tgoop.com/THAGAVAL_KALANCHIYAM/49525
Last Update:
5 - வகையான கூட்டு.
செளசெள கேரட் கூட்டு.
தேவையான பொருள்கள்:
செளசெள - ஒன்று
கேரட் - 2
துவரம் பருப்பு - ஒரு கப்
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தேங்காய் - 3 துண்டு
சீரகம் - 1 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
செளசெள, கேரட் இரண்டையும் தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காயை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
துவரம் பருப்பை வேக வைத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கின செளசெள, கேரட், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
மிக்ஸியில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
காய்கள் நன்கு வெந்ததும் அரைத்த விழுதை போட்டு கிளறி விடவும்.
5 நிமிடங்கள் கழித்து வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்பை ஊற்றி கிளறவும்.
இந்த கலவை நன்கு 10 நிமிடம் வரை கொதித்ததும் இறக்கி வைத்து விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து இறக்கி வைத்திருக்கும் கூட்டில் கொட்டவும்.
சுவையான செளசெள கேரட் கூட்டு தயார்.
இதை பூரி, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
இதே கூட்டை செளசெளவிற்கு பதிலாக கோஸ் அல்லது புடலங்காய் போட்டும் செய்யலாம்.
புடலங்காய் கூட்டு.
தேவையான பொருள்கள்:
புடலங்காய் - ஒன்று
தேங்காய் துருவல் - கால் கப்
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
வேக வைத்த பயத்தம் பருப்பு - அரை கப்
செய்முறை:
புடலங்காயை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் புடலங்காயை போட்டு அதனுடன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம், வேகும் வரை கொதிக்க விடவும்.
வேக வைத்த பருப்புடன் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி கொள்ளவும்.
பருப்பு கலவையை புடலங்காயுடன் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வைத்து விடவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, போட்டு வெடித்ததும் உளுத்தம் பருப்பை போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றை கூட்டுடன் சேர்த்து கிளறி விடவும்.
சுவையான எளிதில் செய்யக்கூடிய புடலங்காய் கூட்டு ரெடி
சுண்டைக்காய் கூட்டு.
தேவையான பொருள்கள்:
சுண்டைக்காய் - கால் கப்
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
கடுகு - முக்கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
கல் உப்பு - அரை தேக்கரண்டி
துவரம் பருப்பு - 25 கிராம்
கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை:
சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக விடவும்.
துவரம் பருப்பில் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
புளியுடன் 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
தேங்காயுடன் 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வேக வைத்த சுண்டைக்காயுடன் வேக வைத்த பருப்பை போட்டு அடுப்பில் வைத்து புளிக்கரைசலை ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விடவும்.
அதன் பிறகு மிளகாய் தூள், தேங்காய் விழுது போட்டு கிளறி அரை தேக்கரண்டி சீனி போட்டு கலக்கி விடவும்.
2 நிமிடம் கழித்து இறக்கி வைத்து கறிவேப்பிலை போடவும்.
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கூட்டில் சேர்க்கவும்.
சுவையும் மணமும் நிறைந்த சுண்டைக்காய் கூட்டு ரெடி.
வாழைத்தண்டு கூட்டு.
தேவையான பொருள்கள்:
வாழைத்தண்டு - 3 கப் (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - ஒன்று
கடலைப் பருப்பு - ஒரு கப்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
கடலைப் பருப்பு - அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
கறிவேப்பிலை - கொஞ்சம்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
வாழைத்தண்டு, நறுக்கிய வெங்காயம், கடலைப் பருப்பு மூன்றையும் சிறிது தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைத்து எடுக்கவும்
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுந்து, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
தாளித்தவற்றை கூட்டில் சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
இந்த வாழைத்தண்டு கலவையை நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவும்.
வாழைத்தண்டு கூட்டு தயார்.
BY தகவல் களஞ்சியம்
Share with your friend now:
tgoop.com/THAGAVAL_KALANCHIYAM/49525