tgoop.com/tvp_time_pass_only/20976
Last Update:
ன் திரை விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இந்தக் கால கட்டத்தில் தான், ஒரு புதிய சிந்தனையாளராக சார்லி சாப்ளின் தோன்றினார். அவசர கதியில் படங்களை எடுத்துத் தீர்ப்பது முக்கியமில்லை. நல்ல, அழுத்தமான கதை அல்லது காட்சிகளை அமைக்க வேண்டும். அவசியப் பட்டால், ஒரே காட்சியை இரண்டு முறை, மூன்று முறை, பலமு றை படமாக்கலாம் என்றெல்லாம் முடிவு செய்து, அவற்றைச் சிறப்பாகப் பின்பற்றிய இயக்குனர் அவர். ஒரு காட்சியைப் பலமுறை எடுக்கும் போது, ஒவ்வொரு முறையும் அதில் மெருகேறுகிறது என்பதை, சார்லி சாப்ளின் அனுபவப் பூர்வமாய் உணர்ந்தார். அவருடைய முந்தைய படங்களோடு ஒப்பிடும் போது, இந்தப் படங்கள் மிகச் சிறப்பாக, நல்ல தரத்துடன் உருவாகின. சாப்ளின் படங்களில் வெறும் நகைச்சுவை மட்டுமின்றி, அனுபவித்து ரசிப்பதற்கான அழகியல் வெளிப் பாடுகளும், கலை அம்சங்களும், மனித உணர்வுகளும் சிறப்பாக வெளிப்படத் தொடங்கிய காலகட்டம் இது.
இந்த மாற்றத்துக்கு முக்கியக் காரணமாய் அமைந்தவர், ஒரு பெண் - அமெரிக்கத் திரைப்பட உலகில் குறிப்பிடத்தக்க ஒரு இடத்தைப் பிடித்த பின், சார்லி சாப்ளின் தனக்காகத் தேடிக் கண்டு பிடித்த முதல் கதாநாயகி அவர். 'எஸ்னே' நிறுவனத்தின் ஒரு ஸ்டூடியோ, 'நைல்ஸ்' என்ற கிராமத்தில் இருந்தது. அங்கே தங்கி, தனது புதிய படத்துக்காகத் தயாராகிக் கொண்டிருந்த சார்லி சாப்ளின், தன்னோடு சேர்ந்து நடிப்பதற்காக ஒரு நல்ல நடிகையைத் தேடிக் கொண்டிருந்தார். சார்லி சாப்ளினுடன் நடிப்பதென்றால், கசக்குமா ? ஏகப்பட்ட பெண்கள் விண்ணப்பம் போட்டார்கள். ஆனால், அவர்களில் யாரையும் சாப்ளினுக்குப் பிடிக்கவில்லை. வெறும் அழகு மட்டும் போதாது, நகைச் சுவையில் தனக்கு இணையாக ஈடு கொடுத்து நடிக்கக்கூடிய ஒரு திறமையான பெண்ணைத் தான் அவர் எதிர்பார்த்தார். அப்போது தான், யாரோ ஏட்னாவைப் பற்றிச் சொன்னார்கள். 'ஏட்னா' என்று செல்லமாய் அழைக்கப்படும் 'ஏட்னா பர்வியான்ஸ்'(Edna Purviance)க்கு, திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசையோ, ஆர்வமோ இருக்கவில்லை. ஆனால், ஒரு காபிக் கடையில் அவரை அடிக்கடி பார்த்திருந்த ஒருவர், சார்லி சாப்ளினிடம் ஏட்னாவை சிபாரிசு செய்திருக்கிறார். சாப்ளினும் உடனடியாகக் கிளம்பிச் சென்று ஏட்னாவைச் சந்தித்தார். சாப்ளினுக்கு ஏட்னாவைப் பிடித்திருந்தது. என்றாலும், அவர் முகத்தில் ஒரு மெலிதான சோகம் படர்ந்திருப்பதாக அவர் நினைத்தார். இந்தப் பெண் நகைச்சுவை நடிப்புக்குச் சரிப்படுமா என்று அவருக்கு சந்தேகமாகவே இருந்தது. ஆனால், அதுவரை பார்த்த பெண்களில், ஏட்னா தான் ஓரளவு பரவாயில்லை என்பதால், அரை மனதாக, அவரையே தனது படத்தில் ஒப்பந்தம் செய்தார் சாப்ளின்.
பின்னர், ஏட்னாவுடன் நெருங்கிப் பழகிய சாப்ளின், அவருக்கு அபாரமான நகைச்சுவை உணர்வு இருப்பதைப் புரிந்து கொண்டார். அதை அப்படியே திரைக்குக் கொண்டுவந்து, தன்னுடைய நகைச்சுவைப் படங்களில் அற்புதமாய்ப் பயன் படுத்திக் கொண்டார். சார்லி சாப்ளினும், ஏட்னா பர்வியான்ஸும் இணைந்து நடித்த முதல் படம், 'A Night Out'. அதன் பிறகு, அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு, கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் சாப்ளினுக்கு ஜோடியாக நடித்து, நகைச்சுவைத் திரைப் படங்களில் வரலாற்றில் ஒரு முக்கிய நடிகையாகப் பெயர் பெற்றார் ஏட்னா பர்வியான்ஸ். திரைப் படங்களுக்கு வெளியேயும், சாப்ளினுக்கு ஒரு நல்ல தோழியாக இருந்தார் ஏட்னா. தன்னுடைய அம்மாவுக்குப் பிறகு, சார்லி சாப்ளின் அதிகம் நெருங்கிப் பழகிய பெண், ஏட்னாவாகத் தான் இருக்கும் !
ஏட்னாவின் பாசம் கலந்த தோழமை, சார்லி சாப்ளினுக்குள்ளிருந்த மென்மையான மனிதரை வெளிக் கொண்டு வந்தது. அதன் பிறகு தான் அவருடைய படங்களில் நெகிழ்ச்சியூட்டும் மனித உணர்வுகளின் யதார்த்தமான படப்பிடிப்புகளும், நகைச்சுவையோடு, ஒரு துளி சோகமும் கலந்த சென்டிமென்ட் சித்தரிப்புகளும் இடம் பெறத் தொடங்கின. இதற்கு உதாரணமாக, சார்லி சாப்ளினின் படங்களிலேயே மிகச் சிறந்தவற்றின் பட்டியலில் இடம் பிடித்த, 'The Tramp' என்ற படத்தைக் குறிப்பிடலாம். வழக்கமான நகைச்சுவைக் கதை தான். எப்போதும் போல், ஊர் ஊராய்ச் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் நாடோடி சாப்ளின், யதேச்சையாக ஒரு பெண்ணைச் (ஏட்னா) சந்திக்கிறார். ஒரு சண்டையில் அடிபட்டுக் கொண்டிருந்த சாப்ளினுக்கு, அந்தப் பெண் பணிவிடைகள் செய்கிறாள். அன்போடு அவரை கவனித்துக் கொண்டு, சீக்கிரத்தில் நலம் பெறச் செய்கிறாள். அவளுடைய இந்தப் பாசத்தை, 'காதல்' என்று தப்பாய்ப் புரிந்து கொள்கிறான் அந்த நாடோடி. அந்த நினைப்பில் உச்சி குளிர்ந்து, அவள் மீது அளவற்ற பிரியத்தையும், காதலையும் வளர்த்துக் கொள்கிறான். கடைசியில், அவள் ஏற்கெனவே இன்னொருவனைக் காதலிக்கிறாள் என்று தெரிந்து கொள்கிறான். பயங்கர ஏமாற்றம். வேதனை. மேலோட்டமாய்ப் பார்க்கும் போது, 'ஒரு நகைச்சுவைப் படத்துக்கு இப்படியா சோகமான முடிவு வைப்பார்கள் ?', என்று தான் நினைக்கத் தோன்றும். ஆனால், அப்படி நினைக்கிறவர்கள், 'The Tramp' படத்
BY Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil
Share with your friend now:
tgoop.com/tvp_time_pass_only/20976