்.

எந்த ஆதினமாக இருக்கும் என்பது தான் தெரியவில்லை.

அரண்மனையைச் சேர்ந்த சங்கு முத்துப்பிள்ளை என்பவர் அவரை தேடி அலைந்து கொண்டிருந்தார்.

திருவாவடுதுறை ஆதினத்தில் ஒருவர் ஆன்மிகத்தில் மூழ்கி கிடந்தார்.

வழிபாடுகளில் தினமும் கலந்து கொண்டார்.

நந்தவனத்தைப் பராமரிக்கும் தோட்டக்காரனாக பணிபுரிந்தார்.

அவர்தான் ராமர் பாண்டியன்.

அங்கு தன்னை
அரசனாக அவர் காட்டிக்கொள்ளவில்லை.

காவி உடையில் காட்சியளித்தார்.

திருவாவடுதுறையின் 11-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வாழ்ந்த காலம் அது.

சின்னப்பட்டம் திருச்சிற்றம்பலம் தேசிகர், சன்னிதானத்துக்கு நெல்கட்டும் செவல் ராணியிடம் இருந்து திருமுக ஓலை வந்திருப்பதாகச் சொல்கிறார்.

ஒடுக்கம் சாமிநாத தம்பிரான் அதை வாங்கி படிக்கிறார்.

‘குருமகாசன்னிதானம் அவர்களே.. நமது திருமடத்தில் நெல்கட்டும் செவல் அரண்மனையை அலங்கரிக்கும் ராமர் பாண்டியன் நான்கு வருடமாக இருக்கிறாராம்.

அவரை அரண்மனைக்கு அனுப்ப வேண்டும் என மகாராணி ஓலை அனுப்பியுள்ளார்’.

‘அப்படியா? நம் திருமடத்தில் நெல்கட்டும் செவல் புலித்தேவரின் மரு மகன் இருக்கிறாரா?.

அதுவும் நான்கு வருஷமாகவா?’ என்று ஆச்சரியப்பட்டார் சன்னிதானம்.

அவர் உடனடியாக தம்பிரானிடம், ‘திருமடத்தின் சத்திரத்தில் தங்கியிருக்கும் காஷாயம் வாங்காத துறவிகள் கூட்டத்தில் உடனடியாக விசாரியுங்கள்’ என்றார்.

ஓலை கொண்டு வந்த சங்கு முத்துப்பிள்ளை பாண்டியனை அடையாளம் காட்டினார்.

சன்னிதானத்தின் பாதங்களில் முறைப்படி விழுந்து நமஸ்கரித்த ராமர்பாண்டியன்,அவர் முன்பு கைக் கட்டி வாய் மூடி நின்றார்.

‘நான் யார் என்று காட்டிக்கொள்ளாமல் ஆதினத்தில் இருந்தமைக்கு சன்னிதானம் அடியேனை மன்னிக்க வேண்டும்’ என மன்னிப்புக் கேட்டார்.

‘மன்னிப்பா! ராஜ வாழ்க்கை வாழக்கூடிய ஒருவர், துறவு வாழ்க்கையில் இங்கு அமர்ந்து எடுபிடி வேலையெல்லாம் செய்திருக்கிறார் என்றால், நீர்.. எவ்வளவு பெரிய தத்துவ ஞானி.
ஆனாலும் ஆட்சி பொறுப்பை விட்டு துறவி பொறுப்பை ஏற்க முடியுமா..? இப்போது முடியாதே..' நிதானமாக யோசித்தார் சன்னிதானம்.

‘ராமர் பாண்டியரே! நீர்.. உடனே சென்று நெல்கட்டும் செவல் ஜமீன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்றார்.

‘மனதளவில் துறவியான அடியேனால் இனி உலக வாழ்க்கையில் எப்படி ஈடுபட முடியும்?’

ராமர் பாண்டியன் கண் கலங்கினார்.

‘எதற்கும் மனம் கலங்க வேண்டாம் ராமர் பாண்டியனே.

இன்றே இப்போதே நீர் நெல்கட்டும் செவல் மன்னராகிவிட்டீர்.

அதுவும், திருவாவடுதுறையில் இருந்து செல்கின்ற நீர் ‘ராஜரிஷி’ என்று அழைக்கப்படுவீர்.

உம்மை அங்குள்ள குடிமக்கள் போற்றுவார்கள்’ என்று கூறி, மிகவும் சிறப்பான பட்டு சால்வையை எடுத்து ராமர் பாண்டியனுக்கு போர்த்தினார்.

அதன் பின் சங்கு முத்துப்பிள்ளை கொண்டு வந்திருந்த பல்லக்கில் ஏறி புறப்பட்டார், ராமர் பாண்டியன்.

மடத்தில் இருந்து அரண்மனைக்கு வரும் போதே பல அற்புதங்களை செய்ய ஆரம்பித்தார் ராஜரிஷி.

வழியில் பல்லக்கு தூக்கிகளுக்கு தாகம் எடுத்தது.

உடனே பல்லக்கை நிறுத்த இடம் தேடினர்.

ஆனால், ராமர் பாண்டியனோ,
‘நீங்கள் தைரியமாகச் செல்லுங்கள்,பல்லக்கு அந்தரத்தில் நிற்கும்’ என்று கூறினார்.

அவர்களும் பல்லக்கை அப்படியே விட்டு விட்டுச் சென்றனர்.

என்ன ஆச்சரியம்! பல்லக்கு அப்படியே அந்தரத்தில் நின்றது.

பின் அவர்கள் நால்வரும் தண்ணீர் குடிக்க அருகில் உள்ள கிணற்றுக்குச் சென்றனர்.

அங்கு மந்திரம் தெரிந்த பெண் ஒருத்தி நின்றாள். அவள் பல்லக்கு அந்தரத்தில் நிற்பதைப் பார்த்தாள்.

‘எவரோ ஒருவர் தன் எல்லைக்குள் வந்து வித்தை காட்டுகிறாரே’ என்று நினைத்தவள் தானும் பதிலுக்கு வித்தை காட்ட ஆரம்பித்தாள்.

அதன்படி தண்ணீரை கை நீட்டி குடித்த பல்லக்கு தூக்கிகள் நால்வர் கையும், அப்படியே ஒட்டிக்கொண்டது.

அதை பிரிக்க முடியவில்லை.

உடனே, அவர்கள் ராமர் பாண்டியனை நோக்கி ஓடி வந்தனர்.

ராமர் பாண்டியன் கோபத்துடன் தனது கையில் கிடந்த கடத்தினை தூக்கி நிறுத்தி, மந்திரவாதி பெண்ணை நோக்கி தனது தவ வலிமையைக் காட்டினார்.

அப்போது சூறாவளி போன்று காற்று அடித்தது. அந்தக் காற்று அந்தப் பெண்ணைத் தரையில் நிற்கவிடாமல் தூக்கியது.

இதனால் பயந்து போன அந்தப் பெண் மந்திரவாதி, ராமர் பாண்டியனிடம் மன்னிப்பு கேட்டு, அந்த நால்வரின் கையை பிரித்து விட்டுவிட்டார்.

இதனால் ராஜரிஷி என்று திருவாவடுதுறையில் பெயர் பெற்ற ராமர் பாண்டியன், மக்கள் மத்தியிலும் பெரும் பெயர் பெற்றார்.

பல்லக்கு அரண்மனையை வந்தடைந்தது.

மக்கள் குதூகலம் அடைந்தனர். ராஜரிஷியாக வந்திருக்கின்ற மகராஜாவை பார்க்க ஓடிவந்தனர்.

பட்டிதொட்டியில் இருந்தெல்லாம் வந்த மக்கள் வெள்ளம் அரண்மனையின் வாசலில் கரை புரண்டது.

ராமர் பாண்டியன், தன் கழுத்தில் உத்திராட்சம் அணிந்திருந்தார்.

சன்னிதானம் அளித்த பட்டாடையால் உடம்பைப் போர்த்தியிருந்தார்.

ராணி கோமதிமுத்து நாச்சியாரோ, ராஜ சின்னங்கள் அனைத்தையும், உடைவாளுடன் அவர் பாதங்களில் சமர்ப்பித்தார்.

‘ராமர் பாண்டிய மகராஜா வாழ்க’ என்ற மக்கள் கோஷம் விண்ணைப் பிளந்தது.

நெல்கட்டும் செவல் ராஜாவானார், ராமர் பாண்டியன்.

சில ஆண்டுகளே அவர் ராஜாவாக இருந்தார். ஆனாலும் அவரின் மனமோ ராஜாவாக இருக்க அவரை விடவில்லை.

அவரின் ஆன்மிக நாட்டம் அனைவரையும் வியக்க வைத்தது.

தன்னுடைய ஆட்சிக்கு உள்பட்ட பல நிலபுலன்களை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு எழுதி வைத்தார்.

உதயமார்த்தாண்ட பூஜை பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

பல கோவில் திருப்பணிகளைத் தொடர்ந்தார்.

தான,தர்மங்களைச் செய்தார்.

தன்னுடைய குடிகளும் படை வீரர்கள் குடும்பமும் மகிழ்ச்சியுடன் வாழ என்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் குறைவில்லாமல் செய்து கொடுத்தார்.

தான் ஜீவ சமாதி ஆவதற்காக, நெல்கட்டும் செவலுக்கு வடக்கே நிஷோப நதிக்கரையில் மூன்று நீர் நிலைகள் ஒன்று சேரும் இடத்தைத் தேர்வு செய்தார்.

நாள்தோறும் அங்கு வந்து அமர்ந்து வெகுநேரம் தவம் செய்ய ஆரம்பித்தார்.

ஒரு குறிப்பிட்ட நாள் வந்தது. அவரே கட்டிய சமாதியில் நிஷ்டையில் இருந்தபடியே ஜீவ சமாதி அடைந்தார்.

ஊர் மக்கள் இங்கு கோவில் அமைத்தனர்.

இந்தக் கோவிலில் உருவம் எதுவும் இல்லை. சமாதியில் ஆறு அடிக்கு அதிகமான உயரத்தில் ஒரு புற்று வளர்ந்திருக்கிறது.

அந்த புற்றில் முகம் போன்ற அமைப்பு உள்ளது.

இந்த புற்று மண் எல்லா நோய்களையும் குணப்படுத்தும் என்பது அந்தப் பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

ராமர் பாண்டியன் ஜீவசமாதி உயிரோட்டம் கொண்டது.

எனவேதான் இந்த புற்று மிக வேகமாக வளர்ந்துள்ளது.

இந்த புற்று கர்ப்பக்கிரக மோட்டை தொடும் அளவுக்கு உயர்ந்தது.

இதன் வளர்ச்சியை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

எனவே புற்றில் ஈரத்துணியை நனைத்து போட்டு வளர்ச்சியை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர்.

ஆனாலும் முடியவில்லை.

இறுதியில் ராமர் பாண்டியனிடம் விரும்பி வேண்டி புற்றின் தலையில் கவசம்
ஒன்றை வைத்தனர்.
ஓரளவு புற்றின் வளர்ச்சி தடைபட்டது.

ஆனால் அவர் வழங்கும் அருள் ஆசியை யாரும் கட்டுப்படுத்த முடியவில்லை.

நெல்லை மாவட்டம் கரிவலம் வந்தநல்லூர் - பனையூர் செல்லும் வழியில், நெல்கட்டும் செவல் சாலையில் நிட்சோப நதிக்கரையில் ராமர்பாண்டியன் ஜீவசமாதி ஆலயம் உள்ளது.

கரிவலம் வந்தநல்லூரில் இருந்து பஸ் வசதி மற்றும் ஆட்டோ வசதி உள்ளது.

இந்த ஆலயத்தின் நடை எப்போதும் திறந்தே இருக்கும்.

தீராத நோய் என்று மருத்துவர்கள் கைவிட்டவர்கள் கூட, இங்கு வந்து தங்கி நோய் தீர்ந்து செல்கின்றனர்.
2024/10/01 02:47:07
Back to Top
HTML Embed Code: