tgoop.com/THAGAVAL_KALANCHIYAM/49526
Last Update:
பீர்க்கங்காய் கூட்டு
தேவையான பொருள்கள்
பீர்க்கங்காய் - ஒன்று
தக்காளி - 2
பாசிப்பருப்பு - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
தேங்காய்ப் பூ - 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
சீரகம் - முக்கால் தேக்கரண்டி
பூண்டு - ஒரு பல்
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க
செய்முறை:
பாசிப்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
மிக்ஸியில் தேங்காயுடன் பூண்டு, சீரகம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பீர்க்கங்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்.
தக்காளி மற்றும் வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வேகவைத்த பருப்புடன் பீர்க்கங்காய், தக்காளி, வெங்காயம் மற்றும் உப்புச் சேர்த்து வேகவிடவும்.
வேக வைத்த பீர்க்கங்காயுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்கவிட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் தாளித்து சேர்த்து இறக்கி வைக்கவும்.
சுவையான பீர்க்கங்காய் கூட்டு தயார்
BY தகவல் களஞ்சியம்
Share with your friend now:
tgoop.com/THAGAVAL_KALANCHIYAM/49526