Telegram Web
சுவையான பிரெட் அல்வா செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:

பிரெட் துண்டுகள் - 10
சர்க்கரை - 2 கப்
முந்திரி - 20
பாதாம் - 10
உலர்ந்த திராட்சை - 10
நெய் - 1 கப்
பால் - 500 லிட்டர்
டால்டா - 2 டீஸ்பூன்


செய்முறை:

பிரெட்டை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி அரைத்துக் கொள்ளவும். மிகவும் பொடியாகிவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பாலை நன்கு சுண்ட காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும், இரண்டாக உடைத்த முந்திரிப் பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் பொடித்து வைத்துள்ள பிரெட்டை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு வாணலியில் 11/2 கப் தண்ணீர் விட்டு சர்க்கரையை போட்டு 5 நிமிடம் கிளறி பிரெட் துண்டுகள் சேர்த்து வேக விடவும். பிரெட் துண்டுகள் சற்று வெந்தவுடன் அதில் நெய் மற்றும் டால்டா சேர்த்து அதனுடன் வறுத்த முந்திரி, திராட்சை, துறுவிய பாதாம் சேர்த்து கிளறி விடவும். சுவையான பிரெட் அல்வா தயார்.
4 - வகையான ஐஸ்கிரீம்.

குல்ஃபி.

தேவையான பொருட்கள்:

பால்
பாதாம் பருப்பு
பால் பவுடர்
சர்க்கரை
ஏலக்காய் பொடி

செய்முறை:

ஒரு அடி கனமான பாத்திரத்தில், 500 மில்லி பால் சேர்த்து பால் சூடானவுடன், 50 கிராம் பால் பவுடர், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பால் கெட்டியானவுடன், 25 கிராம் பொடியாக்கிய பாதாம், 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து விடவும்.

ஆறிய பின், குல்ஃபி மோல்டில் ஊற்றி ஆறு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.


ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள்

வாழைப்பழம்
சர்க்கரை
பால்
டார்க் சாக்லேட்

செய்முறை:

நான்கு குலையாத வாழைப்பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

இதனுடன் 50 கிராம் டார்க் சாக்லேட், 1/2 கப் சர்க்கரை, 1/2 டம்ளர் பால் சேர்த்து அரைக்கவும்.

இதனை ஒரு ஸ்டோரேஜ் பாக்ஸில் ஊற்றி ஆறு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.


சாக்லேட் குல்ஃபி.

தேவையான பொருட்கள்:

பால்
டார்ச் சாக்லேட்
கொக்கோ பவுடர்
சர்க்கரை

செய்முறை:

ஒரு அடி கனமான பாத்திரத்தில், 500 மில்லி பால் சேர்த்து பால் சூடானவுடன் அடுப்பை மெதுவாக வைத்து நன்கு கலந்து விடவும்.

பின், நான்கு ஸ்பூன் சர்க்கரை, 50 கிராம் டார்க் சாக்லேட், ஒரு ஸ்பூன் கொக்கோ பவுடர் சேர்த்து பால் சுண்டிய பின் ஆற வைக்கவும்.

பின்னர், குல்பி மோல்டில் ஊற்றி ஆறு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.

குல்பி.

தேவையான பொருட்கள்:

பாதாம் பவுடர்
பால்
சர்க்கரை
ஏலக்காய் பொடி
பாதாம் பருப்பு
சோள மாவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பால் மற்றும் நான்கு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து பால் சூடானவுடன், இரண்டு ஸ்பூன் சோள மாவை தண்ணீரில் கலந்து சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடங்கள் கலந்து விடவும்.

பின், 50 கிராம் பாதாம் பவுடர், பத்து பொடியாக நறுக்கிய பாதாம் பருப்பு சேர்த்து கலந்து விடவும்.

பின், ஆற வைத்து 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து குல்பி மோல்டில் ஊற்றி ஆறு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.
ஆரோக்கியத்தையும், அழகையும், பாதிக்கும் கெட்ட கொழுப்புகளை குறைக்கும் 13 உணவு குறிப்புகள் !



1. கொழுப்பை குறைப்பதில் பூண்டுக்கு இணை பூண்டேதான். கொழுப்பில் கொழுப்பு கரையும் என்பது போல பூண்டில் உள்ள கொழுப்பில் நமது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு கரைக்கப்பட்டு நல்ல கொழுப்பு அதிகமாகும்.

2. இஞ்சி உடம்பின் கெட்ட கொழுப்பை கரைக்க பயன்படுகிறது. உணவில் அதிகமாக இஞ்சியை சேர்க்க வேண்டும்.

3. வெங்காயம், குறிப்பாக சின்ன வெங்காயம்.

4.லவங்க மசாலா பட்டை நமது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதுடன் மொத்த கொழுப்பின் அளவையும் குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவையும் குறைக்கிறது.

5.சிவப்பு அரிசி கொழுப்பை குறைக்கிறது.

6. நிலக் கடலை நன்மை செய்யும் கொழுப்பை அதிகரித்து தீமை செய்யும் கொழுப்பை குறைக்கிறது. உணவில் முக்கியமாக கடலை எண்ணையை பயன்படுத்த வேண்டும்.

7. கவளை மீன் எனப்படும் சாலை மீன் நமது உடம்பின் கொழுப்பை குறைப்பதுடன், நமக்கு தேவையான ஒமேகா 3 யை அதிகளவில் கிடைக்கச் செய்கிறது.

8. கருப்பு திராட்சை கொழுப்புச் சத்தை குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.

9. கொள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு என்பது நமது பழமொழி. கொள்ளு நமது உடம்பின் மிகை கொழுப்பை சமன்படுத்துகிறது.

10. சோயா, கோதுமை போன்ற தாணியங்களும் கொழுப்பை குறைக்கப் பயன்படுகிறது. சோயாபால் தினமும் அருந்தவும். இல்லை எனில் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சோயாமாவை, உங்களுக்குத் தயாரிக்கப்படும் உணவில் சேர்த்து பலகாரம் செய்யச் சொல்லுங்கள். சோயா தயிரும் பயன்படுத்தலாம்.

11. கொலாஸ்டிராலைக் குறைத்து HDL என்ற நல்ல கொலாஸ்டிரால் எப்போதும் அளவு குறையாமல் பார்த்துக்கொள்வதில் மீனின் பங்கு மகத்தானது. ஒமேகா-3 என்ற அமிலம் மீனில் கிடைக்கிறது. எனவே ஒருநாள் விட்டு ஒரு நாள் 100 கிராம் மீனையும் உணவில் சேருங்கள். சைவ உணவுக்காரர்கள் மீன் எண்ணெய் கேப்சூல் இரண்டு சாப்பிடலாம்.

12. உணவு உண்டபின் சுடுநீர் அருந்தவும்.

13. வாரம் 3 முறை எலுமிச்சை சாறு சுடுநீர் கலந்து அருந்தவும். காலை 11 மணிக்கு பிறகு
உடல் பருமனாவதைத் தடுக்கும் முயற்சியில் கவனத்தைச் செலுத்தினால் எல்லா நோய்களும் குணமாக ஆரம்பித்து விடும்.
பாலக் பனீர் இட்லி.


தென்னிந்தியாவின் தவிர்க்க முடியாத காலை உணவுகளில் இட்லிக்கு முக்கிய இடமுண்டு. ஆனால் வழக்கமாக தயாரிக்கும் இட்லியில் ஒரு புதுமையைப் புகுத்தி, பாலக் பனீர் இட்லி செய்யலாம் வாங்க. இதில் பாலக் கீரையின் சத்துக்களும், பன்னீரின் புரதமும் இட்லியுடன் இணைந்து ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவாக மாறுகிறது.

பாலக் பனீர் இட்லி ஒரு சத்தான, சுவையான உணவு. பாலக் கீரையில் வைட்டமின் கே, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஃபோலேட், இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கின்றன. பனீரில் புரதம் மற்றும் கால்சியம் அதிகம். இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு - 2 கப்

பாலக் கீரை - 1 கட்டு

பன்னீர் - 100 கிராம் (துருவியது)

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - 1 சிறிய துண்டு

எண்ணெய் - 2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாலக் கீரையை நன்றாக சுத்தம் செய்து, வேகவைத்து, மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்க்கவும்.

சீரகம் பொரிந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும், அரைத்த பாலக் கீரை மற்றும் துருவிய பன்னீர் சேர்த்து வதக்கவும்.

அடுத்ததாக உப்பு சேர்த்து, 2-3 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.

பின்னர், இட்லி தட்டில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றவும்.

ஒவ்வொரு இட்லியின் மேலும் பாலக் பனீர் கலவையை வைக்கவும்.

இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி, இட்லி தட்டை வைத்து 10-12 நிமிடங்கள் வேக வைத்தால் சூடான,

சுவையான பாலக் பனீர் இட்லி தயார்!
4 - வகையான லட்டு.


தேங்காய்-பிரட் லட்டு.

தேவையான பொருட்கள்:

தேங்காய்
சர்க்கரை
பிரட்
ஏலக்காய்
முந்திரி
நெய்

செய்முறை:

5 பிரட்டை நன்கு பொடித்து அதனுடன் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அதே கடாயில், ஒரு கப் துருவிய தேங்காய், 1/2 கப் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சர்க்கரை கரைந்து வரும் வரை சூடாக்கவும்.

பின், வறுத்து வைத்துள்ள பிரட், நெய்யில் வறுத்த பத்து முந்திரி, தட்டிய இரண்டு ஏலக்காய் சேர்த்து நன்கு கலந்து விட்டு, ஆறிய பின், சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.


பூந்தி லட்டு.


தேவையான பொருட்கள்:

கடலை மாவு
சர்க்கரை
நெய்
ஏலக்காய்
முந்திரி
உலர் திராட்சை
எண்ணெய்
கேசரி பவுடர்


செய்முறை:

பாத்திரத்தில், 200 கிராம் கடலை மாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

பின், கரைத்து வைத்துள்ள கடலை மாவை பூந்தியாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

தயார் செய்து வைத்துள்ள பூந்தியை ஒன்று-இரண்டாக அரைத்துக் கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில், 200‌ கிராம் சர்க்கரை, 150 மில்லி தண்ணீர், 1/4 ஸ்பூன் கேசரி பவுடர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிட்டு பாகு காய்ச்சிக் கொள்ளவும். பாகு இறுக்கமாக இருக்கக் கூடாது.

பாகு சூடாக இருக்கும் பொழுதே தயார் செய்து வைத்துள்ள பூந்தியில் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து கலந்து விடவும். இதனுடன், தட்டிய மூன்று ஏலக்காய், 50 கிராம் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து விட்டு ஆறிய பின் சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.

கருப்பட்டி லட்டு.

தேவையான பொருட்கள்:

கடலை மாவு
கருப்பட்டி
நெய்
ஏலக்காய்
முந்திரி
உலர் திராட்சை
எண்ணெய்
கேசரி பவுடர்


செய்முறை:

பாத்திரத்தில், 200 கிராம் கடலை மாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

பின், கரைத்து வைத்துள்ள கடலை மாவை பூந்தியாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

தயார் செய்து வைத்துள்ள பூந்தியை ஒன்று-இரண்டாக அரைத்துக் கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில், 200‌ கிராம் பொடியாக்கிய கருப்பட்டி, 150 மில்லி தண்ணீர், 1/4 ஸ்பூன் கேசரி பவுடர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிட்டு பாகு காய்ச்சிக் கொள்ளவும். பாகு இறுக்கமாக இருக்கக் கூடாது.

பாகு சூடாக இருக்கும் பொழுதே தயார் செய்து வைத்துள்ள பூந்தியில் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து கலந்து விடவும். இதனுடன், தட்டிய மூன்று ஏலக்காய், 50 கிராம் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து விட்டு ஆறிய பின் சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.



அவல் லட்டு.

தேவையான பொருட்கள்:

அவல்
சர்க்கரை
ஏலக்காய்
முந்திரி
உலர் திராட்சை
நெய்

செய்முறை:

கடாயில், 1/2 கப் சர்க்கரை, ஒரு கப் அவலை தண்ணீரில் நனைத்து தண்ணீரை வடித்து விட்டு சேர்த்து, மேலும் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து சர்க்கரை உருகும் வரை நன்கு கலந்து விடவும்.

பின், நெய்யில் வறுத்த 25 கிராம் முந்திரி மற்றும் உலர் திராட்சை, இரண்டு தட்டிய ஏலக்காய் சேர்த்து இறுகி உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வரும் வரை நன்கு கலந்து விடவும்.

ஆறிய பின், சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள்...

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள்..
மருத்துவரை நாடிச் செல்ல வேண்டியதில்லை என்பது ஆன்றோர் வாக்கு.

ஆப்பிள்களை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. நோய்க் காலங்களில் ஆப்பிள்கள் சாப்பிடுபவர்களையும், மருத்துவர்கள் ஆப்பிள் கொடுங்கள் என்று கூறுவதையெல்லாம் நாம் பார்த்திருக்கறோம். ஆனால் குறிப்பாக அதன் மருத்துவப் பயன்கள் என்ன என்பதைப் பற்றி அறிந்ததில்லை என்றே தோன்றுகிறது.

கலோரிகளில் குறைவானது ஆப்பிள். மேலும் கரைபடக்கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆப்பிள் பெரிதும் உதவுகிறது.

பைட்டோ கெமிக்கல்ஸ் ஆப்பிள்களில் அதிகம் காணப்படுகிறது. அதாவது குறிப்பாக `குவர்செடின்' அதிகமாக இருப்பதால், இருதய நோயையும், புற்றுநோயையும் தடுக்கிறது.

வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது.
ஆப்பிள் பழம் எல்லாத் தரப்பு மக்களாலும் விரும்பிப் பயன்படுத்தப்படுகிறது.

முக்கியமான விருந்துகளிலும், முக்கிய நிகழ்ச்சிகளிலும் உணவாகப் பயன்படுகிறது.
மருத்துவத்தில் இதன் உபயோகம் அதிகரித்துள்ளது. ஆப்பிள் பழம் சிம்லா, காஷ்மீர் பகுதிகளில் மிக அதிகமாகப் பயிரிடப்படுகிறது.

ஆப்பிள் எல்லாப் பருவ காலங்களிலும் கிடைக்கிறது. எல்லா ஊர்களிலும் வாங்க முடிகிறது. இப்பொழுது 'fuji apple' கூட கிடைக்கிறது. பல நிறங்களில் கிடைத்தாலும் பலன் என்னவோ ஓன்றுதான்.

ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலியன அடங்கியுள்ளன.
ஆப்பிள் பழத்தில் உள்ள ரசாயனக் கலவைகள் ஒன்றுக்கொன்று வேதியியல் முறையில் இணக்கமாகச் செயல்படுகிறது. ஆர்கானிக் கலவை இரும்புசத்தை எளிதில் உடல் கிரகிக்க உதவுகிறது.

ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் இரத்த சோகை விரைவில் நிவர்த்தியாகிறது. இரத்த ஓட்டச் சுழற்சி சீராக இயங்குகிறது.
தேவையற்ற கொழுப்புச் சத்து குறைக்கப்பட்டு HDL அதிகரிக்கிறது. சோடியம் குறைக்கப்பட்டு இரத்த அழுத்தம் குறைய உதவுகிறது.

அதிக இரத்தப் போக்கைத் தடுக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும் மூளைக்கும் நல்ல சக்தி கிடைக்கிறது.

செரிமான மண்டலம் சீராக இயங்கச் செய்கிறது. கால்சியம் உடலில் சேமிக்கச் செய்கிறது.
இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது
.
இன்சுலின் சுரப்பு நடைபெறுவதால் ரத்தச் சர்க்கரை குறைய உதவுகிறது.
சோடியம் உடம்புக்குப் பயன்படுவது போக அதிகப்படியாக சேராமல் பாதுகாக்கிறது.

ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் தடுக்கிறது. மூளைக்கு மிகுந்த சக்தியளிப்பதால், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள். சிந்தனையாளர்கள், மாணவர்கள் ஆகியவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது.

குடற்கிருமிகளை அழிக்க உதவுகிறது. குழந்தைகளுக்குப் பேதி கண்டால் ஆப்பிள் பழத்தைஆவியில் வேகவைத்து பிசைந்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு குணமாகும். ஏன் பெரியவர்களுக்கும் கூட இது பொருந்தும்.

இதய நோயாளிகளுக்குச் சிறந்த உணவாகிறது.

நரம்புத் தளர்ச்சி நீங்கவும், நல்ல தூக்கம் வரவும் ஆப்பிள் சாப்பிடுவதால் மிகுந்த நன்மை கிடைக்கிறது.
திருமண வயதை எட்டிய நிலையில் உள்ள ஆண்கள் தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இந்திரியச் சுரப்பு கூடும்.

ஒரு புதிய ஆப்பிள் அருமையான ஆரோக்கிய உணவு. 140 கிராம் எடை கொண்ட ஒரு ஆப்பிளில் 90 கலோரிகளே உள்ளன

.
ஆப்பிளை அப்படியே உண்ணலாம். சமைத்து உண்பதும் உண்டு. நறுக்கி வேகவைத்து உண்ணலாம். வறுத்து மொறுமொறுவென்றும் உண்ணலாம்.
ஆப்பிள் கொண்டு செய்யப்படும் பணியாரம், ஆப்பிள் சாலட்கள், ஆப்பிள் சாறு போன்றவற்றையும் உண்ணலாம்.
ஆப்பிள் சாற்றை சூடேற்றி பிறகு குளிரவைத்து தினமும் அருந்தி வரலாம். ஆப்பிள் சாறு அருந்தும் பழக்கம் பெரும்பாலும் மேலை நாடுகளில் இருந்து வருகிறது. என்றாலும் அதன் தோலில் பூச்சிக்கொல்லி படலங்கள் இருக்கும் என்பதால், நன்கு அலம்ப வேண்டும் அல்லது தோலை நீக்கிவிடுவது நல்லது

.
உடம்பில் சிலருக்கு கெட்டவாடை வரும்; வியர்வை நாற்றம் அடிக்கும். இப்படி உள்ளவர்கள் விலை உயர்ந்த வாசனையுள்ள செண்ட்டுகளையும், பவுடர்களையும் பயன்படுத்துவார்கள். இவர்களின் இரத்தம் சுத்தியடையவும், கெட்ட வாடைகள் இல்லாமல் இருக்கவும், தினசரி இரண்டு ஆப்பிள் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும். உடலில் நல்ல மணம் இயற்கையாக உண்டாகும்.

ஆப்பிள் பழச்சாற்றைத் தேவைக்கு ஏற்ப தயாரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் பாகு பதம் வரும். இந்தப் பாகை எடுத்து வைத்துக்கொண்டு காலை, மாலை, இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தம் சமநிலைக்கு வரும்.

இதய நோயாளிகளும், மூளையின் போஷாக்கு தேவைப்படுபவர்களும் இம்முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். நல்ல பலனைக் கொடுக்கும்.
சிறிது காலம் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் கீல் வாதம், இடுப்புச் சந்து வாதம், துடைவாதம், நரம்பு சம்மந்தப்பட்ட சகல வாதங்களும் படிப்படியாகக் குறைந்து பூரண குணம் ஏற்படும்
.
தேவையான அளவு ஆப்பிள் பழத்தை எடுத்து இட்லி வேகவைப்பதுபோல் நீராவியில் வேக வைத்து எடுத்துக்கொண்டு தேவையான அளவு தேன் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் மூளைக்கு சக்தியளிக்கும். மூளையில் சோர்வு இருக்காது.

பல், ஈறுகள் கெட்டிப்படும். நரம்பு பலவீனம் நிவர்த்தியாகும். உடம்புக்குத் தேவையான முழு போஷாக்கையும் கொடுக்கும்.

ஆப்பிள் ஜூஸ்: ஆப்பிள் பழம் ஒன்றைத் துண்டித்து எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு துண்டு இஞ்சியைத் தோல் நீக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்
கேரட் 500 கிராம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பனங்கற்கண்டும் தேவையான அளவில் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து மிக்சியில் அடித்து தினசரி சாப்பிட்டுவந்தால் இயற்கையான தாதுபலத்தைத் தரும்.

இதய நோய் பாதிப்பு வராமல் செய்துவிடலாம். புற்றுநோய் வராமல தடுக்கும். குறிப்பாக குடற்புற்று, ஆசனப்புற்றைத் தடுப்பதில் முக்கியமானது. உடம்பு செல்கள் புதுப்பிக்கப்படுகிறது. இளமை நீடிக்க உதவுகிறது.
ஆப்பிள் மரப்பூக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும்

. இதை நாட்டு மருந்துக்கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். இப்பூக்களை வாங்கி சுத்தம் செய்து, இதற்குச் சமமாய்ச் சர்க்கரைச் சேர்த்து நன்கு கலவை செய்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வைத்து துணியால் வேடுகட்டி ஒரு மண்டலம் வெய்யிலில் வைத்து எடுத்துக் கொண்டு தினசரி 10 கிராம் அளவில் சாப்பிட்டுவந்தால் ஆண்மைக் கோளாறுகள் நீங்கி ஆண் தன்மை அதிகரிக்கும்.

இதயம் பலப்படும்.
என்ன இனி தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடலாமே...
மசாலா டீ செய்வது எப்படி....

தேவையான பொருள்கள்

டீ தூள் - மூன்று தேக்கரண்டி
சுக்குப்பொடி - இரண்டு சிட்டிகை அல்லது துருவிய இஞ்சி - அரை தேக்கரண்டி
மிளகுத்தூள் - இரண்டு சிட்டிகை அல்லது மிளகு - ஒன்று
பட்டைத்தூள் - இரண்டு சிட்டிகை அல்லது பட்டை - ஒரு சின்ன துண்டு
கிராம்புத்தூள் - இரண்டு சிட்டிகை அல்லது கிராம்பு - ஒன்று
ஏலக்காய்த்தூள் - இரண்டு சிட்டிகை அல்லது ஏலக்காய் - ஒன்று
தண்ணீர் - மூன்றரை டம்ளர்
செய்முறை
பொடி இல்லாவிட்டால் மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் அனைத்தையும் பொடித்துக்கொள்ளவும்.

மூன்றரை டம்ளர் தண்ணீரை கொதிக்க விடவும்.

கொதிக்கும் தண்ணீரில் டீ தூள் போடவும். பிறகு துருவிய இஞ்சி (அ) சுக்குத்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

இப்போது மற்ற அனைத்து பொடிகளையும் போட்டு இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். மசாலா டீ ரெடி. இதனுடன் சூடான பால் மற்றும் சர்க்கரை சேர்த்தும் பருகலாம்.

இல்லையென்றால் சர்க்கரை சேர்த்து, ஒரு டம்ளர் பால் ஊற்றி கொதிக்கவைத்து, இறக்கி பின், வடிகட்டி குடிக்கலாம்.

டயட்டில் உள்ளவர்கள் சர்க்கரை மற்றும் பால் இல்லாமல் குடிக்கலாம்.

இந்த டீ ஒரு முறை குடித்து பார்த்தால் அப்புறம், இதை தான் எப்போதும் குடிக்கத் தோணும்.
சாக்லெட் கேக் செய்வது எப்படி....

தேவையான பொருள்கள்

கன்டெண்ஸ்ட் மில்க் - ஒரு டின்
ஆல் பர்பஸ் மா - 2 1/4 டின் (கன்டெண்ஸ்ட் மில்க் டின்னால்)
சீனி - 10 தேக்கரண்டி
பட்டர் - ஒரு கப் ( 2 ஸ்டிக் - 225 கிராம்)
பேக்கிங் சோடா - 1 1/2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
கொக்கோ பவுடர் - 2 1/2 மேசைக்கரண்டி
தண்ணீர்/பால் - ஒரு டின் (கன்டெண்ஸ்ட் மில்க் டின்னால்)
பேக்கிங் தட்டு - 10" (x 2") வட்டத்தட்டு

செய்முறை

அவனை 350 F இல் முற்சூடு செய்யவும்

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்

பேக்கிங் தட்டிற்கு பேக்கிங் ஸ்பிரே செய்து வைக்கவும்

மா, கொக்கோ பவுடர், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சேர்த்து சலித்து வைக்கவும்

பட்டரை சிறிது உருக்கி சீனி, கன்டெண்ஸ்ட் மில்க் மற்றும் தண்ணீர் விட்டு மிக்ஸியில் நன்கு அடிக்கவும்

பின்னர் இந்த கலவையை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி அதனுள் சிறிது சிறிதாக மாக்கலவையை கொட்டி கட்டி இல்லாமல் நன்கு கலக்கவும்

அடிக்க தேவையில்லை

பின்னர் இக்கலவையை பேக்கிங் தட்டில் கொட்டி சமமாக பரவி முற்சூடு செய்த அவனில் 35- 40 நிமிடங்கள் அல்லது வேகும் வரை வைக்கவும்

(ஒரு டூத் பிக் அல்லது கத்தி அல்லது போர்க்கால் குற்றி பார்த்து கலவை ஒட்டாமல் வந்தால் வெந்து விட்டதாக கொள்ளவும்) பின்னர் வெந்த கேக்கை எடுத்து ஒரு வலைத்தட்டில் போட்டு ஆற விடவும்

பின்னர் விரும்பிய முறையில் அலங்கரித்து (ஐஸிங் செய்து) பரிமாறவும்

பட்டர் ஐஸிங் - வெள்ளை, சாக்லெட் பட்டர் ஐஸிங், sliced Almonds, பதப்படுத்திய (dried) அன்னாசி துண்டுகள் அல்லது வட்டமான சிறிய பிஸ்கட்கள் சாக்கோ நட் அல்லது M&M முதலில் ஒரு பாச்மென்ட் கடதாசியில் owlet உருவத்தை வரைந்து வெட்டி பின்னர் அதனை கேக்கின் மேல் வைத்து வெட்டவும்

பின்னர் ஒரு பிரஷால் கேக்கை க்ரம்ஸ் (crumbs) இல்லாதவாறு துடைத்து விடவும்

பின்னர் முகம் மற்றும் உடம்பிற்கு வெள்ளை பட்டர் ஐஸிங் தடவி சமமாக பரப்பி விடவும்

மிகவும் அழுத்தமாக (smooth) இருக்க தேவையில்லை.அதன் பின்னர் இறக்கைகளுக்கும் தலையின் ஓரத்திலும் கரைகளிற்கும் சாக்லெட் ஐஸிங் அல்லது பிரவுன் ஐஸிங் தடவவும்

இதுவும் அதிக அழுத்தமாக இருக்க தேவை இல்லை

பின்னர் இரு சிறிய முக்கோண கேக் துண்டுகளை ஐஸிங் தடவி காதுகள் வரவேண்டிய இடத்தில் ஐஸிங் கொண்டு பொருத்தவும் அத்தோடு கண்களிற்கு வட்டமாக வெட்டிய பதப்படுத்திய (dried) அன்னாசி துண்டுகள் அல்லது வட்டமான சிறிய பிஸ்கட்டை வைத்து கண்விழிக்கு பிரவுன் நிற சாக்கோ நட் அல்லது M&M வைக்கவும்

பின்னர் கண்களை சுற்றியும் வெள்ளை ஐஸிங் தடவிய உடம்பிலும் ஸ்லைஸ்ட் ஆமண்டை (sliced almonds) நிரல் நிரலாக அடுக்கவும்

பின் ஒரு டூத் பிக்கால் இறக்கைகளில் ஸ்கலொப் வடிவில் (scallop shape) வரைந்து விடவும்

வாய் வரும் இடத்தில் சிறிய தட்டையான கேக் துண்டை ஐஸிங் பூசி வைக்கவும்

விரும்பினால் பிரெட்ஸில் ஸ்டிக் (pretzil stick) கொண்டு அடியில் கூடு போல அலங்கரித்து விடவும்

இலகுவாக செய்யக்கூடிய ஐஸிங் கேக் தயார்.
சில எளிய மருத்துவ குறிப்புகள்.

இரண்டு வரி வைத்தியம்:


சர்க்கரை வியாதி இருப்பவர்கள் தினமும் வெந்தயத்தை சேர்க்க வேண்டும்.

பாகற்காயை வாரம் 2 நாட்கள் சேர்ப்பது மிகவும் நல்லது.

பட்டை  நீர் சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைக்கும்.
தூதுவளை.


புற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை --- மூலிகைகள் கீரைகள் !!!

தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிட்டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது.

சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.

தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும்.

முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டை வலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும்.

இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும்.

இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும்.

இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது.

தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.

தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.

தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.

இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும்.

இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.

பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும்.

இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.

தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.

ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.
*தேங்காய் தண்ணீர்* *மருத்துவம்*

ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா!

இளநீரின் நன்மைகளைப்
பற்றி அனைவருக்கும் தெரியும்.

அதேபோல் தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றியும்
பலரும் அறிந்திருப்பீர்கள்.

இப்போது நாம் பார்க்கப் போவது இளநீர் பற்றி அல்ல,

தேங்காய் தண்ணீரின் நன்மைகளைப் பற்றி தான்.

அதிலும் இதுவரை நீங்கள் கேட்டிராத தேங்காய் தண்ணீரின் நன்மைகளைத் தான் இங்கு கொடுத்துள்ளேன்

தேங்காய் தண்ணீரின் முக்கியமான மூலப்பொருள், அதன் மொத்தத் தண்ணீர் ஆகும்.

ஆயினும் தேங்காய் தண்ணீர், வைட்டமின் சி மற்றும் கால்சியம், மெக்னீஷியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல்வேறு தாதுக்களையும் கொண்டிருக்கிறது.

யு.எஸ்.டி.ஏ, ஊட்டச்சத்து தகவல்தளத்தின் படி,
100 மி.லி தேங்காய் தண்ணீர், பின்வரும் அளவுகளில் ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கிறது:

ஊட்டச்சத்து 100 கிராமில்
உள்ள அளவு

ஆற்றல். 29 கி.கலோரி
புரதம். 0.30 கி

கார்போஹைட்ரேட்டுகள்6.97 கி

சர்க்கரைகள். 6.36 கி
தாதுக்கள்
சுண்ணாம்புச்சத்து. 6 மி.கி
மெக்னீஷியம். 2 மி.கி
பாஸ்பரஸ். 6 மி.கி
பொட்டாசியம். 176 மி.கி

சோடியம். 12 மி.கி
வைட்டமின்கள்
வைட்டமின் சி. 5.5 மி.கி

தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அவற்றை
7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம்.

மேலும் தேங்காய் தண்ணீர் மிகவும் சிறப்பான உடலை சுத்தப்படுத்தும் பானங்களுள் ஒன்று.

ரத்த பிளாஸ்மா என்பது நமது ரத்தத்தின் ஒரு அங்கம்.

ஆனால் இந்த ரத்த பிளாஸ்மாவை போன்றே தேங்காய் தண்ணீரின் குணநலன் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அவசர காலங்களில் உயிரிழப்பை தவிர்க்க ரத்த பிளாஸ்மாவிற்கு பதிலாக தேங்காய் தண்ணீரை உபயோகிக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சரி,இப்போது தேங்காய் தண்ணீரைக் குடிப்பதால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்று பார்ப்போம்.

1.நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை பெறும் தேங்காய் தண்ணீரைக் குடிப்பதன்
மூலம் நோயெதிர்பபு
மண்டலம் வலிமைப் பெறுவதோடு,
சிறுநீர் பாதை தொற்றுகள்,
ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களையும் தேங்காய் தண்ணீர் அழித்து வெளியேற்றிவிடும்.

2.தைராய்டு ஹார்மோன்கள் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, தைராய்டு சுரப்பி சீராக செயல்பட வழிவகுக்கும்

3.சிறுநீரக பிரச்சனைகள் சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், தேங்காய் தண்ணீரைக் குடித்து வருவதன் மூலம், சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

மேலும் தேங்காய் தண்ணீர்
உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு,
சிறுநீரக கற்கள் இருந்தால், அவற்றைக் கரைத்துவிடவும் செய்யும்.

4.செரிமான பிரச்சனை செரிமான பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை நீங்குவதை நன்கு உணரலாம்.

ஏனெனில் தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து
வளமாக நிறைந்துள்ளது.

இவற்றை தெடர்ந்து குடித்து வந்தால், வாய்வு தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.

5.எடையைக் குறைக்கும் தேங்காய் தண்ணீரை
எவ்வளவு குடித்தாலும்,
உடலில் கொழுப்புக்கள்
சேராது.

மேலும் இதை குடித்தால், பசி கட்டுப்படும்.

இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.

6.உயர் இரத்த அழுத்தம் இருந்தால், தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அவை உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி, உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

7.இரவில் அதிகமாக மது அருந்திவிட்டு, மறுநாள் காலையில் எழும் போது கடுமையான தலைவலியை உணரும் போது, தேங்காய் தண்ணீர் குடித்தால், தலைவலி நீங்குவதோடு, ஆல்கஹால் மூலம் உடல் வறட்சி அடைவது தடுக்கப்பட்டு, ஹேங்ஓவர் பிரச்சனை நீங்கும்.

8.நீர்ச்சத்து அதிகமாகும் தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.

9.கர்ப்பிணிகளுக்கு நல்லது கர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
2025/01/15 01:15:00
Back to Top
HTML Embed Code: