tgoop.com/THAGAVAL_KALANCHIYAM/49528
Last Update:
5 - வகையான பாயாசம்.
பயத்தம் பருப்பு பாயாசம்.
தேவையான பொருள்கள்:
பயத்தம் பருப்பு - 100 கிராம்
வெல்லம் - 150 கிராம்
தேங்காய் துருவல் - அரை கப்
அரிசி மாவு - அரை மேசைக்கரண்டி
ஏலக்காய் - 2
செய்முறை:
வெல்லத்தை பொடி செய்து வைத்துக் கொள்ளவும். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் மற்ற தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி கரைய விடவும்.
பயத்தம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக வைக்கவும்.
வெந்த பருப்பை நன்கு மசித்து விடவும்.
வெல்லம் கரைந்ததும் எடுத்து வேக வைத்த பருப்பில் வடிகட்டி ஊற்றவும்.
பருப்புடன் வெல்லத்தை சேர்த்ததும் நன்கு கிளறி விட்டு அடுப்பில் வைத்து கிளறவும்.
தேங்காய் துருவல், ஏலக்காய், அரிசி மாவு இவற்றை மிக்ஸியில் போட்டு 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
5 நிமிடம் கழித்து பருப்புடன் அரைத்த தேங்காய் விழுதை போட்டு ஒரு முறை கிளறி நுரைத்து பொங்கி வரும் போது இறக்கி வைத்து விடவும்.
ஒரு குழிக்கரண்டி அல்லது வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை போட்டு வறுத்து பாயாசத்தில் ஊற்றி கிளறி பரிமாறவும்.
சுவையான பயத்தம் பருப்பு பாயாசம் ரெடி.
உளுத்தம்பருப்பு பாயாசம்.
தேவையான பொருள்கள்:
உளுத்தம் பருப்பு - ஒரு கப்
பால் - ஒரு கப்
வெல்லம் - 150 கிராம்
தேங்காய் துருவல் - சிறிதளவு
பூண்டு - 6
முந்திரி பருப்பு - 5
திராட்சை - 10
நெய் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் வைக்கவும்.
உளுத்தம் பருப்பை கழுவி வைக்கவும்.
பூண்டை சிறிதாக நறுக்கி வைக்கவும்.
குக்கரில் தண்ணீர் விட்டு பருப்பு, பூண்டு சேர்த்து 4 அல்லது 5 விசில் வைத்து வேக வைக்கவும்.
பருப்பு நன்றாக வெந்ததும் வெல்லம் சேர்த்து கரைத்து விடவும்.
வெல்லம் கரைந்ததும் பால் சேர்க்கவும்.
ஒரு கடாயில் சிறிதளவு நெய் விட்டு திராட்சை, முந்திரி சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்த திராட்சை, முந்திரியை பாயாசத்தில் சேர்க்கவும்.
கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
சுவையான உளுத்தம் பருப்பு பாயாசம் தயார்.
உளுந்து, பூண்டு சேர்ப்பதால் மிகவும் சத்தானதாகும்.
பாயாசம் ஆனால் பூண்டு சேர்த்து இருக்கு என்று நினைப்பீர்கள், பூண்டு வாசனை வராது.
இதில் பூண்டு சேர்ப்பது தான் ஸ்பெஷல்.
விரும்பாதவர்கள் சேர்க்க வேண்டாம்.
தேங்காய் பால், ஏலக்காய் சேர்த்தும் செய்யலாம்
இது திருநெல்வேலி பக்கம் அதிகமாக செய்வார்கள்.
அவல் பாயாசம்.
தேவையான பொருள்கள்:
அவல் - 200 கிராம்
சீனி - கால் கிலோ
பயத்தம் பருப்பு - 50 கிராம்
நெய் - தேவைக்கு
காய்ச்சின பால் - கால் லிட்டர்
ஏலக்காய் தூள் - ஒரு தேக்கரண்டி
முந்திரி - விருப்பத்திற்கு
செய்முறை:
வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு அவலை வாட்டி கையால் ஒன்றிரண்டாக நொறுக்கி கொள்ளவும்.
பயத்தம் பருப்பை லேசாக வாட்டிக் கொள்ளவும்.
குக்கரில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு பயத்தம் பருப்பை சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
(பருப்பு குழையாமல் வேக வைக்கவும்.
)பயத்தம் பருப்போடு அவல் சேர்த்து வெந்ததும் அதில் சீனி சேர்த்து கொதிக்க வைக்கவும்.
( குக்கரை மூடாமல் வேக வைக்கவும் )வாணலியில் நெய் விட்டு முந்திரியை பொன்னிறமாக வறுத்து சேர்க்கவும்.
இறக்கி வைத்து ஏலக்காய் தூள், பால் சேர்க்கவும்.
சுவையான அவல் பாயசம் தயார்.
இதை சூடாகவும் பருகலாம், ப்ரிட்ஜில் வைத்தும் பருகலாம்.
இரண்டு நாட்களுக்கு கெட்டுப் போகாது.
பரங்கிவிதை பாயாசம்.
தேவையான பொருள்கள்:
பரங்கிவிதை - ஒரு கப்
சீனி - 1 1/2 கப்
பால் - அரை லிட்டர்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பரங்கிவிதையை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
ஊறியதும் எடுத்து 2 முறை அலசிக் கொள்ளவும்.
மிக்ஸியில் போட்டு பால் அரை கப் ஊற்றி நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மீதியுள்ள பாலை ஊற்றி, சீனி சேர்த்து நன்கு கலக்கவும்.
பாத்திரத்தை அடுப்பில் மிதமான தீயில் வைத்து கரண்டியை வைத்து கிளறாமல் கொதிக்க விடவும்.
கொதித்து பொங்கி வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
சுவையான பரங்கிவிதை பாயாசம் ரெடி.
அரிசி பாயாசம்.
தேவையான பொருள்கள்:
உடைத்த அரிசி - 100 கிராம்
பால் - 3 கப்
வெல்லம் - ஒரு கப்
முந்திரி - 12 (இரண்டாக உடைத்துக் கொள்ளவும்)
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
நெய் - 1 1/2 மேசைக்கரண்டி
செய்முறை:
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் உடைத்த அரிசியை போட்டு 4 நிமிடம் வறுத்துக் கொள்ளவும்.
அதை குக்கரில் போட்டு 2 கப் பால் ஊற்றி சிட்டிகை உப்பு சேர்த்து குக்கரை மூடி வேக வைக்கவும்.
2 விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் வைத்திருக்கவும்.
BY தகவல் களஞ்சியம்
Share with your friend now:
tgoop.com/THAGAVAL_KALANCHIYAM/49528