VARALATRIL_INTRU Telegram 22014
வரலாற்றில் இன்று.

26 - 06 - 2024.

WEDNESDAY.

திருவள்ளுவர் ஆண்டு 2055.

ஆனி 12-ந் தேதி.

புதன்கிழமை.

கிரிகோரியன் ஆண்டின் 177 ஆம் நாளாகும்.

நெட்டாண்டுகளில் 178 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 188 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்.

4 – உரோமைப் பேரரசர் அகஸ்ட்டஸ் திபேரியசைத் தனது வாரிசாக அறிவித்தான்.

363 – உரோமைப் பேரரசர் யூலியன் சாசானியாவில் இருந்து பின்வாங்கும் போது கொல்லப்பட்டார். தளபதி யோவியன் போர்க்களத்தில் பேரரசராக போர்வீரர்களால் நியமிக்கப்பட்டார்.

684 – இரண்டாம் பெனடிக்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1243 – கோசு டாக் போரில் மங்கோலியர் செல்யூக்குக்குகளைத் தோற்கடித்தனர்.

1295 – போலந்து மன்னராக இரண்டாம் பிரிசிமித் முடிசூடினார்.

1409 – மேற்கு சமயப்பிளவு: கத்தோலிக்க திருச்சபை இரண்டாகப் பிளவடைந்தது. பீசா பொதுச்சங்கம் உரோமின் திருத்தந்தை பன்னிரெண்டாம் கிரகோரியையும் பன்னிரண்டாம் பெனடிக்டையும் இணைத்ததை அடுத்து, பெத்ரோசு பிலார்கசு எதிர்-திருத்தந்தை ஐந்தாம் அலெக்சாண்டர் ஆக நியமிக்கப்பட்டார்.

1460 – வாரிக் பிரபு ரிச்சார்டு நெவில், மார்ச் பிரபு எட்வர்டு ஆகியோர் தமது படைகளுடன் இங்கிலாந்து திரும்பி, இலண்டனுக்கு சென்றனர்.

1483 – மூன்றாம் ரிச்சர்டு இங்கிலாந்தின் அரசனாக முடிசூடினார்.

1541 – இன்கா பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்த பிரான்சிஸ்கோ பிசாரோ லிமாவில் கொல்லப்பட்டார்.

1718 – உருசியாவின் முதலாம் பேதுரு மன்னரின் மகன் அலெக்சி பெத்ரோவிச் தந்தையினால் தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, மர்மமான முறையில் மரணமடைந்தான்.

1723 – பக்கூ நகரம் உருசியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

1794 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: புளூருசு போரில் முதற்தடவையாக வானூர்திகள் போரில் பயன்படுத்தப்பட்டன.

1803 – கண்டிப் போர்கள்: கண்டியில் சரணடைந்த பிரித்தானியப் படையினர் பெருமளவில் கொல்லப்பட்டனர்.[1][2]

1830 – நான்காம் வில்லியம் பிரித்தானியாவின் அரசராக முடிசூடினார்.

1843 – நாஞ்சிங் உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது. ஒங்கொங் தீவு பிரித்தானியாவின் கட்டுபாட்டுக்குள் வந்தது.

1870 – ஐக்கிய அமெரிக்காவில் கிறித்துமசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.

1886 – ஆன்றி முவாசான் புளோரின் தனிமத்தைப் பிரித்தெடுத்தார்.

1924 – ஐக்கிய அமெரிக்காவின் டொமினிக்கன் குடியரசு மீதான ஆக்கிரமிப்பு எட்டு ஆண்டுகளின் பின்னர் முடிவுக்கு வந்தது.

1936 – முதலாவது செயல்முறை ரீதியான உலங்கு வானூர்தி பறக்க விடப்பட்டது.

1941 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் வானூர்திகள் அங்கேரியின் காசா (இன்றைய சிலோவாக்கியாவில்) மீது குண்டுகளை வீசின. அடுத்த நாள் அங்கேரி போரை அறிவித்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: சான் மரீனோ மீது பிரித்தானிய வான்படை தவறுதலாகக் குண்டுத்தாக்குதல் நடத்தியதில் 35 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

1945 – ஐக்கிய நாடுகள் பட்டயம் சான் பிரான்சிஸ்கோவில் 50 கூட்டு நாடுகளினால் கையெழுத்திடப்பட்டது.

1948 – முதலாவது இருமுனை சந்தி திரான்சிஸ்டருக்கான காப்புரிமத்தை வில்லியம் ஷாக்லி பெற்றார்.

1960 – முன்னாள் பிரித்தானிய சோமாலிலாந்து சோமாலிலாந்து என்ற பெயரில் விடுதலை பெற்றது.

1960 – மடகாசுகர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1974 – உலகளாவிய தயாரிப்புக் குறியீடு முதன் முதலாக ரிக்லியின் மெல்லும் பசையின் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்டது.

1976 – கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

1977 – எல்விஸ் பிரெஸ்லி தனது கடைசி இசை நிகழ்ச்சியை இந்தியானாபோலிசில் நடத்தினார்.

1978 – டொரான்டோ சென்ற ஏர் கனடா 189 விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

1991 – யுகொசுலாவிய மக்கள் இராணுவம் சுலோவீனியா மீது 10-நாள் போரைத் தொடங்கியது.

1995 – கத்தாரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில், சேக் அமத் பின் கலீபா அல் தானி அவரது தந்தை கலீபா பின் அமது அல் தானியை கவிழ்த்து ஆட்சியைப் பிடித்தார்.

1995 – அடிஸ் அபாபாவில் எகிப்திய அரசுத்தலைவர் ஓசுனி முபாரக் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

2000 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அன்னை பாத்திமாவின் மூன்றாவது இரகசியத்தை அறிவித்தார்.

2007 – திருத்தந்தை தேர்தலில் வெற்றி பெறுபவர் மூன்றில் இரண்டு வாக்குகளைப் பெற வேண்டும் என திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் திருத்தம் கொண்டுவந்தார்.

2012 – கொலராடோவில் பரவிய தீயினால் 347 வீடுகள் எரிந்து சாம்பலாயின, இருவர் உயிரிழந்தனர்.

2013 – சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தில் இடம்பெற்ற கலவரங்களில் 36 பேர் உயிரிழந்தனர்.

tgoop.com/Varalatril_Intru/22014
Create:
Last Update:

BY வரலாற்றில் 🏹 இன்று

Share with your friend now:
tgoop.com/Varalatril_Intru/22014

View MORE
Open in Telegram

Telegram News

Date: |

Ng, who had pleaded not guilty to all charges, had been detained for more than 20 months. His channel was said to have contained around 120 messages and photos that incited others to vandalise pro-government shops and commit criminal damage targeting police stations. Today, we will address Telegram channels and how to use them for maximum benefit. The Standard Channel To edit your name or bio, click the Menu icon and select “Manage Channel.” Developing social channels based on exchanging a single message isn’t exactly new, of course. Back in 2014, the “Yo” app was launched with the sole purpose of enabling users to send each other the greeting “Yo.”
from us

Telegram வரலாற்றில் 🏹 இன்று
FROM American