*இணையற்ற நகைச்சுவை நாயகன் சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு!*
*12. Modern Times*
1914ம் ஆண்டு, சார்லி சாப்ளின் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய போது, திரைப்படங்கள் அனைத்தும் ஊமைப் படங்களாகத் தான் இருந்தன. அவற்றோடு சப்தத்தை - வசனம் அல்லது இசையைச் சேர்க்கும் தொழில் நுட்பம், அப்போது கண்டுபிடிக்கப் படவில்லை. ஆகவே, சாப்ளின் உட்பட, அந்தக் கால சினிமாவில் கொடி கட்டிப் பறந்த எல்லா நட்சத்திரங்களும், வசனங்கள், பின்னணி இசையின் உதவியின்றி, காட்சி அமைப்புகள், நடை, உடை, முக பாவனைகள் ஆகியவற்றின் உதவியால் தான் தங்கள் படங்களை உருவாக்க வேண்டியிருந்தது. அவர்களும் தங்களால் முடிந்த வரை, இந்தக் குறை தெரியாதபடி தங்கள் படங்களை அமைத்தார்கள். ஆனால், வசனங்களின் உதவியின்றி, சில நுணுக்கமான, உணர்ச்சி பூர்வமான விஷயங்களை சினிமாவில் சொல்வது முடியாமலே இருந்தது. இதே காரணத்தால், இந்தப் படங்களின் கதை / காட்சி அமைப்புகளும், விஸ்தாரமாய் அமைக்கப் பட்டன. உதாரணமாக, ஒரே ஒரு வசனத்தில் சொல்லிவிடக் கூடிய விஷயத்தை, ஐந்து நிமிடக் காட்சியின் மூலம் விளக்க வேண்டியிருந்தது. பின்னர், முப்பதுகளில், சினிமாவில் சப்தத்தைச் சேர்க்கும் தொழில் நுட்பம் வந்தது. அடுத்த சில ஆண்டுகளுக்குள், அநேகமாய் எல்லாப் பிரபல நிறுவனங்களும், 'டாக்கீஸ்' (Talkies) எனப்படும் 'பேசும் பட'ங்களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள். மௌன சினிமாவில் வசனமும், இசையும் சேர்வது, உண்மையிலேயே மிகப் பெரிய வரப்பிரசாதம் தான். இதனால், சினிமாவின் எல்லைகள் மேலும் விரிவடையும். பல புதிய விஷயங்கள் சினிமாவில் சொல்லப்படும். அந்தப் படங்களைப் பார்த்து ரசிக்கும் மக்களின் புரிதலும், ரசனையுணர்வும் மேம்படும். இந்த விஷயங்களெல்லாம் எல்லாருக்கும் தெரிந்திருந்தது. ஆனாலும், ஏற்கெனவே மௌனப் படங்களில் நடித்துப் பெரிய புகழ் பெற்றிருந்த சார்லி சாப்ளின் போன்ற பல நட்சத்திரங்கள், இப்போது திடீரென்று பேசி நடிக்க வேண்டும் என்றதும், ரொம்பவே தயங்கினார்கள். அவர்களின் தயக்கத்திலும் ஒரு நியாயம் இருந்தது. மௌனப் படங்களின் உலகத்தில் அவர்களுக்குக் கிடைத்திருந்த அனுபவமும், மரியாதையும், பேசும் படங்களில் பணியாற்றும் போது அவ்வளவாய்ப் பயன் படவில்லை. வழி தவறி விட்ட குழந்தைகள் போன்ற திகைப்போடு தான் அவர்களால் 'பேசும் பட'ங்களில் நடிக்கவோ, அவற்றை இயக்கவோ முடிந்தது. இந்த ஈடுபாட்டின்மை காரணமாக, பல 'மௌனப் பட' நட்சத்திரங்கள், 'பேசும் பட'ங்களில் பரிதாபமாய்த் தோல்வியடைந்தார்கள். இதற்கு முக்கியமான காரணம், மௌனக் கதாபாத்திரங்களாய் மக்கள் மனதில் பதிந்திருந்த சிலரை, சட்டென்று பேச வைத்து விடுவது சாத்தியமில்லை. இந்த மாற்றம், ஒரு பெரிய ஏமாற்றமாய் ரசிகர்களை பாதித்து விடுகிற சாத்தியங்கள் உண்டு. யோசித்துப் பாருங்கள், மஹாபாரதத்தில், காந்தாரி கதாபாத்திரத்தை நினைக்கும் போதே, அவருடைய கண்கள் ஒரு துணியால் கட்டப்பட்டிருக்கும் பிம்பம் நமக்குத் தோன்றி விடுகிறது. அந்தத் துணிக்கட்டு இல்லாத காந்தாரியை நம்மால் ஏற்கமுடியுமா ?
உதாரணமாக, சார்லி சாப்ளினின் புகழ்பெற்ற நாடோடி 'டிராம்ப்' பாத்திரம். அந்தக் கதாபாத்திரத்தின் சிறிய தொப்பி, பெரிய காலணி, தொளதொளா கால்சட்டை, இறுக்கமான மேல் சட்டை, கையில் சுழலும் தடி - இப்படி எல்லா அடையாளங்களோடு, அந்தப் பாத்திரம் ஒரு மௌன நாயகனாகவே மக்களிடையே அறிமுகமாகி விட்டது. அந்த நாடோடியால் பேசமுடியும் என்று கூட, ரசிகர்களில் யாரும் அது வரை கற்பனை செய்திருக்கமாட்டார்கள். இப்படிப் பட்ட அந்த 'அமர' கதாபாத்திரம், திடீரென்று வாயைத் திறந்து பேசத் தொடங்கினால், அதை மக்கள் எப்படி எதிர் கொள்வார்களோ என்று சாப்ளினுக்குக் கவலையாக இருந்தது. 'டிராம்ப்' பாத்திரத்தின் அழகே, அதன் மௌன நடவடிக்கைகள் தான் என்று அவர் நினைத்தார். ஆகவே, சார்லி சாப்ளினின் மனம், 'பேசும் பட'ங்களுக்கு எதிராகவே இருந்தது. 'திரைப்படம் என்பது, காட்சி பூர்வமான ஒரு ஊடகம். அதில் ஒலியைச் சேர்ப்பது சரியில்லை, இதனால் திரைப்படங்களின் அழகே கெட்டுப் போகிறது', என்று கருத்துத் தெரிவித்த சாப்ளின், வேண்டுமானால் மற்றவர்கள் 'டாக்கி'களைத் தயாரிக்கட்டும், நாம் வழக்கம்போல் மௌனப் படங்களைத் தொடர்ந்து தயாரிக்கலாம் என்று முடிவு செய்தார். கொஞ்சம் பத்தாம் பசலித்தனமான முடிவு தான். நான் புதிய தொழில் நுட்பத்தைப் பயன் படுத்திக் கொள்ள மாட்டேன், நீங்களெல்லாம் பேனாவில் எழுதுங்கள், எனக்கு பென்சில் போதும் என்னும் வறட்டுப் பிடிவாதம் தான். ஆனாலும், சாப்ளின் திடீரென்று இந்த முடிவை எடுத்து விடவில்லை. ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு தான், அவர் இந்தத் தீர்மானத்துக்கு வந்திருந்தார்.
திரைப்படங்களின் பரிணாம வளர்ச்சியில், இந்த 'பேசும் பட'ங்கள் ஒரு முக்கியமான முன்னேற்றம் என்பதை சாப்ளின் மறுக்கவில்லை. என்றாலும், பேசும் படங்களைப் போலவே, மௌனப் படங்களும் ஒரு அற்புதமான கலை வடிவம் தான் என்று அவர் நம்பினார். பேசு

BY Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil
As the broader market downturn continues, yelling online has become the crypto trader’s latest coping mechanism after the rise of Goblintown Ethereum NFTs at the end of May and beginning of June, where holders made incoherent groaning sounds and role-played as urine-loving goblin creatures in late-night Twitter Spaces. During a meeting with the president of the Supreme Electoral Court (TSE) on June 6, Telegram's Vice President Ilya Perekopsky announced the initiatives. According to the executive, Brazil is the first country in the world where Telegram is introducing the features, which could be expanded to other countries facing threats to democracy through the dissemination of false content. Concise Just as the Bitcoin turmoil continues, crypto traders have taken to Telegram to voice their feelings. Crypto investors can reduce their anxiety about losses by joining the “Bear Market Screaming Therapy Group” on Telegram. Healing through screaming therapy
from us