tgoop.com/THAGAVAL_KALANCHIYAM/49531
Last Update:
4 - வகையான பிரியாணி...
சிக்கன் பிரியாணி.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ
பாஸ்மதி அரிசி - 3 கப்
நெய் - 5 தேக்கரண்டி
வெண்ணெய் - 3 தேக்கரண்டி
பிரின்ஞி இலை - 2
ஏலகாய் தூள் - இரு சிட்டிகை
பட்டை - 4
லவங்கம் - 5
சோம்பு - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 பெரியது
பூண்டு - 1 பெரியது
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 10
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
புதினா - 1/2 கப்
கொத்தமல்லி இலை - 1/2 கப்
தக்காளி - 3
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 பெரியது
நெய் - 3 தேக்கரண்டி
செய்முறை:
குக்கரில் எண்ணெய்,நெய் விட்டு காய்ந்ததும் பிரின்ஞி இலை, சோம்பு,ஏலகாய் தூள் சேர்க்க வேண்டும். பின்னர் பட்டை, லவங்கம்,சோம்பு,இஞ்சி,பூண்டுஆகியவற்றை குக்கரில் போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பின்னர் வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பின்னர் மஞ்சள் தூள்,பாதி உப்பு, புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் தக்காளியை அரைத்து சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
நன்றாக வதங்கிய பின் கோழியை சேர்த்து வதக்கி கொண்டே இருக்க வேண்டும். மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து தண்ணீர் விடமால் கோழியுடன் மசாலா நன்கு ஒட்டி வரும் வரை வதக்க வேண்டும். பின்னர் அரிசி சேர்த்து வதக்கி 6 கப் தண்ணீர் விட்டு எலுமிச்சை சாறு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் நிறுத்தி விட வேண்டும்.
அரை மணி நேரம் கழித்து குக்கரை திறந்து, கிளறிவிட்டு பரிமாறவும்.
ஹைதராபாத் மட்டன் பிரியாணி.
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
பாஸ்மதி அரிசி - 4 கப்
பச்சை மிளகாய் - 3
வறுத்த வெங்காயம் - 1/4 கப்
தயிர் - 150 கிராம்
வரமிளகாய்த்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
புதினா,கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு,நெய் = தேவைக்கு
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
இளஞ்சூடான பால் - 1 டேபிள்ஸ்பூன்
குங்கமப்பூ - சிறிதளவு
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
ரம்பை இலை - 2
ஏலக்காய் - 2
பிரியாணி மசாலா தயாரிக்க:
தனியாத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த வெந்தயக்கீரை - 1 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
பச்சை ஏலக்காய் - 3
கறுப்பு ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 3
ஜாதிபத்திரி - 1
வறுத்த வெங்காயம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
மசாலாவுக்கு கொடுத்துள்ள பொருட்களை நைசாக பொடிக்கவும்.
சுத்தம் செய்த மட்டனில், பிரியாணி மசாலா+தயிர்+உப்பு+வரமிளகாய்த்தூள்+கீறிய பச்சை மிளகாய் அனைத்தையும் ஒன்றாக கலந்து 1 மணிநேரம் ப்ரிட்ஜில் வைக்கவும் அல்லது முதல்நாள் இரவே கலந்து வைக்கலாம்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் பட்டை+கிராம்பு+ஏலக்காய்+ரம்பை இலை+ உப்பு+அரிசி சேர்த்து 3/4 பதமாக வடித்து ஆறவைக்கவும்.
பிரஷர் பானில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு+புதினா கொத்தமல்லியை லேசாக வதக்கி ஊறவைத்த மட்டனை சேர்த்து 4 விசில் வரை வேகவைக்கவும்.தண்ணீர் ஊற்ற தேவையில்லை.
ஒரு பாத்திரத்தில் வேகவைத்த மட்டன் கலவை+சாதம்+நெய்+வறுத்த வெங்காயம்+ வறுத்த முந்திரி(விரும்பினால்)போட்டு எலுமிச்சை சாறு +பாலில் சிறிது குங்கமப்பூ கரைத்து ஊற்றவும்.
இப்படியாக கலவையை போட்டதும் 10 நிமிடம் தம்மில் போடவும் அல்லது 190°C முற்சூடு செய்த அவனில் 10 நிமிடம் வைக்கவும்.
முட்டை பிரியாணி:
தேவையான பொருட்கள்
முட்டை - 4
பாஸ்மதிஅரிசி - 3 கப்
பட்டை - 2
கிராம்பு - 2
பிரிஞ்சி இலை - 2
ஏலக்காய் - 2
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 10 பல்
இஞ்சி - சிறிது
வெங்காயம் - 3
புதினா - 1/4 கப்
கொத்தமல்லி - 1/4 கப்
தக்காளி - 2
எண்ணெய் - 6 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2ஸ்பூன்
தனியா தூள் - 1ஸ்பூன்
பிரியாணி மசாலா - 2 ஸ்பூன்
உப்பு - 2 ஸ்பூன்
கேசரி கலர் பொடி - சிறிது
நெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,லவங்கம், பிரிஞ்சி இலை மற்றும்ஏலக்காய் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து, பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
பின்பு அதில் கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.அதில் வெட்டிவைத்த தக்காளி துண்டுகளை சேர்க்கவும்.
BY தகவல் களஞ்சியம்
Share with your friend now:
tgoop.com/THAGAVAL_KALANCHIYAM/49531