tgoop.com »
United States »
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil » Telegram Web
ட வைத்தது போல், இருந்தும், இல்லாத சின்னஞ்சிறிய மீசை.
சும்மா, சாஸ்திரத்துக்கு ஒரு மீசை, 'இந்த உருவத்துக்கு இது போதும்' என்று திருப்தியோடு நினைத்துக் கொண்டார் சாப்ளின். பிறகு, தன்னை மீண்டும் ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டு, வெளியேறி நடக்க ஆரம்பித்தார். இப்போது அவருடைய உடைமட்டுமில்லை, நடையும் மாறியிருந்தது. சாதாரணமாய் நீங்களும், நானும் நடப்பது போலில்லாமல், கால்களை லேசாக அகட்டிக் கொண்டு, சற்றே விநோதமான பாணியில், ஏதோ அவசரத்திற்குக் கட்டுப்பட்டவர் போல் விறுவிறுவென்று நடந்தார் சார்லி சாப்ளின். (பின்னாள்களில், அவருடைய இந்த உடையலங்காரமும், நடையும் தான் அவருக்கு ஏராளமான ரசிகர்களையும், 'Little Fellow', 'Tramp' போன்ற செல்லப் பெயர்களையும் பெற்றுத்தந்தது) மாக் சென்னெடும், அவரோடிருந்த படக் குழுவினரும், தூரத்தில் சார்லி சாப்ளினைப் பார்க்கும் போதே, கொஞ்சமாய்ச் சிரிக்கத் தொடங்கி விட்டார்கள்.
அங்கிருந்து மளமளவென்று நடந்து பக்கத்தில் வந்து விட்ட சாப்ளின், எதிர் பாராதவிதமாக, யாரோ ஒருவரின் மீது மோதி, லேசாய்ச் சரிந்து விழுந்தார். பிறகு சமாளித்து எழுந்து கொண்டு, அவரிடம் மன்னிப்புக் கேட்கும் விதமாக, தனது தொப்பியை உயர்த்திக் காட்டி விட்டு, பின்னோக்கி நகரும் போது, இன்னொருவரின் மீது மோதிக் கீழே விழுந்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த எல்லோரும், குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கலானார்கள்.
'இதை, இதை, இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்', என்று நரசுஸ் காபி விளம்பரம் போல் சொன்னார் மாக் சென்னெட்.
'சார்லி, இந்தப் படத்தில் இது தான் உன் வேடம் !' உலக சினிமாவின் ஒரு முக்கியமான சகாப்தம் அந்த விநாடியில் அமர்க்களமாய்த் தொடங்கியது.
என். சொக்கன்.
*பகிர்வு*
*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈*

*இப்படிக்கு 🏹 காலம்*
*பகிர்வு*
*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈*
*இணையற்ற நகைச்சுவை நாயகன் சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு!*
என். சொக்கன்.
*7. The Adventurer*
முதல் படத்தில் நடித்த போது, சார்லி சாப்ளினை யாருக்கும் தெரியாது. அந்த அறிமுகப் படமும், வந்த சுவடு தெரியாமல் பெட்டிக்குள் சுருண்டு விட்டது. சாப்ளினின் இரண்டாவது படமும் பெரிய வெற்றி என்று சொல்லி விட முடியாது. ஆனால், நாம் சென்ற அத்தியாயத்தில் பார்த்த 'Tramp' என்ற புகழ்பெற்ற கதாபாத்திரம், அந்தப் படத்தில் தான் அறிமுகமானது. 'யார் இந்தப் பையன் ? பார்ப்பதற்கு ரொம்ப வேடிக்கையாய் இருக்கிறானே', என்று திரை ரசிகர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். ரசித்தார்கள். சிரித்தார்கள்.
வெனிஸ் நகரத்தில் படமாக்கப்பட்ட அந்தத் திரைப்படத்தின் பெயர், 'Kid Auto Races at Venice', முதல் படத்தில் சாப்ளின் செய்ய ஆசைப்பட்ட பல விஷயங்களை, இந்தப் படத்தில் செய்து பார்க்க முடிந்தது. என்றாலும், 'கீஸ்டோன்' குழுவிலிருந்த மற்றவர்களுக்கு, சாப்ளினின் மேலான வெறுப்பு இன்னும் குறைந்திருக்கவில்லை. மாக் சென்னெடுக்குப் பிடித்துப் போய் விட்ட சாப்ளினின் புதிய வேஷத்தைக் கூட அவர்கள் அவ்வளவாய் அங்கீகரிக்கவில்லை, 'பையன் ரொம்ப அலட்டுகிறான்', என்று அலட்சியமாய் முகத்தை நொடித்துக் கொண்டு, ஒரு வித பொறாமையோடு தான் சாப்ளினைப் பார்த்தார்கள். ஆகவே, சாப்ளின் பங்குபெறும் படப் பிடிப்புகளெல்லாம், அனல் பறக்கும் பட்டி மன்றங்களாக உருமாறின.
சாப்ளின் ஏதாவது ஒரு யோசனை சொல்வதும், அதைப் படத்தில் சேர்க்க முடியாது என்று இயக்குநர் பிடிவாதம் பிடிப்பதும், 'அப்படியானால், நான் இந்தப் படத்தில் நடிக்க மாட்டேன்', என்று சாப்ளின் முறைத்துக் கொள்வதுமாக, தினந் தோறும் சண்டை, கூச்சல், அடாவடி. விவகாரம் பெரிதாகி, மீண்டும் மாக் சென்னெடிடம் சென்றது. அவர் உடனடியாக சாப்ளினை அழைத்து, 'தம்பி, நீ செய்வது சரியில்லை', என்று கண்டிப்பாய்ச் சொல்லி விட்டார். 'டைரக்டர் சொல்வதைக் கேட்டு, அதன்படி நடிக்க முடியுமானால் உனக்கு இங்கே வேலை உண்டு. இல்லையென்றால், நீ மூட்டையைக் கட்டிக் கொண்டு கிளம்பலாம்' இதைக் கேட்டதும், சார்லி சாப்ளின் நொந்து போய் விட்டார். கஷ்டங்களெல்லாம் தீர்ந்து, இனிமேல் நமக்கு நல்ல காலம் தான் என்று நினைக்கும் வேளையில், தன்னுடைய திரை வாழ்க்கை, இப்படி அல்பாயுசாக முடிய வேண்டுமா என்று சோகத்துடன் நினைத்தவர், எதுவும் பேசாமல் தன் அறைக்குத் திரும்பி விட்டார். இப்போது என்ன செய்யலாம் ? அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு, அபத்தமான நகைச்சுவை வேஷங்களில் தொடர்ந்து நடிப்பதா, அல்லது, இதெல்லாம் எனக்குச் சரிப்படாது என்று துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு, இங்கிலாந்துக்கு நடையைக் கட்டுவதா ? நாள் முழுதும் இதையே யோசித்துக் கொண்டிருந்த சாப்ளினால் எந்த உறுதியான முடிவுக்கும் வர முடியவில்லை.
கலை ஆர்வத்தையும், இருப்பியல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர் தூக்கிப் பார்த்து, இவற்றில் எது முக்கியம் என்று தீர்மானிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார் அவர். இனம்பு ரியாத கோபமும், சோகமும், தோல்வி மனப்பான்மையும் அவரைச் சோர்வடையச் செய்தது.
அப்போது, அவரைப் பார்ப்பதற்கு மாக் சென்னெட் வந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. முதலாளியா ? அவர் ஏன் என்னைப் பார்ப்பதற்கு வரவேண்டும் ? ஒரு வேளை, இப்போதே என்னை வேலையிலிருந்து தூக்கி விட்டார்களா ? - இப்படிப் பதட்டம் தரும் கேள்விகள், கற்பனைகளுடன் மாக் சென்னெடைச் சந்திக்க ஓடினார் சாப்ளின். ஆனால், அவருடைய அச்சங்களுக்கு நேர்மாறாக, 'சாப்ளின், என்மீது கோபமா ?', என்று தான் பேச்சைத் தொடங்கினார் மாக் சென்னெட். இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணறினார் சார்லி சாப்ளின். காலையில் அத்தனை கோபமாய்ப் பேசிய சென்னெடுக்கு, இப்போது என்ன ஆகிவிட்டது ? அவருக்குக் கீழே வேலை செய்கிற சாதாரண நடிகன் நான், என்னிடம் ஏன் இத்தனை குழைவாகப் பேசுகிறார் என்றெல்லாம் நினைத்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார் அவர்.
'சாப்ளின், காலையில் நான் சொன்னது எல்லாமே, உன்னுடைய நல்லதுக்குத் தான்', என்று சாமாதானமாய்ச் சொன்னார் மாக் சென்னெட். 'இந்தக் குழுவிலிருக்கிற எல்லோருக்கும் உன்னை ரொம்பப் பிடித்திருக்கிறது. அதனால் தான், உன்னுடைய எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்ற அக்கறையில் தான் நான் உன்னிடம் கடுமையாய்ப் பேசினேன். நீ அதைத் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அவர் இப்படிப் பேசிக் கொண்டேபோக, அடுத்தடுத்து வந்து விழும் ஆச்சரியங்களைத் தாங்க முடியாதவராய்த் தடுமாறினார் சாப்ளின்.
இந்தக் கட்டத்தில் என்ன பேச வேண்டும் என்று கூட அவருக்குத் தோன்ற மறுத்தது. இந்த 'ஜிலீர்' பேச்சுகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, 'நீ எப்போதும் போல் நம் படங்களில் தொடர்ந்து நடிக்கலாம் சாப்ளின். உன்னுடைய யோசனைகளை முடிந்தவ ரை பயன்படுத்திக் கொள்ளுமாறு, நான் டைரக்டர்களிடம் சொல்லியிருக்கிறேன்' என்றார் மாக் சென்னெட். இதை

க் கேட்டதும் சார்லி சாப்ளின் மயக்கம் போட்டு விழாதகுறை தான்.
இன்று காலையில், 'வெளியே போ' என்று விரட்டிய அதே மனிதர், இப்போது, 'உள்ளே வாங்க ஸார்', என்று பணிந்து, குழைகிறார். 'நீங்க எது சொன்னாலும் செஞ்சுடலாம்', என்று தாராளமாய் வரமளிக்கிறார். திடீரென்று என்னுடைய மதிப்பு இப்படி உயர்ந்து விட்டதே, எப்படி ? நான்கைந்து மணி நேரத்தில் அப்படி என்ன அதிசயம் நடந்து விட்டது ? இந்தப் புதிருக்கான பதில், சீக்கிரத்திலேயே அவருக்குத் தெரியவந்தது. அன்று காலை, நியூயார்க் நகரிலுள்ள 'கீஸ்டோன்' அலுவலகத்திலிருந்து வந்த ஒரு தந்தி தான். மாக் சென்னெடின் திடீர் மனமாற்றத்துக்குக் காரணம் ! அப்படி அந்தத் தந்தியில் என்ன தகவல் இருந்தது ?
'நம்முடைய புதிய படத்தில், விநோதமாய் உடை அணிந்து கொண்டு ஒரு நடிகர் நடிக்கிறாரே, அந்த ஆளைப் பார்த்தாலே, மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். தியேட்டர்களில் கூட்டம் குவிகிறது. மேலும் மேலும் புதிய பிரதிகள் வேண்டும் என்று வெவ்வேறு ஊர்களிலிருந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆகவே, அந்த நடிகரை அதே மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து, நிறைய படங்களைத் தயாரிக்கலாம். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும் !' - இப்படி ஒரு இனிப்பான தகவல் மாக் சென்னெடுக்குக் கிடைத்த பிறகு, அவர் சார்லி சாப்ளினைப் பகைத்துக் கொள்ளவேண்டாம் என்று முடிவெடுத்தார். உடனடியாக அவரைச் சந்தித்து அவர் கேட்பதையெல்லாம் கொடுப்பதாக உறுதி சொல்லி சமாதானப்படுத்தி சாப்ளின் தொடர்ந்து 'கீஸ்டோன்' நிறுவனத்திலேயே இருக்கும் படி செய்து விட்டார்.
சீக்கிரத்திலேயே, இந்த விஷயம் சாப்ளினுக்கும் தெரிந்து விட்டது. மக்களிடையே தன்னுடைய புதிய வேஷத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பைப் பற்றி அவருக்கு ரொம்ப சந்தோஷம் பெருமை. அந்தத் தெம்பில், நேரடியாக மாக் சென்னெடைச் சந்தித்து, 'மற்றவர்கள் இயக்கத்தில் நடிப்பது எனக்குப் பிடிக்கவில்லை', என்றார்.
'என்னுடைய படங்களை நானே சொந்தமாய் இயக்க விரும்புகிறேன் !' இதைக் கேட்ட மாக் சென்னெட் திகைத்துப் போய்விட்டார். ஏனெனில், ஒரு திரைப்படத்தை இயக்குவது என்பது சாதாரண விஷயமில்லை. பட உலகில் நெடுநாள் பணியாற்றிய பழம் தின்று கொட்டை போட்ட அனுபவசாலிகளே டைரக்ஷனின் நுணுக்கங்கள் புரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் போது, நேற்று வந்த சின்னப் பையன், இன்றைக்கு படம் இயக்குகிறேன் என்று சொல்கிறானே, இது என்ன அசட்டு தைரியம் ? இப்படி நினைத்த அவர், 'அதெல்லாம் முடியாது', என்று சாப்ளினிடம் கண்டிப்பாய்ச் சொல்லி விட்டார்.
'படங்களில் நடிப்பதற்காகத் தான் உன்னை அழைத்தோம். உன்னுடைய ஒப்பந்தத்திலும் அப்படித் தான் எழுதியிருக்கிறது. இப்போது திடீரென்று படம் இயக்குகிறேன் என்று சொன்னால் எப்படி ? அதற்கெல்லாம் ஒரு தகுதி, தராதரம் வேண்டாமா ?' ஒரு விதத்தில், மாக் சென்னெட் இப்படிதான் பேசுவார் என்று சாப்ளின் ஏற்கெனவே எதிர் பார்த்திருக்க வேண்டும். ஆகவே, அவரும் தன்னுடைய கட்சியை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து வாதம் செய்தார்.
'இன்னொருவர் சொல்வதைக் கேட்டு நடிப்பது எனக்குப் பிடிக்கவில்லை. எனக்கு மேலும் சுதந்திரம் வேண்டும். புதுமையான நகைச்சுவைக் கதைகளை காட்சிகளை நானே சிந்தித்து அமைக்க முடியும். இயக்குநராகப் பணியாற்றுவதற்கு எனக்குக் கூடுதல் சம்பளம் எதுவும் வேண்டாம் என்றெல்லாம் பேசி, மாக் சென்னெடின் மனதை மாற்ற முயன்றார். மெல்ல மெல்ல அவருடைய பேச்சில் சென்னெடுக்கு நம்பிக்கை பிறந்தது. என்றாலும், ஒரு கத்துக் குட்டியிடம் டைரக்ஷன் பொறுப்பை ஒப்படைப்பதா என்று அவர் தயங்கினார்
சினிமாவைப் பற்றி இந்தப் பையனுக்கு என்ன தெரியும் ? படம் எடுக்கிறேன் பேர்வழி என்று ஏகப்பட்ட ஃபிலிமையும், நேரத்தையும், பணத்தையும் வீணாக்கி விடுவானே ! அவருடைய தயக்கத்தில் இருக்கிற நியாயம், சார்லி சாப்ளினுக்கும் புரிந்தது. என்றாலும், தன்னால் நல்ல படங்களை எடுக்கமுடியும் என்ற அபரிமிதமான நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஆகவே, எப்படியாவது சென்னெடின் இந்தக் கவலையைத் தீர்த்து வைத்து, டைரக்ஷன் வாய்ப்பை வாங்கிவிட வேண்டும் என்று முடிவு செய்தார் அவர். இதற்காக, ஒரு மிகப் பெரிய ஆபத்தைச் சந்திக்கத் துணிந்தார் சார்லி சாப்ளின். இன்னும் தெளிவாய்ச் சொல்வதானால், தன்னுடைய வாழ்நாள் சேமிப்பைப் பணயமாக வைத்து, முதல் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். மாக் சென்னெடுக்கு என்ன பயம் ? திரைப்படங்களை இயக்கும் அனுபவம் இல்லாத சார்லி சாப்ளின் எப்படிப் படம் எடுப்பாரோ, அது ஓடுமோ, ஓடாதோ, ... ஒருவேளை ஓடாவிட்டால், அதனால் ஏற்படும் நஷ்டத்துக்கு யார் பதில் சொல்வது ? 'நான் பதில் சொல்கிறேன்', என்றார் சார்லி சாப்ளின், 'என்னுடைய சேமிப்பு முழுவதையும், உங்கள் பெயரில் வங்கியில் போட்டு விடுகிறேன். நான் எடுக்கிற படம் நன்றாக ஓடி, வெற்றியடைந்தால், என்னுடைய பணத்தைத் திருப்பிக் கொடுங்கள். ஒரு வேளை அந்தப் படம் ஓடாவிட்டால், அந்த நஷ்டத்தை ஈடுகட்டுவதற்கு, நீங்கள் அந்தப்

ெரிய பணக்காரர்களில் ஒருவர் ! சார்லி சாப்ளினின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் போது, இந்தப் பண விஷயத்தை அடிக்கடி குறிப்பிட வேண்டியிருக்கிறது. ஏனெனில், ஒவ்வொரு நிலையிலும், முன்பை விட அதிக சம்பளத்துடன் முன்னேறியவர் சார்லி சாப்ளின். ஆகவே, அவருடைய வாழ்க்கையின் வெற்றியை அளக்கும் ஒரு வித அளவுகோலாகவே, அவருடைய சம்பளத் தொகையை அவ்வப்போது சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், நாம் முன்பே பார்த்தது போல், இந்தப் பண வரவைக் காட்டிலும், சாப்ளின் அதிகம் விரும்பிய ஒரு விஷயம் - சுதந்திரம். 'எஸ்னே'வில் அந்தச் சுதந்திரம் அவருக்குப் பூரணமாய்க் கிடைத்தது. அவர் ஆசைப் பட்டது போல் படங்களை எடுத்து, வெளியிட முடிந்தது. மெல்ல மெல்ல, 'கீஸ்டோன்'போலவே, 'எஸ்னே'வும் தன்னைச் சுற்றியே இயங்கும் படி மாற்றிக் கொண்டார் சார்லி சாப்ளின். விரைவில், அவர் விரும்பியபடி, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அவருக்கென்று தனி ஸ்டூடியோ அமைத்துத் தந்தது 'எஸ்னே'. என்றாலும், 'எஸ்னே'வுடனான சாப்ளினின் ஒப்பந்தம் முடிவடையும் வேளையில், அவருக்கும், நிறுவனத்தாருக்கும் இடையே சில உரசல்கள் தலை காட்டின.
மறுபடி, பண விவகாரம் தான். இந்த ஒரு வருடத்துக்குள், அமெரிக்காவின் ஒவ்வொரு திரை ஆர்வலரும் விரும்பி, ரசிக்கும்படி ஒரு மிகச் சிறந்த நடிகராக வளர்ந்திருந்த சார்லி சாப்ளின், அதற்கேற்ப, தனது சம்பளமும் அதிகரிக்க வேண்டும் என்று விரும்பினார். அவர் கேட்ட சம்பளம், ஐந்து லட்சம் அமெரிக்க டாலர்கள் ! ஆனால், 'எஸ்னே' நிறுவனம் இப்படியொரு பெரிய தொகையைத் தருவதற்குத் தயங்கியது. ஆகவே, ஒரு வருட நல்லுறவு முறிந்து, சாப்ளின் அங்கிருந்து வெளியேறி விடுவார் என்பது உறுதியானது. இந்த நேரத்தில் தான், 'எஸ்னே' நிறுவனம் சில விஷமத்தனமான தில்லுமுல்லுகளில் இறங்கியது. எரிகிற வீட்டில், பிடுங்கியது வரை லாபம் என்ற எண்ணத்தில், சாப்ளினின் பழைய படங்களிலிருந்து சில காட்சிகளையும், அவர் வேண்டாம் என்று வீசியெறிந்த சில துண்டுகளையும் இணைத்து, ஒட்டுப் போட்டு, புதுப் பெயர்களில் படமாக வெளியிட்டது. இதைக் கேள்விப்பட்ட சாப்ளின், நொந்து போய் விட்டார். தன்னுடைய புகழைப் பயன் படுத்தி, இப்படித் தவறான முறையில் பணம் சம்பாதிக்கப் பார்க்கிறார்களே என்று அவருக்கு வேதனை. அவருடைய கவலையை மேலும் அதிகரிப்பது போல், இன்னும் சில ஒட்டு வேலைகளும் நடந்தன. 'Life' என்ற பெயரில் அவர் எடுத்துக் கொண்டிருந்த ஒரு படத்தை, பாதியாக வெட்டி ,'Police' என்ற தலைப்பில் தனிப்படமாக வெளியிட்டு விட்டது 'எஸ்னே'. (பின்னர், 1918ம் ஆண்டு, 'Life' படத்திலிருந்து வெட்டியெடுத்த மற்ற காட்சிகளையும், வேறு பெயரில் புதுப்படமாக வெளியிட்டார்கள் !) இப்படி அவர்கள் ஒட்டுப் போட்ட படங்கள் எல்லாம், பிச்சைக்காரன் வாந்தியெடுத்ததுபோல் பரிதாபமாய்ப் பல்லிளித்தன. அந்தப் படங்களைப் பார்த்த மக்களும், 'இந்த சாப்ளினுக்கு என்னாச்சு ? ஏன் இப்படி அபத்தமாப் படமெடுக்கஆரம்பிச்சுட்டார் ?', என்று உச்சுக் கொட்டலானார்கள்.

ளினை வளைத்துப் போட முயன்றன. அவருடைய இப்போதைய சம்பளத்தைப் போல் பல மடங்கு தருவதாக ஆசை காட்டி, அவரைக் கவர்ந்து இழுக்கப் பார்த்தார்கள். சாப்ளினும் இந்த விஷயத்தைத் தீவீரமாக யோசித்துப் பார்த்தார். எந்த விதத்தில் பார்த்தாலும், தன்னுடைய இப்போதைய சம்பளம் போதுமானதில்லை என்று அவருக்குத் தோன்றியது. ஆனால், அதற்காக சட்டென்று வேறு நிறுவனத்துக்குத் தாவுவதும் முடியாது. ஏனெனில், கீஸ்டோனுடன் இன்னும் நான்கைந்து மாத ஒப்பந்தம் பாக்கியிருக்கிறது. ஆகவே, அவர் நேராக மாக் சென்னெடிடம் சென்று, 'எனக்கு அதிக சம்பளம் வேண்டும்', என்றார். சாப்ளின் இப்படிக் கேட்பார் என்று ஏற்கெனவே எதிர்பார்த்திருந்த மாக் சென்னெட், அவருடைய கோரிக்கையை மறுக்கவில்லை, 'எவ்வளவு வேண்டும் ?', என்று மட்டும் கேட்டார். அதையும் முன்பே யோசித்து வைத்திருந்த சாப்ளின், 'வாரத்துக்கு ஆயிரம் டாலர்', என்றார். மாக் சென்னெடுக்கு திக்கென்றது.
ஏனெனில், 'கீஸ்டோன்' நிறுவனத்தின் முதலாளிகளில் ஒருவரான அவருக்கே, வாரத்துக்கு ஆயிரம் டாலர் சம்பளம் இல்லை ! இதை சாப்ளினிடம் பொறுமையாக எடுத்துச் சொன்னார் அவர். ஆனால் சாப்ளின் அதை ஏற்கவில்லை, 'உங்களுடைய சம்பளத்தைப் பற்றி எனக்கு என்ன அக்கறை ? மக்கள் எனக்காகத் தான் படம் பார்க்க வருகிறார்கள். ஆகவே, எனக்கு ஆயிரம் டாலர் சம்பளம் வேண்டும்', என்றார் அவர். 'அவ்வளவு சம்பளம் எங்களால் தரமுடியாது. வேண்டுமானால், உன்னை இந்த நிறுவனத்தின் பங்குதாரராகச் சேர்த்து விடுகிறேன். லாபத்தில் ஒரு பங்கு உனக்குக் கிடைக்கும்', என்றார் மாக் சென்னெட். சாப்ளின் இதை ஏற்றுக் கொண்டாரா, மறுத்து விட்டாரா தெரியவில்லை.
ஆனால், அதன் பின் கீஸ்டோனில் இருந்தவரை, அவருடைய சம்பளம் உயரவே இல்லை. ஒன்றுக்குப் பத்து வேலைகள் பார்த்த போதும், எண்ணற்ற அமெரிக்க சினிமா ரசிகர்கள் அவரை ரசித்துப் புகழ்ந்து பாராட்டிய போதும், கீஸ்டோனில் கடைசிவரை, வாரத்துக்கு நூற்றி எழுபத்தைந்து டாலர் தான் சம்பளமாய் வாங்கிக் கொண்டிருந்தார் சார்லி சாப்ளின்.
1914ம் ஆண்டில், கீஸ்டோனுக்காக சார்லி சாப்ளின் நடித்த படங்கள் சுமார் முப்பத்தைந்து. இவற்றில், ஒரே ஒரு படத்தைத் தவிர, மற்றவை அனைத்தும் ஒரு ரீல், இரண்டு ரீல் குறும்படங்கள் தான். இந்தக் குறும்படங்களில் இருபதுக்கும் மேற்பட்ட படங்களை, சாப்ளினே எழுதி, இயக்கி, நடித்திருந்தார். அந்த ஆண்டு இறுதியில், கீஸ்டோனுடனான சாப்ளினின் ஒப்பந்தம் முடியப் போகிற சமயத்தில், அந்த ஒப்பந்தத்தை நீட்டிக்கலாம் என்கிற பேச்சு தொடங்கியது. அப்போது, மீண்டும் அவருடைய சம்பளப் பிரச்சனை தலை தூக்கியது. பொன் முட்டை இடும் சாப்ளினை, கீஸ்டோன் இழக்க விரும்பவில்லை. ஆகவே, சாப்ளினின் சம்பளத்தை, கிட்டத்தட்டை ஐந்து மடங்கு உயர்த்தி, 'இப்போதைக்கு வாரம் 750 டாலர் தருகிறோம்', என்றார் மாக் சென்னெட். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாய் இந்தச் சம்பளத்தை ஏற்றுவதாகப் பேச்சு. ஆனால், இதில் சாப்ளினுக்கு சம்மதமில்லை. அவர் எதிர்பார்த்த ஆயிரம் டாலர் சம்பளம் கிடைக்கவில்லை என்பது ஒரு காரணம், அது தவிர, இன்னொரு முக்கியமான காரணமும் இருந்தது. வருடத்துக்கு 35 படங்கள் என்று பரபரப்பாய் ஓடாமல், நிறுத்தி நிதானமாக, ஒவ்வொரு படத்திலும் அதிக நேரம் செலவழித்து, இன்னும் நன்றாய்ச் செதுக்கி வெளியிட விரும்பினார் சாப்ளின்.
ஆனால், பண ருசி கண்டுவிட்ட 'கீஸ்டோன்' நிறுவனம், அதற்குச் சம்மதிக்காது தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் பொருள்களைத் தயாரித்துக் குவிப்பது போல, மீண்டும் அதிவேகப் படங்கள் எடுக்கும் படிதான் அவரை வற்புறுத்தும். இந்தக் காரணங்களால், கீஸ்டோனிலிருந்து விலகி, வேறொரு நிறுவனத்தில் சேர்வதாக முடிவெடுத்தார் சாப்ளின். ஆனால், அந்த முடிவை தைரியமாய்ச் செயல் படுத்தமுடியாத படி ஒரு தயக்கம் அவரைத் தடுத்துக் கொண்டிருந்தது. ஏற்கெனவே, 'கீஸ்டோன்' நிறுவனத்திலிருந்து பிரிந்து, வேறு சிலருக்காக தனியே படமெடுக்கக் கிளம்பிய சில நடிகர்கள், படுதோல்வி அடைந்திருந்தார்கள். ஆகவே, மக்கள் 'கீஸ்டோன்' பேனருக்காகத் தான் படத்தைப் பார்க்க வருகிறார்கள் என்பதான ஒரு மாயத் தோற்றம் இருந்தது. இப்படியொரு நிலையில், சார்லி சாப்ளின் அங்கிருந்து விலகினால், அவருடைய படங்களுக்குக் கூட்டம் குறைந்து போகுமோ என்று அவர் பயந்தார்.
யாரையோ நம்பி, 'கீஸ்டோன்' போன்ற ஒரு பெரிய கம்பெனியைப் பகைத்துக் கொள்வது புத்திசாலித்தனம் தானா ?

*8. Pay Day*
'தொன்னை நெய்க்கு ஆதாரமா ? அல்லது, நெய் தொன்னைக்கு ஆதாரமா ?', என்று நம் ஊரில் ஒரு வாசகம் உண்டு. அது போன்ற ஒரு குழப்பத்தில் தான் இப்போது சார்லி சாப்ளின் மாட்டிக் கொண்டிருந்தார் . 'கீஸ்டோன்' தயாரிப்பில் வெளிவரும் படங்கள், என்னால் ஓடுகின்றனவா ? அல்லது, நான் நடிக்கிற படங்களெல்லாம், 'கீஸ்டோன்' என்ற பெத்த பெயரில் வருவதால் தான், வெற்றியடைகின்றனவா ? இப்போது யோசிக்கும் போது, இந்த விஷயத்தில் குழப்பத்துக்கே இடமில்லை என்பது தெளிவாய்த் தெரிகிறது. ஏனெனில், அந்நாளைய ரசிகர்களிடையே சார்லி சாப்ளின் பெற்றிருந்த மாபெரும் புகழ் தான், அவருடைய படங்களை, வெளிவந்த வேகத்தில் வெற்றிப் படங்களாய்ச் செய்து கொண்டிருந்தது. இந்த உண்மை சாப்ளினுக்கும் தெரிந்தது தான். என்றாலும், அந்த வயதுக்கே உரிய ஒரு வேகத்தில், ஏதேனும் தவறான முடிவெடுத்து விடுவோமோ என்று தான் அவர் தயங்கினார். ஆனால், அதற்காக 'கீஸ்டோன்' நிறுவனத்தில் தொடரவும் அவருக்கு விருப்பமில்லை. தான் எந்த நிறுவனத்தின் சார்பாக படம் எடுத்தாலும், தன்னுடைய திறமைக்கு, ரசிகர்களிடையே நிச்சயமாய் நல்ல மரியாதை கிடைக்கும் என்ற தன்னம்பிக்கையுடன்அங்கிருந்து வெளியேறுவதாகத் தீர்மானித்தார் அவர். வெளியேறுவது சரி, ஆனால், வெளியேறி எங்கே போவது ? சாப்ளினின் புகழ் வெளிச்சத்தில் குளிர் காய விரும்பிய பல நிறுவனங்கள், அவரைத் தங்களோடு வந்து விடுமாறு அழைத்துக் கொண்டிருந்தார்கள். பல பிரபல நிறுவனங்கள், ஆயிரக்கணக்கில் சம்பளம் தருவதாகச் சொல்லி அவரை வளைத்துப் போட்டுவிட முயன்றன. ஆனால், அவர்கள் எல்லோருமே, சார்லி சாப்ளின் நிறைய படங்கள் எடுத்துத் தரவேண்டும் என்று தான் விரும்பினார்கள். 'மூணு நாளைக்கு ஒரு படம்' என்ற விகிதத்தில் பப்படம் பொறிப்பது போல் படம் எடுத்துக் குவிக்க வேண்டும். அப்போது தான், அவர்களுக்கும் காசு, சாப்ளினுக்கும் காசு ! அவசர கோலத்தில் அள்ளித் தெறிக்கும் இந்த விளையாட்டு, சாப்ளினுக்குச் சலித்து விட்டது.
இது வரை பரபரப்பாய்ப் படங்களைச் சுட்டு நிரப்பியது போதும். இனிமேலாவது, பொறுமையாக, நல்ல படங்களை எடுக்கவேண்டும். ரசிகர்கள் என்றென்றும் மறக்க முடியாத படியான படங்களைத் தர வேண்டும் என்று தான் அவர் விரும்பினார். ஆனால், அப்படி நிதானமாய்ப் படங்களை எடுப்பதானால், அதற்கு எந்தக் கம்பெனியும் ஒத்துக் கொள்ளாது என்று அவருக்குத் தோன்றியது. அதனால் என்ன ? இந்தக் கம்பெனிகளை நம்பியா நான் பிறந்தேன் ? எனக்குப் பிடித்த படங்களை, நானே தயாரித்துக் கொள்கிறேன் - இப்படியொரு முடிவுடன், சட்டென்று அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார் சாப்ளின்.
சார்லி சாப்ளின் 'கீஸ்டோன்' நிறுவனத்திலிருந்து விலகுவதற்குச் சிறிது காலம் முன்பு, அவருடைய அண்ணன் சிட்னி சாப்ளினும், அதே நிறுவனத்தில் நடிகராகச் சேர்ந்திருந்தார். இப்போது, அவரை அழைத்துப் பேசினார் சார்லி. 'அண்ணாத்தே, அண்ணாத்தே, நாம ரெண்டு பேரும் சேர்ந்து படம் எடுக்கலாம். இந்த விஷயத்தில் நீதான் எனக்கு உதவ வேண்டும்' சிட்னியிடம் சாப்ளின் கேட்டது பண உதவி அல்ல. புதிதாய் சினிமா கம்பெனி தொடங்குவதென்றால், சாதாரண காரியமா ? நிறுவனத்தைப் பதிவு செய்வதில் ஆரம்பித்து, ஆணி அடித்து போர்ட் மாட்டுவது வரை எத்தனை வேலைகள். அதையெல்லாம் ஒழுங்காய் நிர்வகிப்பதற்குத் தான் சிட்னியை அழைத்தார் அவர். ஆனால், அப்போது தான் 'கீஸ்டோன்' நிறுவனத்தில் சேர்ந்து, நல்ல நடிகராகப் பெயர் வாங்கிக் கொண்டிருந்த சிட்னிக்கு, அதைப் பாதியில் நிறுத்தி விட்டு, வேறு வேலையில் இறங்கப் பிடிக்கவில்லை. தவிர, வாரத்துக்கு இருநூறு டாலர் என்பது சிட்னி சாப்ளின் கற்பனையிலும் நினைத்துப் பார்த்திருக்காத ஒரு தொகை. எனவே, அந்தச் சம்பளத்தின் சவுகர்யங்களைத் துறக்கவும் அவர் விரும்பவில்லை. இதை அவர் நேரடியாகவே சார்லியிடம் சொல்லி விட்டார். ஆகவே, சார்லி சாப்ளினின் 'சொந்தப் பட' முயற்சி, ஆரம்பத்திலேயே நின்று போனது. இதைக் கேள்விப்பட்ட மற்ற நிறுவனங்கள் மீண்டும் அவரை மொய்க்கலானார்கள்.
அப்போது சார்லி சாப்ளின் எதிர்பார்த்த சம்பளம் - வாரத்துக்கு ஆயிரம் டாலர். இந்தத் தொகையைக் கொடுத்து, கூடவே, கொஞ்சம் அதிக சுதந்திரமும் கொடுத்து, தனக்குப் பிடித்த விதமாய், தன்னால் முடிந்த வேகத்தில் படம் எடுக்க அனுமதிக்கிற ஒரு நிறுவனத்தை தான் அவர் தேடிக் கொண்டிருந்தார். 'Essnay' என்ற நிறுவனம், அவருடைய கோரிக்கைகளை எல்லாம் ஏற்றுக் கொண்டது. சார்லி சாப்ளின் எதிர்பார்த்ததை விட அதிகமாய், வாரத்துக்கு 1250 டாலர் சம்பளமும், போதாக்குறைக்கு பத்தாயிரம் டாலர் போனஸும் தருவதாகச் சொன்னது 'எஸ்னே' (எஸ்-ன்-ஏ) நிறுவனம். சிறு யோசனைக்குப் பிறகு, அவர்களோடு இணைவதாய்த் தீர்மானித்து விட்டார் சார்லி சாப்ளின்.
1914ம் ஆண்டு இறுதியில் ஒப்பந்தம் கையெழுத்தானது. 1915 ஜனவரியில், சாப்ளின் தனது புதுப்பட வேலைகளைத் தொ

டங்கி விட்டார். ஆனால், இந்தப் புது நிறுவனத்தில் சார்லி சாப்ளினுக்கு ஏகப்பட்ட ஏமாற்றங்கள். ஒரு கட்டத்தில், கீஸ்டோனை விட்டு வெளியே வந்தது சரி தானா என்று அவரே யோசித்து வருந்தும் படி, பல விஷயங்களில் அவரை 'எஸ்னே' பாடாய்ப் படுத்தியது.
முதலாவதாக, தங்கள் நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும், சார்லி சாப்ளினுக்கு பத்தாயிரம் டாலர் தருவதாக 'எஸ்னே'தான் ஆசை காட்டியது. ஆனால், அவர் அதை ஒப்புக் கொண்டு, கையெழுத்திட்டுப் பல மாதங்களாகியும், அந்தப் பத்தாயிரம் டாலரில் கால்வாசி கூட அவருக்குத் தரப்படவில்லை. அதுபற்றி விசாரித்தால், 'அவரைக் கேள்', 'இவரைக் கேள்', 'அதோ, அந்த சுவரைக் கேள்' என்றெல்லாம் சாக்குப் போக்குகள். அதுவாவது பரவாயில்லை. தனது எல்லா வெற்றிப் படங்களையும் தானே எழுதி, இயக்கிப் பழகிய சார்லி சாப்ளினை, மற்றவர்களுடைய கதை, காட்சியமைப்புகளைப் பின்பற்றி நடிக்க வேண்டும் என்று சிலர் கட்டாயப் படுத்தினார்கள். இதுவும் அவருக்குப் பெரிய எரிச்சலைத் தந்தது. போதாக்குறைக்கு, சாப்ளினுக்குப் பிடித்த, பரிச்சயமான 'லாஸ் ஏஞ்சலஸ்' நகரில் படப்பிடிப்புகளை நடத்த விடாமல், சிகாகோவிலும், நைல்ஸிலும் தான் அவர் தனது படங்களை எடுக்க வேண்டும் என்று இந்தப் புதுக் கம்பெனி எதிர்பார்த்தது. இதற்கெல்லாம் சிகரம் வைப்பது போல், வேறொரு புதிய பிரச்சனையும் முளைத்தது - 'Essnay' கம்பெனியின் நிறுவனர்களில் ஒருவரான கில்பர்ட் ஆண்டர்ஸன் (Gilbert Anderson), பல 'கௌபாய்' வேடங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். அவர், சார்லி சாப்ளினின் பட விவகாரங்களில் அடிக்கடி தலை நீட்டி, தேவையில்லாத பல திருத்தங்களைச் சொன்னதாகவும், சாப்ளின் எப்படிப் படமெடுக்க வேண்டும் என்று அவருக்கே ஆலோசனை சொல்ல முயன்றதாகவும் சொல்லப்படுகிறது.
மொத்தத்தில், சுதந்திரமாய்ப் படமெடுக்க வேண்டும் என்கிற ஆசையில் 'கீஸ்டோன்' நிறுவனத்திலிருந்து வெளியேறிய சாப்ளின், இங்கே பலவிதமான கட்டுப்பாடுகளில் சிக்கிக் கொண்டு, படம் எடுக்கிற ஆர்வத்தையே இழந்தவர் போல் சுற்றிக் கொண்டிருக்க நேர்ந்தது. இந்தக் களேபரங்களுக்கெல்லாம் அடிப்படையான ஒரு காரணம், சார்லி சாப்ளினின் மகிமை, இந்தப் புது நிறுவனத்துக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு வேகத்தில் அவரை ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். ஆனால், 'இந்த ஆள் சரிப்படுவாரா ? இவரைத் தவிர மற்ற நடிகர்களுக்கெல்லாம் வாரத்துக்கு நூறு டாலர், ஐம்பது டாலர் தானே சம்பளம் ? இவருக்கு மட்டும் இவ்வளவு சம்பளம் அள்ளிக் கொடுக்கிறோமே, இது சரிதானா ? அந்த அளவுக்கு அவருடைய படங்கள் ஓடுமா ? லாபம் வருமா ?' என்றெல்லாம் பலவிதமான கணக்குகளைப் போட்டுப் பார்த்த முதலாளிகள், ஒரு திருப்தியான முடிவுக்கு வர முடியாமல் திணறினார்கள். ஆகவே, சாப்ளின் அலட்சியப் படுத்தப்பட்டார்.
நல்ல வேளையாக, சீக்கிரத்திலேயே இந்த நிலைமை மாறியது. ரசிகர்களிடையே சாப்ளினுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு, வரவேற்பையும், அவருடைய படங்களுக்குக் கிடைக்கும் அதீத கவனம், மரியாதையையும் புரிந்து கொண்டபின், 'எஸ்னே' நிறுவனத்தின் முழு ஒத்துழைப்பும் சாப்ளினுக்குக் கிடைத்தது. 'கீஸ்டோன்' நிறுவனத்தில் இருந்த வரை, ஒரு வருடத்துக்கும் குறைவான கால கட்டத்தில், சுமார் 35 படங்களில் பங்கேற்ற சார்லி சாப்ளின், இப்போது அந்த வேகத்தைக் குறைத்துக் கொண்டு, தனது படங்களை மேலும் மெருகேற்றும் முயற்சியில் இறங்கினார். அப்போதெல்லாம், படப்பிடிப்பின் போது செலவாகும் திரைப்படச் சுருளின் நீளம் தான், ஒரு படத்தின் பட்ஜெட்டைத் தீர்மானித்தது. ஆகவே, ஒரு காட்சியை ஒழுங்காய்ப் படமாக்குவதற்குள், இயக்குனர்களுக்கு நுரை தள்ளி விடும். பலமுறை ஒத்திகை பார்த்து, ஒரே முயற்சியில் சரியாக எடுக்க வேண்டும் என்று தான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள், முயன்றார்கள். அந்த ஒரே 'ஷாட்'டில் யாரேனும் ஒரு நடிகர் தவறு செய்து விட்டாலோ, சுமாராக நடித்து விட்டாலோ கூட, யாரும் கவலைப்பட மாட்டார்கள். 'பரவாயில்லைப்பா', என்று சொல்லிக் கொண்டு அடுத்த காட்சிக்குப் போய் விடுவார்கள். பின்னே ? அந்தக் காட்சியை இன்னொரு முறை படமாக்குவதென்றால், அதற்கு ஆகும் படச்சுருளின் விலையை இயக்குனரின் முப்பாட்டனாரா தருவார் ? அன்றைய திரைப்பட உலகம், இப்படிப்பட்ட சிந்தனையைச் சுற்றி தான் அமைந்திருந்தது.
ஒரு படத்தில் கதை முக்கியமில்லை, நடிகர்கள் முக்கியமில்லை, காட்சி அமைப்புகள் முக்கியமில்லை, யதார்த்தம் முக்கியமில்லை, எதுவும் முக்கியமில்லை - படச்சுருளை வீணாக்கக் கூடாது, அது ஒன்று தான் முக்கியம். இப்படிப் பணப் பெட்டியின் மீது கண்ணை வைத்துக் கொண்டு படமாக்கினால், அமர காவியங்களா படைக்க முடியும் ? பெரும்பாலான படங்கள், பலவிதமான குறைகளுடன், அரை வேக்காடுகளாகவே வெளியாகிக் கொண்டிருந்தன. இத்தனைக்கும், அந்தக் கால நடிகர்கள், இயக்குனர்களின் திறமையில் ஒரு குறையும் சொல்லி விடமுடியாது. அந்த நாள் மௌனப் படங்களையெல்லாம், இன்னும் நிதானமாக, யோசித்துச் செய்திருந்தால், மேலும் சிறப்பாக வந்திருக்கும் என்று தா

ன் திரை விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இந்தக் கால கட்டத்தில் தான், ஒரு புதிய சிந்தனையாளராக சார்லி சாப்ளின் தோன்றினார். அவசர கதியில் படங்களை எடுத்துத் தீர்ப்பது முக்கியமில்லை. நல்ல, அழுத்தமான கதை அல்லது காட்சிகளை அமைக்க வேண்டும். அவசியப் பட்டால், ஒரே காட்சியை இரண்டு முறை, மூன்று முறை, பலமு றை படமாக்கலாம் என்றெல்லாம் முடிவு செய்து, அவற்றைச் சிறப்பாகப் பின்பற்றிய இயக்குனர் அவர். ஒரு காட்சியைப் பலமுறை எடுக்கும் போது, ஒவ்வொரு முறையும் அதில் மெருகேறுகிறது என்பதை, சார்லி சாப்ளின் அனுபவப் பூர்வமாய் உணர்ந்தார். அவருடைய முந்தைய படங்களோடு ஒப்பிடும் போது, இந்தப் படங்கள் மிகச் சிறப்பாக, நல்ல தரத்துடன் உருவாகின. சாப்ளின் படங்களில் வெறும் நகைச்சுவை மட்டுமின்றி, அனுபவித்து ரசிப்பதற்கான அழகியல் வெளிப் பாடுகளும், கலை அம்சங்களும், மனித உணர்வுகளும் சிறப்பாக வெளிப்படத் தொடங்கிய காலகட்டம் இது.
இந்த மாற்றத்துக்கு முக்கியக் காரணமாய் அமைந்தவர், ஒரு பெண் - அமெரிக்கத் திரைப்பட உலகில் குறிப்பிடத்தக்க ஒரு இடத்தைப் பிடித்த பின், சார்லி சாப்ளின் தனக்காகத் தேடிக் கண்டு பிடித்த முதல் கதாநாயகி அவர். 'எஸ்னே' நிறுவனத்தின் ஒரு ஸ்டூடியோ, 'நைல்ஸ்' என்ற கிராமத்தில் இருந்தது. அங்கே தங்கி, தனது புதிய படத்துக்காகத் தயாராகிக் கொண்டிருந்த சார்லி சாப்ளின், தன்னோடு சேர்ந்து நடிப்பதற்காக ஒரு நல்ல நடிகையைத் தேடிக் கொண்டிருந்தார். சார்லி சாப்ளினுடன் நடிப்பதென்றால், கசக்குமா ? ஏகப்பட்ட பெண்கள் விண்ணப்பம் போட்டார்கள். ஆனால், அவர்களில் யாரையும் சாப்ளினுக்குப் பிடிக்கவில்லை. வெறும் அழகு மட்டும் போதாது, நகைச் சுவையில் தனக்கு இணையாக ஈடு கொடுத்து நடிக்கக்கூடிய ஒரு திறமையான பெண்ணைத் தான் அவர் எதிர்பார்த்தார். அப்போது தான், யாரோ ஏட்னாவைப் பற்றிச் சொன்னார்கள். 'ஏட்னா' என்று செல்லமாய் அழைக்கப்படும் 'ஏட்னா பர்வியான்ஸ்'(Edna Purviance)க்கு, திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசையோ, ஆர்வமோ இருக்கவில்லை. ஆனால், ஒரு காபிக் கடையில் அவரை அடிக்கடி பார்த்திருந்த ஒருவர், சார்லி சாப்ளினிடம் ஏட்னாவை சிபாரிசு செய்திருக்கிறார். சாப்ளினும் உடனடியாகக் கிளம்பிச் சென்று ஏட்னாவைச் சந்தித்தார். சாப்ளினுக்கு ஏட்னாவைப் பிடித்திருந்தது. என்றாலும், அவர் முகத்தில் ஒரு மெலிதான சோகம் படர்ந்திருப்பதாக அவர் நினைத்தார். இந்தப் பெண் நகைச்சுவை நடிப்புக்குச் சரிப்படுமா என்று அவருக்கு சந்தேகமாகவே இருந்தது. ஆனால், அதுவரை பார்த்த பெண்களில், ஏட்னா தான் ஓரளவு பரவாயில்லை என்பதால், அரை மனதாக, அவரையே தனது படத்தில் ஒப்பந்தம் செய்தார் சாப்ளின்.
பின்னர், ஏட்னாவுடன் நெருங்கிப் பழகிய சாப்ளின், அவருக்கு அபாரமான நகைச்சுவை உணர்வு இருப்பதைப் புரிந்து கொண்டார். அதை அப்படியே திரைக்குக் கொண்டுவந்து, தன்னுடைய நகைச்சுவைப் படங்களில் அற்புதமாய்ப் பயன் படுத்திக் கொண்டார். சார்லி சாப்ளினும், ஏட்னா பர்வியான்ஸும் இணைந்து நடித்த முதல் படம், 'A Night Out'. அதன் பிறகு, அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு, கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் சாப்ளினுக்கு ஜோடியாக நடித்து, நகைச்சுவைத் திரைப் படங்களில் வரலாற்றில் ஒரு முக்கிய நடிகையாகப் பெயர் பெற்றார் ஏட்னா பர்வியான்ஸ். திரைப் படங்களுக்கு வெளியேயும், சாப்ளினுக்கு ஒரு நல்ல தோழியாக இருந்தார் ஏட்னா. தன்னுடைய அம்மாவுக்குப் பிறகு, சார்லி சாப்ளின் அதிகம் நெருங்கிப் பழகிய பெண், ஏட்னாவாகத் தான் இருக்கும் !
ஏட்னாவின் பாசம் கலந்த தோழமை, சார்லி சாப்ளினுக்குள்ளிருந்த மென்மையான மனிதரை வெளிக் கொண்டு வந்தது. அதன் பிறகு தான் அவருடைய படங்களில் நெகிழ்ச்சியூட்டும் மனித உணர்வுகளின் யதார்த்தமான படப்பிடிப்புகளும், நகைச்சுவையோடு, ஒரு துளி சோகமும் கலந்த சென்டிமென்ட் சித்தரிப்புகளும் இடம் பெறத் தொடங்கின. இதற்கு உதாரணமாக, சார்லி சாப்ளினின் படங்களிலேயே மிகச் சிறந்தவற்றின் பட்டியலில் இடம் பிடித்த, 'The Tramp' என்ற படத்தைக் குறிப்பிடலாம். வழக்கமான நகைச்சுவைக் கதை தான். எப்போதும் போல், ஊர் ஊராய்ச் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் நாடோடி சாப்ளின், யதேச்சையாக ஒரு பெண்ணைச் (ஏட்னா) சந்திக்கிறார். ஒரு சண்டையில் அடிபட்டுக் கொண்டிருந்த சாப்ளினுக்கு, அந்தப் பெண் பணிவிடைகள் செய்கிறாள். அன்போடு அவரை கவனித்துக் கொண்டு, சீக்கிரத்தில் நலம் பெறச் செய்கிறாள். அவளுடைய இந்தப் பாசத்தை, 'காதல்' என்று தப்பாய்ப் புரிந்து கொள்கிறான் அந்த நாடோடி. அந்த நினைப்பில் உச்சி குளிர்ந்து, அவள் மீது அளவற்ற பிரியத்தையும், காதலையும் வளர்த்துக் கொள்கிறான். கடைசியில், அவள் ஏற்கெனவே இன்னொருவனைக் காதலிக்கிறாள் என்று தெரிந்து கொள்கிறான். பயங்கர ஏமாற்றம். வேதனை. மேலோட்டமாய்ப் பார்க்கும் போது, 'ஒரு நகைச்சுவைப் படத்துக்கு இப்படியா சோகமான முடிவு வைப்பார்கள் ?', என்று தான் நினைக்கத் தோன்றும். ஆனால், அப்படி நினைக்கிறவர்கள், 'The Tramp' படத்

வருக்கொருவர் ஆறுதலாகவும், நல்ல துணையாகவும் பழகியவர்கள், ஒருவர் மீது மற்றவர் மிகுந்த பாசம் கொண்டவர்கள். சார்லி சாப்ளின், மேடை நாடகங்களிலும், பிற கலை நிகழ்ச்சிகளிலும் தனக்கான எதிர்காலத்தைத் தேடிக் கொண்டிருந்த போது, அதே துறையில் அவரோடு பயணம் செய்து கொண்டிருந்த சிட்னி, அவருக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருந்தார். குறிப்பாக, சார்லி சாப்ளினின் பண விவகாரங்களையெல்லாம் சிறப்பாகப் பார்த்துக் கொண்டவர் சிட்னி தான் ! நாடகக் கம்பெனிகளிலும், திரைப் படங்களில் நடிக்கத் தொடங்கிய பிறகும் கூட, யாரிடம் எப்படிப் பேச வேண்டும், தன்னுடைய நடிப்புக்கு எவ்வளவு சம்பளம் கேட்பது, அவர்கள் அதைக் கொடுக்க மறுத்தால் என்ன செய்யலாம், இந்தச் சம்பளத்தைப் பெறுவதற்குத் தனக்குத் தகுதி உண்டு என்பதை எப்படி அவர்களுக்கு எடுத்துச்சொல்வது - இப்படி எந்த விஷயத்திலும் சார்லி சாப்ளினுக்குப் பரிச்சயமில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களிலெல்லாம், அண்ணன் சிட்னி சாப்ளினைப் பேசவிட்டு, அவர் சொல்வதை அப்படியே கேட்டுக் கொள்வார் சார்லி சாப்ளின். இப்படி ஏராளமாய்ச் சம்பாதித்தாலும், அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று சார்லி சாப்ளினுக்குத் தெரியாது. ஆகவே, அவருடைய சேமிப்பையெல்லாம், சரியான இடங்களில் முதலீடு செய்து, பல மடங்காய்ப் பெருக்கினார் சிட்னி. முன்பு, சார்லி சாப்ளினை வைத்து ஏகத்துக்கு சம்பாதித்துக் கொழித்துக் கொண்டிருந்த 'எஸ்னே' நிறுவனத்துடன் தீவீரமாய் வாதாடி, அவருக்குக் கை நிறைய போனசும், கூடுதல் சம்பளமும் வாங்கித் தந்தவர் சிட்னி தான்.
இப்போது, 'ம்யூச்சுவல்' நிறுவனத்துடனான பேச்சு வார்த்தைகளிலும், அவருடைய பங்குதான் முக்கியமானது. (இதை உணர்ந்த சார்லி சாப்ளின், தனக்குக் கிடைத்த போனஸ் தொகையில் பாதியை, சிட்னி சாப்ளினுக்குக் கொடுத்து விட்டார் என்று சொல்லப்படுகிறது !) 'ம்யூச்சுவல்' நிறுவனத்துக்காக, பன்னிரண்டு குறும் படங்களை எடுத்துத் தருவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சார்லி சாப்ளின், 1916ம் ஆண்டு தொடக்கத்தில் தனது வேலைகளை ஆரம்பித்தார். அதே ஆண்டு மே மாதம், 'The Floorwalker' என்ற முதல் படம் வெளியானது. நகைச்சுவை பொங்கும் அந்தப் படம், ஒரு அட்டகாசமான ஆரம்பம். முந்தைய ஆண்டுகளின் கசப்பான அனுபவங்களை மறந்து, இதமான சூழலில், அருமையான பல படங்களை எடுக்கத் தொடங்கினார் சார்லி சாப்ளின். சாப்ளினுக்கு 'ம்யூச்சுவல்' நிறுவனம் மிகச் சிறப்பான ஒத்துழைப்பைக் கொடுத்தது. சாப்ளினுக்கென்று ஒரு தனி படப்பிடிப்புத் தளத்தை (Lone Star Studio) ஒதுக்கித் தந்து, எந்தவிதத்திலும் அவருடைய வேலையில் குறுக்கிடாமல், ஆனால், அவருக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்து தந்து, அவருடைய படங்களைச் சிறப்பாக விநியோகித்தார்கள். ஆகவே, எந்தப் பிரச்சனைக்கும் தலையைக் கொடுக்காமல், தனது படங்களின் தரத்தை மேம்படுத்துவதில் மட்டும் தீவீர கவனம் செலுத்தினார் சார்லி சாப்ளின்.
'என்னுடைய திரைப்பட வாழ்க்கையிலேயே, மிகவும் சந்தோஷமான காலகட்டம்', என்று 'ம்யூச்சுவல்' நிறுவனத்துக்காகப் பணியாற்றிய காலத்தைக் குறிப்பிடுகிறார் சார்லி சாப்ளின். இதற்கு முக்கியமான காரணம், இந்தக் காலகட்டத்தில் வெளிவந்த சாப்ளினின் படங்கள் அனைத்தும், மௌனத் திரைப்பட வடிவத்தின் சகல சாத்தியங்களையும் புரிந்து கொண்டு, அவற்றை மிகச் சிறப்பாகப் பயன் படுத்தியவை. புதுமையான கதைகள், காட்சியமைப்புகள், கச்சிதமான திரைக்கதை, பொங்கும் நகைச்சுவை என்று ஒவ்வொரு அம்சத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்திருந்தார் சாப்ளின். இப்போதும், உலக திரைப்படங்களை அலசும் விமர்சகர்களும், மாணவர்களும், சாப்ளினின் 'ம்யூச்சுவல்' படங்களைப் பாடமாய்ப் பார்த்துப் பரவசப் படுகிறார்கள். தவிர, 'ம்யூச்சுவல்' நிறுவனத்திற்கு உலகமெங்கும் கிளைகள் இருந்தன. ஆகவே, அமெரிக்காவின் உச்ச நட்சத்திரமாய் இருந்த சார்லி சாப்ளினின் படங்களை, பல வெளி நாடுகளுக்கும் கொண்டு சென்று, சிறப்பாக விளம்பரம் செய்து, அவருக்கு உலகப்புகழ் தேடித் தந்தது 'ம்யூச்சுவல்' !
இதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், 1931ம் ஆண்டு, சார்லி சாப்ளின் உலக சுற்றுலா சென்ற போது, எங்கோ பூமிப் பந்தின் ஒரு மூலையில், யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொண்டிருக்கிற, குட்டியூண்டு 'பாலி'த் தீவில் கூட, அவருடைய படங்களுக்கு ரசிகர்கள் இருப்பதைக் கண்டு கொண்டார். ஆகவே, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு, சார்லி சாப்ளினின் படங்களுக்குத் தேவை கூடியது. அவரைத் தேடிப் பார்த்து ரசிக்கும் ஆர்வலர்கள் அதிகமானார்கள். அந்த உற்சாகத்தில், மேலும் அதிக தீவீரத்துடன் தனது படங்களைச் செதுக்கலானார் சாப்ளின்.
1916 - 17 ஆண்டுகளில், கிட்டத்தட்ட பதினெட்டு மாதங்கள் உழைத்து, 'ம்யூச்சுவல்' நிறுவனத்துக்காக மொத்தம் பன்னிரண்டு படங்களை இயக்கி, நடித்தார் சார்லி சாப்ளின். இந்தப் படங்களில், 'The Immigrant', 'Easy Street', 'The Pawnshop', 'The Vegabond' ஆகியவை குறிப்பிடத்தக்க படைப்புகள். இந்தப் படங்களுள், 'The Immigran

*9. The Gold Rush*
ஒரு காலத்தில், 'மாடர்ன் தியேட்டர்ஸ்' நிறுவனத்துக்காக, ஏகப்பட்ட டுமீல் - டுமீல் படங்களில் நடித்தார் ஜெய்சங்கர். அவர் எந்தப் படத்தில் யாரைச் சுடுகிறார், எதற்காகச் சுடுகிறார், எந்தப் படத்தில் யாரோடு காதல் கொள்கிறார் என்றெல்லாம் சரியாய்ப் புரியாமல், ஒருவித மயக்கத்திலேயே அந்தப் படங்களைப் பார்த்து, வெற்றிப் படங்களாக்கினார்கள் ரசிகர்கள். அது போல, சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில், ஏராளமான 'கௌபாய்' படங்களுக்காகப் புகழ்பெற்றது 'எஸ்னே' நிறுவனம். புழுதி பறக்க ஓடும் குதிரைகளும், ஓயாத துப்பாக்கிச் சத்தங்களும் தான், 'எஸ்னே' படங்களின் நிரந்தர அடையாளமாய் இருந்தது. இன்னும் குறிப்பாய்ச் சொல்வதானால், அந்த நிறுவனத்தின் சின்னமே, ஒரு செவ்விந்தியரின் தலை தான் ! 'எஸ்னே' நிறுவனத்தின் இந்த 'அடிதடி' பிம்பத்தோடு கொஞ்சமும் சம்பந்தமில்லாத சார்லி சாப்ளின், அங்கே வந்து மாட்டிக் கொண்டது காலத்தின் கட்டாயம் என்று தான் சொல்ல வேண்டும்.
என்றாலும், நாம் முன்பே பார்த்தது போல், 'எஸ்னே'வில் அவருக்கு நல்ல மரியாதை கிடைத்தது. தன்னுடைய ஆரம்பகால திரை வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க பல படங்களை 'எஸ்னே'வுக்காகத் தந்தார் சார்லி சாப்ளின்.
(சுருக்கமான ஒரு பட்டியல் : 'The Champion', 'In the Park', 'The Tramp' & 'A Night out in the show').
'கீஸ்டோன்' நிறுவனத்தோடு ஒப்பிடுகையில், 'எஸ்னே'வில் சாப்ளின் ரொம்பவே சந்தோஷமாய் இருந்தார். குறைவான படங்கள், நிறைவான இயக்கம் என்று தனது திரைப் பாதையை மெருகேற்றிக் கொண்டார். ஆனால், இந்தத் திருப்தியில் ஒரு லாரி மண்ணை அள்ளிக் கொட்டுவது போல், திடீரென்று 'எஸ்னே' நிறுவனத்தினர் சாப்ளினிடம் ரொம்ப முரட்டுத் தனமாய் நடந்து கொள்ளத் தொடங்கினார்கள். அவருடைய பழைய படங்களையும், 'அடாசு' என்று வீசியெறிந்த காட்சிகளையும் தூசு தட்டி எடுத்து, புதிய பெயர்களில் அரைவேக்காடுப் படங்களாய் வெளியிட்டுப் பணம் செய்தார்கள். பணப்பிரச்சனை எல்லாம் இரண்டாம் பட்சம். அவர்கள் தன்னுடைய படைப் புரிமையை காயப்படுத்தி விட்டார்களே என்பது தான் சாப்ளினுக்குத் தாங்க முடியாத வருத்தமாய் இருந்தது. (இந்தக் கெட்டதிலும் ஒரு நல்லது - பின்னாள்களில், தன்னுடைய படங்கள் எல்லாவற்றின் உரிமையும், தனக்கே சேரும்படி பார்த்துக் கொண்டார் சார்லி சாப்ளின்) இப்படியாக, பல காரணங்களை முன்னிட்டு, 'எஸ்னே'விலிருந்து சார்லி சாப்ளின் வெளியேற வேண்டிய கட்டாயம் உண்டாகி விட்டது. இதைத் தெரிந்து கொண்ட அவருடைய அண்ணன் சிட்னி சாப்ளின், உடனடியாக நியூயார்க் விரைந்தார். சாப்ளினின் பிரதிநிதியாக, அவரை வைத்துப் படமெடுக்க விரும்பிய வெவ்வேறு தயாரிப்பு நிறுவனங்களை அழைத்துப் பேசினார். ஏற்கெனவே இரண்டு முறை சூடுபட்டுக் கொண்ட சார்லி சாப்ளின், இந்த முறை தனது நிபந்தனையைத் தெளிவாகச் சொல்லி விட்டார் . இப்படிப் படமெடுக்க வேண்டும், அப்படி எடுக்க வேண்டும் என்றெல்லாம் யாரும் எனக்கு அறிவுரை சொல்லக்கூடாது. கட்டளை இடக்கூடாது. நான் மெதுவாகத் தான் படம் எடுப்பேன். எனக்கு முழுத் திருப்தி உண்டாகும் வரை விட மாட்டேன். அதற்கு மூன்று மாதமானாலும் சரி, மூன்று வருடமானாலும் சரி ! நீங்கள் படத்தின் தரத்தைத் தான் பார்க்க வேண்டும். சீக்கிரமாய்ப் பணம் பண்ணலாம் என்ற பேராசை எண்ணத்தோடு என்னிடம் வராதீர்கள் ! அப்போது அவரை அணுகிய நிறுவனங்களிடையே, 'ம்யூச்சுவல்' (Mutual) என்ற படக் கம்பெனியை சார்லி சாப்ளினுக்குப் பிடித்திருந்தது. தொடர்ந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின், சாப்ளினுக்கு, வாரம் பத்தாயிரம் டாலர் சம்பளமும், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் டாலர் போனஸ் தொகையும் தருவதாக அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டது. இங்கே ஒரு சிறிய மனக்கணக்கு - 1914ல் சாப்ளினின் சம்பளம், வாரத்துக்கு நூற்றைம்பது டாலர், அதன் பிறகு, வாரத்துக்கு நூற்றி எழுபத்தைந்து டாலர். அடுத்த வருடம், 'எஸ்னே'வில் சேர்ந்த போது, வாரத்துக்கு 1250 டாலர், இப்போது, 'ம்யூச்சுவல்' நிறுவனத்தோடு இணையும் போது, அதைப் போல் பல மடங்கு - வாரத்துக்குப் பத்தாயிரம் டாலர் சம்பளம் ! அது தான் சார்லி சாப்ளின்.
அவருடைய படங்கள் ஒவ்வொன்றும், அவருக்காகத் தான் ஓடுகின்றன என்று நிச்சயமாய்த் தெரிந்து கொண்டிருந்த பட அதிபர்கள், அவர் எத்தனை டாலர் சம்பளம் கேட்டாலும் தருவதற்குத் தயாராய் இருந்தார்கள். எப்படியாவது, தங்கள் பட நிறுவனத்தில் சாப்ளின் நடித்தால் போதும், தங்கள் வீட்டில் பண மழை கொட்டுவது நிச்சயம் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில், சார்லி சாப்ளினின் அண்ணன் சிட்னி சாப்ளினைப் பற்றியும் சில வரிகள் சொல்ல வேண்டும். சிறுவயதில், சார்லி அனுபவித்த அத்தனை துயரங்களையும், அவரோடு பகிர்ந்து கொண்ட ஆத்மார்த்தமான தோழர் சிட்னி. மனநலக் குறைவால் அம்மாவைப் பிரிந்தே வாழ்ந்த இந்தச் சகோதரர்கள், ஒரு

பிறகு, விளம்பரம் செய்வது, உலகமெங்கும் விநியோகிப்பதெல்லாம் அவர்களின் பொறுப்பு. கிடைக்கும் லாபத்தில் இருவருக்கும் பாதி - பாதி. இங்கே தான், அந்த நிறுவனத்துக்குக் கொஞ்சம் மனக் கசப்பு. சார்லி சாப்ளின் வேண்டுமென்றே மெதுவாகப் படம் எடுக்கிறார், இரண்டு ரீல் படத்துக்கு யானை விலை, குதிரை விலை சொல்கிறார் என்றெல்லாம் அவர்கள் சண்டைபோடத் தொடங்கினார்கள். இந்த விஷயத்தில் சார்லி சாப்ளின் எந்த சமரசத்துக்கும் தயாராய் இல்லை. 'காசைக் கண்ணிலேயே காட்ட மாட்டேன் என்று கருமித்தனம் செய்தால், வெறும் வைக்கோல் தான் வாங்க முடியும். என்னுடைய படங்கள் ஒவ்வொன்றும் சொக்கத் தங்கம், அவற்றை மெருகேற்றி, எல்லோரும் பார்க்கும்படி செய்வதற்கு, ரொம்ப நேரமாகும், ரொம்ப செலவாகும், அந்தத் தரத்தை அனுபவிக்க வேண்டுமானால், நீங்கள் அதிகக் காசு செலவழிக்க தான் வேண்டும் !' இப்படி இருதரப்பினரும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால், நடுவே சிக்கிக் கொண்டு விட்ட சார்லி சாப்ளினின் படங்கள் என்ன ஆவது ?
நல்ல வேளையாக, சிட்னி சாப்ளினின் முயற்சியில், சார்லி சாப்ளினுக்கும், அவருடைய விநியோக நிறுவனத்துக்கும் இடையே மீண்டும் சுமுக உறவு ஏற்பட்டது. அவசரப்படாமல், தரமான, நல்ல படங்களை எடுத்து வெளியிடுவது தான் இருவருக்குமே நல்லது என்னும் சார்லி சாப்ளினின் கருத்தை, 'ஃபர்ஸ்ட் நேஷனல்' ஏற்றது. பின்னர், அவருடைய படங்கள் ஒவ்வொன்றாய் வெளிவரத் தொடங்கின. என்றாலும், இந்தச் சந்தோஷமும், தோழமையும் வெகு நாளுக்கு நீடிக்கவில்லை. அநேகமாய் சார்லி சாப்ளினின் ஒவ்வொரு படம் தயாராகும் போதும், அவருக்கும், 'ஃபர்ஸ்ட் நேஷனல்' நிறுவனத்தாருக்கும் இடையே குடுமிபிடிச் சண்டை தான் நடந்து கொண்டிருந்தது. இந்தக் களேபரங்களுக்கு இடையே, சாப்ளினுக்கு மிகுந்த நிறைவளித்த ஒரு விஷயம், அவருடைய படங்கள் ஒவ்வொன்றும், எதிர்பார்த்ததை விட அதிக நாள்கள் எடுத்துக் கொண்டு, கணக்கிட்டதைவிட அதிக டாலர்களை விழுங்கிய போதும், யாரும் குறைசொல்ல முடியாதபடி அருமையான தரத்தில் வெளிவந்து கொண்டிருந்தன.
அப்போது தான், இரண்டு முக்கியமான சம்பவங்கள் - ஒன்று, சார்லி சாப்ளினின் வீட்டு விவகாரம்.
இன்னொன்று, நாட்டு விவகாரம்.
இல்லை, உலக விவகாரம் !
சார்லி சாப்ளின் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய அதே காலகட்டத்தில் தான், முதலாவது உலகப் போரும் தொடங்கியது. என்றாலும், அந்தப் போரில் சாப்ளின் நேரடியாய்ப் பங்கு கொள்ளவில்லை. ஆனால், அமெரிக்கா முழுவதும், போர் நிவாரணச் சேவைகளுக்காக நிதி திரட்டும் பணி நடைபெற்ற போது, அதில் ஆர்வத்துடன் பங்கேற்று, அதற்கென பல பொதுக்கூட்டங்கள், பிற நிகழ்ச்சிகளை நடத்தித் தந்தார் சார்லி சாப்ளின். இதற்காக, அவர் நாடெங்கும் சுற்றுப் பயணங்கள் செல்ல வேண்டியிருந்தது. சென்ற இடமெல்லாம், அவரைப் பார்ப்பதற்காக மக்கள் ஆயிரக்கணக்கில் வந்து குவிந்தார்கள். அந்தக் கூட்டங்களில் அமெரிக்கப் போர் நிதிப் பத்திரங்கள் ஏராளமாய் விற்றன. அவருடைய திரைப் பிரபல்யம், மக்களிடையே நிறைய நிதி சேர்க்க உதவியது. இது தவிர, 'The Bond' என்ற தலைப்பில், போர் நிதி சேகரிப்பு பற்றி ஒரு சிறிய விளம்பரப் படத்தையும் எடுத்துத் தந்தார் சார்லி சாப்ளின். அழுத்தமானதொரு செய்தியைச் சொன்ன அந்தப் படம் வெகுவாய்ப் பிரபலமடைந்தது. இதன்மூலம், சாப்ளினின் நிதி சேர்ப்பு முயற்சிகள் மாபெரும் வெற்றியடைந்தன. பின்னர், 'Shoulder Arms' என்ற தலைப்பில், சில போர் முனைக் காட்சிகளை நகைச்சுவையாய்ச் சித்தரித்து ஒரு படம் எடுத்தார் சாப்ளின். அந்தப் படமும் ரசிகர்கள், விமர்சகர்களின் பரவலான பாராட்டுகளைப் பெற்றது, பெரும் வெற்றியடைந்தது. ஒரு வழியாக, போர் ஓய்ந்து, குண்டுச் சப்தங்கள் தீர்ந்து, உலகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.
உலக நாடுகள் அனைத்தும், மறுபடி அமைதியை சுவாசிக்கத் தொடங்கியிருந்த அதே சமயத்தில், சார்லி சாப்ளினின் வீட்டில் ஒரு பெரிய சோகம். அதைப் பற்றி விரிவாகப் பார்க்குமுன், நாம் சில வருடங்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டும். முதல் உலகப் போர் மும்முரமாய் நடைபெற்றுக் கொண்டிருந்த கால கட்டத்தில், சார்லி சாப்ளினின் சொந்த வாழ்க்கையில் ஒரு பெரிய விபத்து நடந்தது.
அவருடைய வாழ்க்கையின் முதல் கலகப் போர், அல்லது முதல் அக்கப்போர் !

*10. Twenty Minutes of Love*
பதினைந்து வயதில், சார்லி சாப்ளினின் முதல் காதல், நாடக மேடையின் மீது. பின்னர், அதே காதலை, திரைப் படங்களின்மேல் மாற்றிக் கொண்டார். கடைசி வரை தீராத இந்த இரு காதல்களுக்கும் இடையே, நிஜ வாழ்க்கையிலும் சாப்ளின் ஒரு 'காதல் மன்னர்'தான் ! மொத்தம் நான்கு கல்யாணங்கள். ஒவ்வொரு முறையும், தன் வயதில் பாதி, அல்லது கால்வாசி வயதுடைய சின்னப் பெண்களைத் தான் காதலித்து மணந்தார் சார்லி சாப்ளின். இது தவிர, அவர் புகழின் உச்சியில் இருந்த போது, வேறு பல நடிகைகள், பிரபல பெண்களுடன் அவருக்குக் காதல் என்று வதந்திகள் வந்து கொண்டேயிருந்தன. ஆனால், இந்த கலாட்டா காதல்களும், காதல் கலாட்டாக்களும் அவருடைய வாழ்க்கையை ஆக்கிரமிப்பதற்கு முன்பாக, சாப்ளினின் இளவயதில், ஒரு மென்மையான முதல் காதலும், முதல் பிரிவின் சோகமும் இருக்கிறது. அந்தப் பெண்ணின் பெயர், ஹெட்டி கெல்லி (Hetty Kelly). லண்டன் மேடைகளில் இளைஞர் சாப்ளின் தனது எதிர்காலத்தைத் தேடிக் கொண்டிருந்த போது தான், பதினைந்து வயது நடனப் பெண் ஹெட்டி அவருடைய கண்களில் பட்டாள். 'கண்ணில் பட்டாள்' என்று நாம் சாதாரணமாய்ச் சொல்லி விடுகிறோம். ஆனால், இதே வாசகத்தை, சார்லி சாப்ளின் எழுதியிருந்தால், 'கண்ணெதிரே தோன்றினாள்' என்று தான் பரவசமாய்ச் சொல்லியிருப்பார். அந்த அளவுக்கு, முதல் பார்வையிலேயே அவளுடைய அழகு சாப்ளினைக் கவர்ந்திழுத்து விட்டது. கள்ளமற்றுச் சிரிக்கும் அந்தப் பழுப்புக் கண்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது அவருக்கு. சாப்ளினைப் போலவே, ஹெட்டியும் ஒரு மேடைக் கலைஞர் என்பதால், அவர்கள் அடிக்கடி சந்திப்பதற்கான சந்தர்ப்பங்கள் தானாய்க் கிடைத்தன. மேடைகளில் வெவ்வேறு நாடகங்கள் நடந்து கொண்டிருக்க, அந்த மேடைகளுக்குப் பின்னால், இவர்களின் காதல் நாடகங்கள் தொடர்ந்தன. சீக்கிரத்திலேயே, நாடக அரங்கங்களுக்கு வெளியிலும் அவர்கள் அடிக்கடி சந்திக்கலானார்கள். ஹெட்டியின் இதமான தோழமையால், சில அடி உயரம் கூடியவர் போல் வானத்தில் மிதந்து கொண்டிருந்தார் சார்லி சாப்ளின். இவர்கள் இருவருக்கும் இடையே தோன்றியிருந்தது உண்மையான காதலா, அல்லது வெறும் இனக்கவர்ச்சியா என்று சொல்வதற்கில்லை. ஆனால், ஹெட்டியோடு பழகிய இந்தக் கால கட்டம், சாப்ளினின் இளமைப் பருவத்தில் சில முக்கியமான மாற்றங்களை உருவாக்கியது. வறுமையால் நிரம்பிய தனது மழலைக் காண்டத்தின் துயர நினைவுகளிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டுக் கொண்டிருந்த சார்லி சாப்ளினுக்கு, தன் மீது அதிக நம்பிக்கை உருவாகவும், பல புதிய முயற்சிகளில் அவர் ஆர்வத்தோடு ஈடுபடுவதற்கும் ஹெட்டி தான் மறைமுகக் காரணமாய், ஊக்கமாய் இருந்தாள். முதல் சந்திப்பிலிருந்தே, ஹெட்டியை சார்லி சாப்ளின் ஆழமாய் நேசிக்கத் தொடங்கியிருந்தார். தனக்கும், ஹெட்டிக்கும் இடையே ஒரு தெய்வீகமான பிணைப்பு இருப்பதாக அவர் நம்பினார். ஆனால், அந்தப் பெண்ணின் மனதில் அப்படி எந்த எண்ணமும் இருக்கவில்லை. இந்த உண்மை சாப்ளினுக்குத் தெரிந்த போது, அந்த அதிர்ச்சியை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தன்னுடைய ஆத்மார்த்தமான நேசம், பெரிதாய் எந்தக் காரணமும் இல்லாமல் இப்படி நிராகரிக்கப்பட்டு விட்டதே என்ற வலியும், அந்தப் பிரிவின் வடுவும், அவருக்குள் எப்போதும் இருந்தது. தன்னுடைய கடைசிக் காலம் வரை, சார்லி சாப்ளின் ஹெட்டியை மறக்கவே இல்லை என்று தான் அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் சொல்கிறார்கள். தான் சந்தித்த ஒவ்வொரு பெண்ணிடமும், தன்னுடைய முதல் காதலியின் பிம்பத்தைத் தான் அவர் தேடிக் கொண்டிருந்தாரோ என்னவோ. ஹெட்டியைப் பிரிந்த பிறகு, சார்லி சாப்ளின் அமெரிக்காவுக்குச் சென்றதும், திரைப்படத் துறையில் நுழைந்து வெற்றிக் கொடி கட்டியதும் நாம் ஏற்கெனவே பார்த்த விஷயங்கள். இப்படி அவர் உலகப் புகழ் அடைந்த பிறகு, அவரைப் பாராட்டி, நலம் விசாரித்து ஹெட்டி ஒரு கடிதம் எழுதியிருந்தாள். இதற்குள் அவளுக்குத் திருமணமாகியிருந்தது. 'என்னை நினைவிருக்கிறதா சாப்ளின் ?', என்று தொடங்கி ஹெட்டி எழுதியிருந்த அந்தக் கடிதத்தைப் படிக்கும் போது, சாப்ளினுக்குள் பழைய நினைவுகள் துளிர்த்தன. ஆனால், அதன் பிறகு சார்லி சாப்ளினால் மீண்டும் ஹெட்டியைச் சந்திக்க முடியவில்லை. அடுத்த முறை அவர் இங்கிலாந்து சென்ற போது, ஹெட்டி இறந்து போய் விட்டாள் என்ற தகவல் தான் அவருக்குக் கிடைத்தது. அந்தக் காதலில், அதுவரை சாப்ளின் சந்தித்திருந்த பல ஏமாற்றங்களிலேயே, அவரால் தாங்கிக் கொள்ள முடியாத, கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாத பெரிய ஏமாற்றம் இது தான்.
திடீரென்று, தன்னுடைய பயணமும், வாழ்க்கையும் நோக்கமற்றுத் திரிந்து விட்டது போல் வெறுமையாய் உணர்ந்தார் அவர். கொஞ்சமும் எதிர்பாராத இந்த அதிர்ச்சியைப் பற்றி எழுதுகையில், சார்லி சாப்ளினின் பேனா வேதனையைப் பொழிகிறது : 'அது வரை, எனக்குள் ஒரு மெலிதான நம்

பிக்கை இருந்தது. என்னுடைய வெற்றிகள், சாதனைகளையெல்லாம், அந்த ஒருத்திக்குத் தரப் போகும் காணிக்கையாகதான் எண்ணிச் சேர்த்து வைத்திருந்தேன். ஆனால் இப்போது, பணம், புகழ் எல்லாம் என்னிடம் இருக்கின்றன. ஆனால், அவற்றை யாருக்குச் சமர்ப்பணம் செய்து சந்தோஷப்படுவது என்று தான் தெரியவில்லை' ஹெட்டி கெல்லியைப் போலவே, சார்லி சாப்ளினை ரொம்பவும் பாதித்த இன்னொரு பெண், ஏட்னா பர்வியான்ஸ்.
இவரை நாம் ஏற்கெனவே சந்தித்திருக்கிறோம். தன்னோடு இணைந்து நடிப்பதற்குப் பொருத்தமான ஒரு கதாநாயகியைத் தேடி, பல பெண்களைப் பார்த்துச் சலித்து, கடைசியில் ஏட்னாவைக் கண்டு கொண்டார் சார்லி சாப்ளின். அதன் பின், பல ஆண்டுகளுக்கு சார்லி சாப்ளினும், ஏட்னா பர்வியான்ஸும் வெற்றிகரமான திரை ஜோடியாய் வலம் வந்தார்கள். சாப்ளின் வெவ்வேறு கம்பெனிகளுக்குத் தாவிய போதும், ஒவ்வொரு முறையும், ஏட்னாவை மட்டும் தவறாமல் தன்னோடு அழைத்துக் கொண்டுவிடுவார் - கிட்டத்தட்ட 34 படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள். நடிப்பு அனுபவம் அவ்வளவாய் இல்லாத ஏட்னாவுக்கு, திரையுலகைப் பற்றி சொல்லித் தந்து, அவரை ஒரு நல்ல நடிகையாக மெருகேற்றியவர் சார்லி சாப்ளின் தான். அதே போல், சாப்ளினுக்கு ஒரு நல்ல தோழியாகவும், வழிகாட்டியாகவும் ஏட்னா இருந்தார். சாப்ளினும், ஏட்னாவும் ஒருவரையொருவர் காதலித்தார்களா, இல்லையா என்பது, ஹாலிவுட் சரித்திரத்தின் புரியாத புதிர்களில் ஒன்று. சார்லி சாப்ளினின் சுயசரிதையில் கூட, அவர் இதைப் பற்றித் தெளிவாக ஏதும் குறிப்பிடவில்லை. ஆனால், வழக்கம் போல், இந்த ஜோடியைப் பற்றிய அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் ஏராளம். 'சாப்ளின் ஏட்னாவைக் காதலித்தார், ஆனால் ஏட்னா அவரைக் காதலிக்கவில்லை' என்று ஒரு கோஷ்டி சொல்கிறது. 'அப்படி இல்லை, ஏட்னாவுக்குத் தான் சாப்ளின்மீது ஒருதலைக் காதல்' என்று இன்னொரு கோஷ்டி சண்டைக்கு வருகிறது. 'இவர்கள் இருவருமே தப்பு, சாப்ளினும், ஏட்னாவும் நல்ல நண்பர்கள் மட்டுமே' என்றும் சிலர் சொல்கிறார்கள். மிச்சமிருக்கும் இன்னொரு கட்சியினர், 'அவர்கள் ஒருவரையொருவர் காதலித்தது நிஜம்', என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்கிறார்கள். (ஏட்னாவைச் சந்தித்த காலத்தில், சாப்ளின் நைல்ஸ் கிராமத்தில் தான் தங்கியிருந்தார். அப்போது, அவரோடு ஏட்னாவும் சேர்ந்து வாழ்ந்தார் என்று சில உள்ளூர் வதந்திகள் தெரிவிக்கின்றன !) இப்படி, அவர்கள் காதலித்தார்களா என்பதே குழப்படியாக இருக்கும் போது, அவர்கள் எப்படி, எதனால் பிரிந்தார்கள் என்றும் பல ஊகங்கள் உலவுகின்றன. சாப்ளின் ஏட்னாவை ஏமாற்றினாரா, அல்லது, ஏட்னா தான் சாப்ளினைக் கோபப் படுத்தினாரா என்று யாருக்கும் நிச்சயமாய்த் தெரியவில்லை. இதைப் பற்றி சார்லி சாப்ளின் குறிப்பிடுகையில், 'எனக்கு ஏட்னாமீது நம்பிக்கையில்லை, ஏட்னாவுக்கு என்மீது நம்பிக்கையில்லை. ஏன், எனக்கே என் மீது நம்பிக்கையில்லை', என்று பூடகமாய்ச் சொல்கிறார். ஒரு வேளை, ஏட்னா அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியிருக்கலாம். ஆனால், திருமணம், குடும்பம், குழந்தைகள் என்ற கட்டுப் பாடுகளில் அடைபட விரும்பாமல், சார்லி சாப்ளின் அதை மறுத்திருக்கலாம். எல்லாமே ஊகங்கள் தான். ஆனால், ஏட்னாவின் நட்பு, சார்லி சாப்ளினுக்கு வேறொரு விதத்தில் உதவியது. சிறுவயதிலிருந்தே, அதிக நண்பர்களோடு கலந்து பழகாமல், தனிமையிலே இனிமை கண்டு பழகி விட்ட சாப்ளின், ஏட்னாவுடன் பழகத் தொடங்கிய பிறகு தான், தனக்குள்ளிருந்த தயக்கத் திரையை விலக்கிக் கொண்டு, எல்லோருடனும் சகஜமாய் நட்பு பாராட்டலானார். அப்போது தான், மற்றவர்களின் மீது அன்பும், அக்கறையும் செலுத்துகிற மென்மையும், சக மனிதர்களின் கோணத்திலிருந்து சிந்திக்கும் கலையும் அவருக்குக் கை வந்தது. சாப்ளினின் இந்த மாற்றங்களையெல்லாம், அவருடைய அடுத்தடுத்த படங்களில் தெளிவாய்ப் பார்க்க முடிந்தது.
நகைச்சுவைப் படங்கள் என்றாலே, வெறும் கோமாளி மனிதர்களையும், அவர்களின் அதீத அசட்டுத்தனங்களையும் காண்பிப்பது தான் என்றிருந்த நிலையை மாற்றி, நம் எல்லோரையும் போல் சாதாரணமான, எல்லாவிதமான ஆசாபாசங்களுடன் கூடிய மனிதர்களை, அவர்களின் வாழ்வியல் அம்சங்களை, இயல்பான உணர்ச்சிகளை, யதார்த்தமான நிலையிலிருந்து படம்பிடித்துக் காட்டினார் சாப்ளின். அதுவரை சாப்ளினின் படங்களில் இடம்பெற்ற பெண் கதாபாத்திரங்கள் எல்லாமே, 'சும்மா' வந்து போகிறவர்களாகத் தான் இருப்பார்கள். அல்லது, கதாநாயகனோ, வில்லனோ கலாட்டா செய்து கலாய்ப்பதற்குப் பயன்படும் 'உப'பாத்திரங்கள் என்ற அளவில் தான் அவர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும்.
1915ம் ஆண்டு, ஏட்னாவுடன் நடிக்கத் தொடங்கியபிறகு, அவருடைய நடிப்புத்திறனை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில், தன்னுடைய படங்களில் கதாநாயகி பாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் தரத் தொடங்கினார் சார்லி சாப்ளின். அவருடைய நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக, ஏட்னாவும் சிறப்பாக நடித்து, பெயர் பெற்றார். சார்லி சாப்ளினும், ஏட்னாவும் ஒருவரையொர

*12. Modern Times*
1914ம் ஆண்டு, சார்லி சாப்ளின் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய போது, திரைப்படங்கள் அனைத்தும் ஊமைப் படங்களாகத் தான் இருந்தன. அவற்றோடு சப்தத்தை - வசனம் அல்லது இசையைச் சேர்க்கும் தொழில் நுட்பம், அப்போது கண்டுபிடிக்கப் படவில்லை. ஆகவே, சாப்ளின் உட்பட, அந்தக் கால சினிமாவில் கொடி கட்டிப் பறந்த எல்லா நட்சத்திரங்களும், வசனங்கள், பின்னணி இசையின் உதவியின்றி, காட்சி அமைப்புகள், நடை, உடை, முக பாவனைகள் ஆகியவற்றின் உதவியால் தான் தங்கள் படங்களை உருவாக்க வேண்டியிருந்தது. அவர்களும் தங்களால் முடிந்த வரை, இந்தக் குறை தெரியாதபடி தங்கள் படங்களை அமைத்தார்கள். ஆனால், வசனங்களின் உதவியின்றி, சில நுணுக்கமான, உணர்ச்சி பூர்வமான விஷயங்களை சினிமாவில் சொல்வது முடியாமலே இருந்தது. இதே காரணத்தால், இந்தப் படங்களின் கதை / காட்சி அமைப்புகளும், விஸ்தாரமாய் அமைக்கப் பட்டன. உதாரணமாக, ஒரே ஒரு வசனத்தில் சொல்லிவிடக் கூடிய விஷயத்தை, ஐந்து நிமிடக் காட்சியின் மூலம் விளக்க வேண்டியிருந்தது. பின்னர், முப்பதுகளில், சினிமாவில் சப்தத்தைச் சேர்க்கும் தொழில் நுட்பம் வந்தது. அடுத்த சில ஆண்டுகளுக்குள், அநேகமாய் எல்லாப் பிரபல நிறுவனங்களும், 'டாக்கீஸ்' (Talkies) எனப்படும் 'பேசும் பட'ங்களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள். மௌன சினிமாவில் வசனமும், இசையும் சேர்வது, உண்மையிலேயே மிகப் பெரிய வரப்பிரசாதம் தான். இதனால், சினிமாவின் எல்லைகள் மேலும் விரிவடையும். பல புதிய விஷயங்கள் சினிமாவில் சொல்லப்படும். அந்தப் படங்களைப் பார்த்து ரசிக்கும் மக்களின் புரிதலும், ரசனையுணர்வும் மேம்படும். இந்த விஷயங்களெல்லாம் எல்லாருக்கும் தெரிந்திருந்தது. ஆனாலும், ஏற்கெனவே மௌனப் படங்களில் நடித்துப் பெரிய புகழ் பெற்றிருந்த சார்லி சாப்ளின் போன்ற பல நட்சத்திரங்கள், இப்போது திடீரென்று பேசி நடிக்க வேண்டும் என்றதும், ரொம்பவே தயங்கினார்கள். அவர்களின் தயக்கத்திலும் ஒரு நியாயம் இருந்தது. மௌனப் படங்களின் உலகத்தில் அவர்களுக்குக் கிடைத்திருந்த அனுபவமும், மரியாதையும், பேசும் படங்களில் பணியாற்றும் போது அவ்வளவாய்ப் பயன் படவில்லை. வழி தவறி விட்ட குழந்தைகள் போன்ற திகைப்போடு தான் அவர்களால் 'பேசும் பட'ங்களில் நடிக்கவோ, அவற்றை இயக்கவோ முடிந்தது. இந்த ஈடுபாட்டின்மை காரணமாக, பல 'மௌனப் பட' நட்சத்திரங்கள், 'பேசும் பட'ங்களில் பரிதாபமாய்த் தோல்வியடைந்தார்கள். இதற்கு முக்கியமான காரணம், மௌனக் கதாபாத்திரங்களாய் மக்கள் மனதில் பதிந்திருந்த சிலரை, சட்டென்று பேச வைத்து விடுவது சாத்தியமில்லை. இந்த மாற்றம், ஒரு பெரிய ஏமாற்றமாய் ரசிகர்களை பாதித்து விடுகிற சாத்தியங்கள் உண்டு. யோசித்துப் பாருங்கள், மஹாபாரதத்தில், காந்தாரி கதாபாத்திரத்தை நினைக்கும் போதே, அவருடைய கண்கள் ஒரு துணியால் கட்டப்பட்டிருக்கும் பிம்பம் நமக்குத் தோன்றி விடுகிறது. அந்தத் துணிக்கட்டு இல்லாத காந்தாரியை நம்மால் ஏற்கமுடியுமா ?
உதாரணமாக, சார்லி சாப்ளினின் புகழ்பெற்ற நாடோடி 'டிராம்ப்' பாத்திரம். அந்தக் கதாபாத்திரத்தின் சிறிய தொப்பி, பெரிய காலணி, தொளதொளா கால்சட்டை, இறுக்கமான மேல் சட்டை, கையில் சுழலும் தடி - இப்படி எல்லா அடையாளங்களோடு, அந்தப் பாத்திரம் ஒரு மௌன நாயகனாகவே மக்களிடையே அறிமுகமாகி விட்டது. அந்த நாடோடியால் பேசமுடியும் என்று கூட, ரசிகர்களில் யாரும் அது வரை கற்பனை செய்திருக்கமாட்டார்கள். இப்படிப் பட்ட அந்த 'அமர' கதாபாத்திரம், திடீரென்று வாயைத் திறந்து பேசத் தொடங்கினால், அதை மக்கள் எப்படி எதிர் கொள்வார்களோ என்று சாப்ளினுக்குக் கவலையாக இருந்தது. 'டிராம்ப்' பாத்திரத்தின் அழகே, அதன் மௌன நடவடிக்கைகள் தான் என்று அவர் நினைத்தார். ஆகவே, சார்லி சாப்ளினின் மனம், 'பேசும் பட'ங்களுக்கு எதிராகவே இருந்தது. 'திரைப்படம் என்பது, காட்சி பூர்வமான ஒரு ஊடகம். அதில் ஒலியைச் சேர்ப்பது சரியில்லை, இதனால் திரைப்படங்களின் அழகே கெட்டுப் போகிறது', என்று கருத்துத் தெரிவித்த சாப்ளின், வேண்டுமானால் மற்றவர்கள் 'டாக்கி'களைத் தயாரிக்கட்டும், நாம் வழக்கம்போல் மௌனப் படங்களைத் தொடர்ந்து தயாரிக்கலாம் என்று முடிவு செய்தார். கொஞ்சம் பத்தாம் பசலித்தனமான முடிவு தான். நான் புதிய தொழில் நுட்பத்தைப் பயன் படுத்திக் கொள்ள மாட்டேன், நீங்களெல்லாம் பேனாவில் எழுதுங்கள், எனக்கு பென்சில் போதும் என்னும் வறட்டுப் பிடிவாதம் தான். ஆனாலும், சாப்ளின் திடீரென்று இந்த முடிவை எடுத்து விடவில்லை. ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு தான், அவர் இந்தத் தீர்மானத்துக்கு வந்திருந்தார்.
திரைப்படங்களின் பரிணாம வளர்ச்சியில், இந்த 'பேசும் பட'ங்கள் ஒரு முக்கியமான முன்னேற்றம் என்பதை சாப்ளின் மறுக்கவில்லை. என்றாலும், பேசும் படங்களைப் போலவே, மௌனப் படங்களும் ஒரு அற்புதமான கலை வடிவம் தான் என்று அவர் நம்பினார். பேசு

*11. The Champion*
'ம்யூச்சுவல்' நிறுவனத்திலிருந்து வெளியேறிய பிறகு, சாப்ளின் தனது படங்களைத் தானே தயாரித்துக் கொள்வதாய் முடிவு செய்ததும், அவர் நீண்ட நாள்களாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 'முழு' சுதந்திரம் அவருக்குக் கிடைத்தது. யாருடைய எதிர்பார்ப்புகள், கட்டளைகளுக்கும் பணிய வேண்டிய அவசியமில்லாமல், தான் விரும்பிய விதத்தில், தனக்கு முழுத் திருப்தி அளிக்கும் வகையில் படங்களை எடுக்க முடிந்தது. ஆனால், இந்த சவுகர்யம், வேறொரு விதத்தில் அவருக்குப் பெரிய பிரச்சனையைத் தந்து விட்டது. ஒவ்வொரு முறையும், அவர் முழுப் படத்தையும் எடுத்து முடித்த பிறகு, அதற்குச் செலவான தொகையைத் தரமுடியாது என்று அவருடைய விநியோக நிறுவனம் ('ஃபர்ஸ்ட் நேஷனல்') அடாவடி செய்யத் தொடங்கியது. உதாரணமாக, இரண்டு ரீல் அளவுள்ள ஒரு படத்தை சாப்ளின் இயக்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் படத்தை எடுப்பதற்கு அவருக்கு ஆறு மாதங்கள் ஆகிறது. இதற்காக, மொத்தம் நூறு ரூபாய் செலவு செய்கிறார். படம் தயாரானதும், அந்த நூறு ரூபாயை 'ஃபர்ஸ்ட் நேஷனல்' நிறுவனம் கொடுத்து, படத்தை வாங்கி விநியோகிக்க வேண்டும். இது தான் ஒப்பந்தம். ஆனால், அவர் படத்தை எடுத்தபிறகு, 'சாப்ளினுக்கு மட்டும் ஏன் நூறு ரூபாய் தரவேண்டும் ? மற்ற இயக்குநர்களெல்லாம் இரண்டு ரீல் படத்துக்கு அறுபது ரூபாய் தானே செலவழிக்கிறார்கள் ?', என்று வீண் சண்டையைத் தொடங்கியது ஃபர்ஸ்ட் நேஷனல். இது என்ன நியாயம் ? சாப்ளினும், மற்ற இயக்குனர்களும் ஒன்றா ? படத்தின் அளவு தான் கணக்கா ? தரம் முக்கியமில்லையா ? - இது தான் சார்லி சாப்ளினின் வாதம், 'மற்றவர்களைப் போல் அரை குறை தரத்திலான படங்களை என்னால் எடுக்க முடியாது. என்னுடைய படங்களை, மிகச் சிறப்பாகத் தயாரிப்பதற்காக நான் கடுமையாய் முயல்கிறேன். ஆகவே, அதிக செலவு ஆவது சகஜம் தான். உங்களுக்கு நல்ல படங்கள் வேண்டுமானால், இந்தத் தொகையை நீங்கள் தந்தாக வேண்டும்' சாப்ளினின் பேச்சில் நியாயம் இருந்தாலும், ஒவ்வொரு முறையும், கடும் போராட்டத்துக்குப் பிறகு தான் அவரால் தன்னுடைய படங்களை வெளியிட முடிந்தது. சிறிது காலத்துக்குள், இந்த விளையாட்டு அவருக்குச் சலித்து விட்டது. கஷ்டப் பட்டுப் படம் எடுக்கிறோம். மக்களும் அதை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். ஆனால், நம் படங்களை ரசிகர்களிடம் கொண்டு செல்ல முடியாதபடி நடுவே இந்தப் படக் கம்பெனிகளின் தடை. அந்தக் காலத்திலிருந்தே, திரைப்பட உலகத்தில் இந்தப் பிரிவினை உண்டாகி விட்டது. கலைஞர்களும், பட அதிபர்களும் ஒருவரையொருவர் விரோதிகள் போல் தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நடிகர்கள், இயக்குனர்கள், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களுக்காக மக்கள் படம் பார்க்க வருகிறார்களா ? அல்லது, அவர்கள் தங்கள் படங்களை எடுப்பதற்குப் பணம் செலவழிக்கும் நிறுவனங்கள் தான் முக்கியமா ? இந்தப் பிரச்சனை சாப்ளினுக்கு மட்டுமின்றி, அவருடைய நெருங்கிய நண்பர்கள் சிலருக்கும் இருப்பது தெரிய வந்தது. இத்தனைக்கும், இவர்கள் எல்லோரும் மக்களிடையே பெரிய புகழ் பெற்றவர்கள். ஆனால், எந்தப் பட நிறுவனமும், அந்தக் கலைஞர்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை. இதைப்பற்றி சாப்ளின் தனது நண்பர்களிடம் தீவீரமாய் விவாதித்துக் கொண்டிருந்த போது தான், அதிர்ச்சி தரும் இன்னொரு தகவல் தெரிய வந்தது. அப்போதைய சில பெரிய பட நிறுவனங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து கொண்டு, நடிகர்கள், இயக்குனர்களைத் தங்களின் விருப்பம் போல் ஆட்டி வைக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதாக ஒரு காற்று வழிச் செய்தி. விசாரித்த போது, இது உண்மையான தகவல் தான் என்று தெரிய வந்தது. 'மெகா' சூப்பர் மார்க்கெட்டுகள், உள்ளூரின் எளிய மளிகைக் கடைகளை நசுக்கி அழித்து விடுவது போல், பெரிய சினிமா கம்பெனிகள் சேர்ந்து, ஒரு மிகப் பெரிய நிறுவனத்தை உருவாக்கி, ஊரில் இருக்கும் சிறிய பட அதிபர்கள், கலைஞர்கள் எல்லோரையும் மொத்தமாய் ஒடுக்கி விடுவதாய் கொடூரத் திட்டம். இதைக் கேள்விப் பட்டதும், சாப்ளினும், அவருடைய சிநேகிதர்களும் ரொம்பவே எரிச்சலாகி விட்டார்கள். 'நாம் மூளையைக் கசக்கி, புதுமையான படங்களை எடுத்துத் தருவதும், அதை வைத்துக் கொண்டு இவர்கள் டாலர் மழையில் நீந்திக் குளிப்பதும் என்ன நியாயம் ?', என்று அவர்களே தங்களைக் கேட்டுக் கொண்டார்கள். 'உடனடியாக, இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்' என்று உணர்ச்சிவசப்பட்டார்கள். அப்போதுதான் அவர்களுக்கு ஒரு அட்டகாசமான யோசனை தோன்றியது. எத்தனை பெரிய பட அதிபர்கள் ஒன்றாக இணைந்தாலும், அவர்களிடம் ஏகப்பட்ட பணம் தான் இருக்கும். அதை மட்டும் வைத்துக் கொண்டு படம் எடுத்து விடமுடியாது. ஆகவே, கலைஞர்கள் இல்லாவிட்டால், எத்தனை பெரிய கம்பெனியும், காலி பெருங்காய டப்பாதான் ! - இந்தத் துருப்புச் சீட்டை வைத்துக் கொண்டு, பெரிய பண முதலைகளை எதிர்த்துப் போராடுவதாக அவர்கள் தீர்மானித்தார்கள்.

'அவர்கள்' என்றால், மொத்தம் ஐந்து பேர் : சார்லி சாப்ளின், டக்ளஸ் ஃபேர்பேங்க்ஸ் (Douglas Fairbanks), மேரி பிக்ஃபோர்ட் (Mary Pickford), கிரிஃபித் (G. W. Griffith) & வில்லியம் ஹார்ட் (William. S. Hart) ரொம்ப எளிமையான, நேரடியான திட்டம் அவர்களுடையது.
பெருமுதலாளிகளே, நீங்கள் மட்டும் தான் ஒன்றாகச் சேரமுடியுமா ? நாங்களும் ஒன்றாகச் சேர்வோம். எங்களுக்கென்று ஒரு பட நிறுவனத்தைத் தொடங்குவோம். எங்கள் படங்களை நாங்களே தயாரித்துக் கொள்வோம். உங்கள் தயவு எங்களுக்குத் தேவையில்லை ! உண்மையில், அப்படியொரு 'புதிய' பட நிறுவனத்தைத் தொடங்குகிற யோசனை எதுவும் அவர்களிடம் இல்லை. சும்மா, எதிர் தரப்பினரைக் குழப்புவதற்காக, அவர்களின் திட்டங்களை முறியடிப்பதற்காக, பத்திரிகையாளர்களை அழைத்து, இப்படி ஒரு அதிரடி அறிக்கை விட்டுப் பார்க்கலாம் என்று தான் ஆரம்பித்தார்கள். ஆனால், இது பற்றி மேலே பேசப்பேச, அவர்களுக்கு அந்தத் திட்டத்தின் வெற்றி சாத்தியங்கள் தெரிந்தன. தைரியமாய் இறங்கி, ஒரு ஆட்டம் ஆடிப் பார்த்து விடலாம் என்று முடிவு செய்தார்கள்.
ஆகவே, 1919ம் ஆண்டு, 'யுனைடட் ஆர்ட்டிஸ்ட்ஸ்' (United Artists) என்ற பெயரில், சாப்ளின் மற்றும் நண்பர்களின் புதிய பட நிறுவனம் தொடங்கப்பட்டது. 'UA' என்று செல்லமாய் அழைக்கப்பட்ட 'யுனைடட் ஆர்ட்டிஸ்ட்ஸ்' நிறுவனம், அது வரை திரைப்படங்கள் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த முறையையே தலைகீழாய் மாற்றி அமைத்தது. பணக்கார முதலாளிகள் படம் எடுப்பது, மற்ற நடிகர்களும், கலைஞர்களும் அவர்களிடம் தொழிலாளிகளாக வேலை செய்து, சம்பளம் வாங்குவது என்பதை மாற்றி, இயக்குனர்கள் தங்களின் படங்களைத் தாங்களே தயாரித்துக் கொண்டு, பின்னர் அந்தப் படங்கள் வெளியான பிறகு, லாபத்தில் பங்கு பெறுவது என்று 'யுஏ'வின் திட்டம். (சுருக்கமாய்ச் சொல்வதானால், சாப்ளின் எதிர்பார்த்த 'முழு சுதந்திர'த்தின் அடுத்த நிலை !) ஆனால், 'யுஏ'வின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்த சார்லி சாப்ளின், உடனடியாக அதில் முழு முனைப்புடன் இறங்க முடியவில்லை. ஏனெனில், ஏற்கெனவே 'ஃபர்ஸ்ட் நேஷனல்' நிறுவனத்துக்காக எட்டு படங்களைத் தயாரித்துத் தருவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். அதில் ஒரு சில படங்கள் தான் தயாராகியிருந்தன. ஆகவே, மீதமுள்ள படங்கள் அனைத்தையும் எடுத்து முடிக்கும் வரை, அவர் 'யுஏ'வுக்காகப் படங்களைத் தயாரிக்க முடியாத நிலைமை. இதனால், ஒரு பக்கம் தனது சொந்தக் கம்பெனியை வைத்துக் கொண்டு, மறுபக்கம் 'ஃபர்ஸ்ட் நேஷனல்' நிறுவனத்துக்காகத் தன்னுடைய படங்களை எடுத்துக் கொண்டிருந்தார் சார்லி சாப்ளின்.
1923ம் ஆண்டில் தான், அவரால் 'யுஏ'க்காகத் தனது முதல் படத்தைத் தயாரிக்க முடிந்தது. 'ஃபர்ஸ்ட் நேஷனல்' நிறுவனத்துக்காக சாப்ளின் இயக்கி, நடித்து, தயாரித்த படங்களில் முக்கியமானது, 'The Kid'. சாப்ளினின் மற்ற படங்களைப் போலின்றி, கிட்டத் தட்ட ஒரு மணி நேர அளவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் தான், அவருடைய முதல் 'முழு நீளத் திரைப்படம்' ! 'ஆறு ரீல்முழுக்க சந்தோஷம்', என்று விளம்பரப் படுத்தப்பட்ட 'The Kid' திரைப்படம், கலகலப்பும், மனிதாபிமானமும், சோகமும் சரிவிகிதத்தில் கலந்த சாப்ளினின் அற்புதப் படைப்பாய் வெளி வந்தது. இந்தப் படம் தொடங்குவதற்குச் சில நாள்கள் முன்பு தான், சாப்ளினின் முதல் மகன் பிறந்து, மூன்றே நாள்களில் இறந்து போயிருந்தான். அந்த இழப்பின் சோகம் தான், 'The Kid' திரைப்படத்தின் மையக்கருவாய் அமைந்திருக்கிறது என்று விமர்சகர்கள் கணிக்கிறார்கள்.
தாயால் கைவிடப்பட்ட ஒரு குழந்தையை, நாடோடி சாப்ளின் கண்டெடுத்து, வளர்ப்பது தான் இந்தப் படத்தின் கதை. இதன் வழியே, இல்லாமையின் சோகத்தையும், அநாதைகளாக்கப் பட்டுவிடுகிற குழந்தைகளின் யதார்த்த நிலைமையையும் கலாப்பூர்வமாய் வெளிப்படுத்தியிருந்தார் சார்லி சாப்ளின். அவர் மனம் விரும்பிய தரத்தில் இந்தப் படத்தை உருவாக்குவதற்கு, சாப்ளினுக்குக் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆனது. இந்தப் படத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்கள், சார்லி சாப்ளினும், அந்தச் சிறுவனும் இணைந்து அடிக்கும் கூத்துகளும், கைவிடப்பட்ட அந்தச் சிறுவனின் பின்னணியில் மௌனமாய்த் தொடர்ந்து வரும் ஒரு சோக இழையும் தான்.
1921ம் ஆண்டு வெளி வந்த இந்தப் படம், சாப்ளினின் படங்களில் மிகவும் முக்கியமானதாய் மதிக்கப் படுகிறது. அது வரை சிறிய, மிகச்சிறிய குறும்படங்களின் நாயகராய், இயக்குனராய்ப் புகழ் பெற்றிருந்த சார்லி சாப்ளின், 'Feature Film' எனப்படும் முழு நீளத் திரைப்படங்களின் தளத்தில் ஒரு முக்கியமான சக்தியாய்த் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள, 'The Kid' உதவியது.
ஆனால், 'The Kid' படம் வெளிவருவதற்கு முன், சார்லி சாப்ளின் அனுபவித்த கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. அவருடைய இரண்டு ரீல் படங்களை வாங்குவதற்கே ஏகப்பட்ட சாக்குப் போக்குகள் சொல்லிக் கொண்டிருந்த 'ஃபர்ஸ்ட் நேஷனல்' நிறுவனத்தினர், இந்த ஆறு ரீல் படத்தை அடிமாட்டு விலைக்குத் தான் கேட்டார்கள். அவர்க