tgoop.com/THAGAVAL_KALANCHIYAM/49550
Last Update:
4 - வகையான லட்டு.
தேங்காய்-பிரட் லட்டு.
தேவையான பொருட்கள்:
தேங்காய்
சர்க்கரை
பிரட்
ஏலக்காய்
முந்திரி
நெய்
செய்முறை:
5 பிரட்டை நன்கு பொடித்து அதனுடன் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில், ஒரு கப் துருவிய தேங்காய், 1/2 கப் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சர்க்கரை கரைந்து வரும் வரை சூடாக்கவும்.
பின், வறுத்து வைத்துள்ள பிரட், நெய்யில் வறுத்த பத்து முந்திரி, தட்டிய இரண்டு ஏலக்காய் சேர்த்து நன்கு கலந்து விட்டு, ஆறிய பின், சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
பூந்தி லட்டு.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு
சர்க்கரை
நெய்
ஏலக்காய்
முந்திரி
உலர் திராட்சை
எண்ணெய்
கேசரி பவுடர்
செய்முறை:
பாத்திரத்தில், 200 கிராம் கடலை மாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
பின், கரைத்து வைத்துள்ள கடலை மாவை பூந்தியாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
தயார் செய்து வைத்துள்ள பூந்தியை ஒன்று-இரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில், 200 கிராம் சர்க்கரை, 150 மில்லி தண்ணீர், 1/4 ஸ்பூன் கேசரி பவுடர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிட்டு பாகு காய்ச்சிக் கொள்ளவும். பாகு இறுக்கமாக இருக்கக் கூடாது.
பாகு சூடாக இருக்கும் பொழுதே தயார் செய்து வைத்துள்ள பூந்தியில் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து கலந்து விடவும். இதனுடன், தட்டிய மூன்று ஏலக்காய், 50 கிராம் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து விட்டு ஆறிய பின் சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
கருப்பட்டி லட்டு.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு
கருப்பட்டி
நெய்
ஏலக்காய்
முந்திரி
உலர் திராட்சை
எண்ணெய்
கேசரி பவுடர்
செய்முறை:
பாத்திரத்தில், 200 கிராம் கடலை மாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
பின், கரைத்து வைத்துள்ள கடலை மாவை பூந்தியாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
தயார் செய்து வைத்துள்ள பூந்தியை ஒன்று-இரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில், 200 கிராம் பொடியாக்கிய கருப்பட்டி, 150 மில்லி தண்ணீர், 1/4 ஸ்பூன் கேசரி பவுடர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிட்டு பாகு காய்ச்சிக் கொள்ளவும். பாகு இறுக்கமாக இருக்கக் கூடாது.
பாகு சூடாக இருக்கும் பொழுதே தயார் செய்து வைத்துள்ள பூந்தியில் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து கலந்து விடவும். இதனுடன், தட்டிய மூன்று ஏலக்காய், 50 கிராம் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து விட்டு ஆறிய பின் சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
அவல் லட்டு.
தேவையான பொருட்கள்:
அவல்
சர்க்கரை
ஏலக்காய்
முந்திரி
உலர் திராட்சை
நெய்
செய்முறை:
கடாயில், 1/2 கப் சர்க்கரை, ஒரு கப் அவலை தண்ணீரில் நனைத்து தண்ணீரை வடித்து விட்டு சேர்த்து, மேலும் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து சர்க்கரை உருகும் வரை நன்கு கலந்து விடவும்.
பின், நெய்யில் வறுத்த 25 கிராம் முந்திரி மற்றும் உலர் திராட்சை, இரண்டு தட்டிய ஏலக்காய் சேர்த்து இறுகி உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வரும் வரை நன்கு கலந்து விடவும்.
ஆறிய பின், சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
BY தகவல் களஞ்சியம்
Share with your friend now:
tgoop.com/THAGAVAL_KALANCHIYAM/49550