Telegram Web
*ஜூன் 24*

*கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாள்*

கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1921 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப்  பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார்.

நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர்.

சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.

தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர்.

இவர் சேரமான் காதலி  என்ற நூலுக்காக சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர்.

Prepared by
Covai women ICT_போதிமரம்
வரலாற்றில் இன்று.



24 - 06 - 2024.

MONDAY.



திருவள்ளுவர் ஆண்டு 2055.

ஆனி 10-ந் தேதி.

திங்கட்கிழமை.

கிரிகோரியன் ஆண்டின் 175 ஆம் நாளாகும்.

நெட்டாண்டுகளில் 176 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 190 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்.

கிமு 217 – திராசிமின் ஏரி போரில் ஹன்னிபால் கையசு பிளாமினியசு தலைமையிலான உரோமைப் படைகலைத் தோற்கடித்தார்.

474 – யூலியசு நெப்போசு தன்னை மேற்கு உரோமைப் பேரரசராக அறிவித்தார்.

1314 – இராபர்ட்டு புரூசு தலைமையிலான இசுக்கொட்லாந்துப் படைகள் இங்கிலாந்துப் படையினரைத் தோற்கடித்தன. இசுக்கொட்லாந்து தனது விடுதலையை மீண்டும் பெற்றது.[1]

1340 – நூறாண்டுப் போர்: இங்கிலாந்தின் மூன்றாம் எட்வர்டு தலைமையின் கீழ் இங்கிலாந்து கடற்படையினர் பிரெஞ்சுக் படைகளை முற்றாகத் தோற்கடித்தனர்.

1374 – செருமனியின் ஆஃகன் நகரில் புனித ஜானின் நடனம் அந்நகர மக்களுக்கு மாயத்தோற்ரங்களைக் கொடுத்து மக்களை பித்துப் பிடித்தவர்கள் போல நடனமாட வைத்தது. மக்கள் மயங்கும் வரை நடனம் ஆடினர். இப்பித்து பின்னர் ஐரோப்பாவெங்கும் பரவியது.

1497 – ஜான் கபோட் வட அமெரிக்காவில் நியூபவுண்லாந்து தீவில் தரையிறங்கி, வைக்கிங்குகளுக்குப் பின்னர் அப்பகுதியை ஆராய்ந்த முதலாவது ஐரோப்பியர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.

1509 – எட்டாம் என்றி இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார்.

1571 – மிகுவெல் உலோபசு டி லெகாசுபி மணிலா நகரை அமைத்தார்.

1597 – கிழக்கிந்தியத் தீவுகளுக்கான முதலாவது இடச்சுப் பயணிகள் கப்பல் சாவகத்தை அடைந்தது.

1622 – மக்காவு நாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் டச்சு நாட்டவர் தோல்வி கண்டனர்.

1779 – அமெரிக்கப் புரட்சிப் போர்: ஜிப்ரால்ட்டர் மீதான பெரும் முற்றுகை ஆரம்பமானது.

1812 – நெப்போலியப் போர்கள்: உருசியாவினுள் ஊடுருவும் முயற்சியில் நெப்போலியனின் பெரும் படை நேமன் ஆற்றைக் கடந்தது.

1813 – கனடா, ஒண்டாரியோவில் பீவர் அணை சமரில் பிரித்தானிய, இந்தியக் கூட்டுப் படை அமெரிக்க இராணுவத்தைத் தோற்கடித்தது.

1821 – எசுப்பானியாவிடம் இருந்து வெனிசுவேலாவின் விடுதலைக்கான போர் கரபோபோ என்ற இடத்தில் நடைபெற்றது.

1856 – இலங்கையில் புகைப்படக்கலை பார்ட்டிங் என்பவரால் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.[2]

1859 – சார்தீனியா, மற்றும் பிரான்சின் மூன்றாம் நெப்போலியனின் படைகள் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியப் படைகளைத் தோற்கடித்தன.

1880 – கனடாவின் நாட்டுப்பண்ணாகப் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓ கனடா பாடல் முதல் தடவையாக பாடப்பட்டது.

1894 – பிரான்சின் அரசுத் தலைவர் மரீ பிரான்சுவா சாடி கார்னோ படுகொலை செய்யப்பட்டார்.

1902 – ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் ஏழாம் எட்வர்டு குடல்வாலழற்சியால் பாதிக்கப்பட்டதால், அவரது முடிசூடல் தள்ளிப்போடப்பட்டது.

1913 – கிரேக்கமும் செர்பியாவும் பல்காரியாவுடனான தொடர்பைத் துண்டித்தன.

1932 – சியாமில் (தாய்லாந்து) இடம்பெற்ற இரத்தம் சிந்தா இராணுவப் புரட்சியை அடுத்து, மன்னரின் அதிகாரங்கள் வெகுவாகக் குறைந்தன.

1938 – 450 மெட்ரிக் தொன் எடையுள்ள விண்கல் பென்சில்வேனியாவின் சிக்கோராவில் வீழ்ந்தது.

1939 – சியாம் நாட்டின் பெயர் தாய்லாந்து என மாற்றப்பட்டது.

1948 – பனிப்போர்: சோவியத் ஒன்றியம் தமது கட்டுப்பாட்டிலுள்ள பெர்லினின் மேற்குப் பகுதியுடன் அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சுக்கள் வசம் இருந்த பகுதிகளுடனான தரைவழித் தொடர்புகளைத் துண்டித்தது.

1950 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: தென்னாப்பிரிக்காவில் மக்களை இனவாரியாகப் பிரிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

1963 – ஐக்கிய இராச்சியம் சான்சிபாருக்கு உள்ளக சுயாட்சியை வழங்கியது.

1973 – அமெரிக்காவின் நியூ ஓர்லென்சில் தன்னினச் சேர்க்கையாளர்கள் கூடிய விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீவைப்பு தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர்.

1989 – தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து யான் சமீன் சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1997 – ஈழப்போர்: பன்றிகெய்தகுளம், பனிக்கநீராவிப் பகுதியில் ஜெயசிக்குறு படையெடுப்பின்போது இடம்பெற்ற தாக்குதலில் 200 இராணுவத்தினரும் 90 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர்.

2002 – தான்சானியாவில் இடம்பெற்ற பெரும் தொடருந்து விபத்தில் 281 பேர் உயிரிழந்தனர்.

2004 – நியூயோர்க்கில் மரண தண்டனை சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட்டது.

2010 – ஆத்திரேலியாவின் முதல் பெண் பிரதமராக ஜூலியா கிலார்ட் பதவியேற்றார்.

2007 – கராச்சியில் இடம்பெற்ற மழை மற்றும் சூறாவளியில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
2013 – இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தமது அதிகாரத்தை முறை தவறிப் பயன்படுத்தியதாகவும், குறைவயது விலைமாது ஒருவருடன் உறவைப் பேணியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு ஏழாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.


பிறப்புகள்.

1542 – சிலுவையின் புனித யோவான், எசுப்பானியப் புனிதர் (இ. 1591)

1619 – ரைக்லாவ் வொன் கூன்சு, ஒல்லாந்த இலங்கையின் ஆளுநர் (இ. 1682)

1883 – யோன் மெட்சிங்கர், பிரான்சிய ஓவியர் (பி. 1956)

1885 – தாரா சிங், சீக்கிய அரசியல், சமயத் தலைவர் (இ. 1967)

1907 – கா. அப்பாத்துரை, தமிழகத் தமிழறிஞர் (இ. 1989)

1915 – பிரெட் ஆயில், ஆங்கிலேய வானியலாளர் (இ. 2001)

1921 – கண்ணதாசன், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் (இ. 1981)

1928 – எம். எஸ். விஸ்வநாதன், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (இ. 2015)

1929 – கரோலின் சூமேக்கர், அமெரிக்க வானியலாளர்

1937 – அனிதா தேசாய், இந்திய-அமெரிக்க எழுத்தாளர்

1938 – நீல. பத்மநாபன், தமிழக எழுத்தாளர்

1953 – வில்லியம். ஈ. மோர்னர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர், இயற்பியலாளர்

1961 – இயன் கிளென், இசுக்கொட்டிய நடிகர்

1966 – விஜயசாந்தி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை, அரசியல்வாதி

1968 – போரிசு கெல்பண்ட், உருசிய-இசுரேலிய சதுரங்க வீரர்

1974 – மது பாலகிருஷ்ணன், தென்னிந்தியத் திரைப்படப் பாடகர்

1979 – மிண்டி காலிங், அமெரிக்க நடிகை

1987 – லியோனல் மெசி, அர்ச்செந்தீனக் காற்பந்தாட்ட வீரர்


இறப்புக்கள்.

1398 – கோங்வு சீனப் பேரரசர் (பி. 1328)

1564 – ராணி துர்காவதி, கோண்டுவானா அரசி (பி. 1524)

1908 – குரோவர் கிளீவ்லாண்ட், அமெரிக்காவின் 22வது, 24வது அரசுத்தலைவர் (பி. 1837)

1947 – தர்மானந்த தாமோதர் கோசாம்பி, இந்தியப் பௌத்தப் பேரறிஞர் (பி. 1876)

1957 – பிரான்டிசேக் குப்கா, செக் நாட்டு ஓவியர் (பி. 1871)

1963 – மரிய குவாதலூபே கார்சிய சவாலா, மெக்சிக்கோ புனிதர் (பி. 1878)

1980 – வி. வி. கிரி, இந்தியாவின் 4-வது குடியரசுத் தலைவர் (பி. 1894)

1992 – மகாராஜபுரம் சந்தானம், தமிழக கருநாடக இசைப் பாடகர் (பி. 1928)

2006 – சிட்டி பெ. கோ. சுந்தரராஜன், தமிழக எழுத்தாளர், திரைப்பட விமர்சகர் (பி. 1910)

2007 – கிறிஸ் பென்வா, கனடிய மற்போர் வீரர் (பி. 1967)

2008 – லியோனிடு ஹுர்விக்ஸ், நோபல் பரிசு பெற்ற உருசிய-அமெரிக்க பொருளியலாளர் (பி. 1917)

2020 – எஸ். நடராஜசிவம், இலங்கை வானொலி அறிவிப்பாளர், நடிகர்
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாள்( 2024.06.24)


கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். இவர் சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு
தொகு
கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊரில் இந்து மதத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி ஆச்சி இணையாருக்கு 8வது மகனாக பிறந்தார்.[சான்று தேவை] (மறைவு 4-2-1955[1] ). இவருடன் உடன்பிறந்தோர் 10 பேர். சிறு வயதில் இவரை சிகப்பு ஆச்சி (மறைவு 25-12-1958) [2] என்பவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைபெயர் கண்ணதாசன்[3]

குடும்பம்
தொகு
கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்னும் பொன்னம்மாள் (இறப்பு:மே 31, 2012) என்பவரோடு 1950 பிப்ரவரி 9ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது.[4] இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்[5],[6].

கண்ணதாசன், பார்வதி என்பவரை 1951 நவம்பர் 11ஆம் நாள் [7] இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர்.[6]

ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.

கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

திரைத்துறைக்கான பங்களிப்புகள்
தொகு
திரையிசைப் பாடல்கள்
தொகு
கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள் ஐந்துதொகுதிகள்

வசனம் எழுதிய திரைப்படங்கள்
தொகு
நாடோடி மன்னன் (1958)
கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்
தொகு
மதுரை வீரன் 1956
நானே ராஜா 1956
ராஜா தேசிங்கு
மகாதேவி|(1957)
மாலையிட்ட மங்கை(1958)
கறுப்புப் பணம்(1964)
தெனாலி ராமன்(1957)
தெய்வத் திருமணங்கள்
மன்னாதி மன்னன்(1960)
திருடாதே ``(1961)
ராணி சம்யுக்தா ``(1962)
இல்லற ஜோதி(1954)
லட்சுமி கல்யாணம் (1970)
தயாரித்த படங்கள்
தொகு
கவிஞர் ஆறு திரைப்படங்களைத் தயாரித்தார்.[16] அவை:

சிவகங்கை சீமை
கவலை இல்லாத மனிதன்
கறுப்புபணம் (1964)
வானம்பாடி
மாலையிட்ட மங்கை (1958)
ரத்தத்திலகம்

மூன்றாம் பிறை திரைப்படத்தில் கண்ணே கலைமானே இவரது கடைசிப்பாடலாகும்

இலக்கியப் படைப்புகள்
மார்ச், கண்ணதாசன் இதழ்
பயணங்கள்
புஷ்பமாலிகா
போய் வருகிறேன், (1960) காவியக்கழகம், சென்னை
மனம்போல வாழ்வு (வானதி பதிப்பகம், சென்னை)
ராகமாலிகா
வாழ்க்கை என்னும் சோலையிலே
சமயம்
தொகு
அர்த்தமுள்ள இந்து மதம் 1 :
அர்த்தமுள்ள இந்து மதம் 2 :
அர்த்தமுள்ள இந்து மதம் 3 :
அர்த்தமுள்ள இந்து மதம் 4 : துன்பங்களிலிருந்து விடுதலை
அர்த்தமுள்ள இந்து மதம் 5 : ஞானம் பிறந்த கதை
அர்த்தமுள்ள இந்து மதம் 6 : நெஞ்சுக்கு நிம்மதி
அர்த்தமுள்ள இந்து மதம் 7 : சுகமான சிந்தனைகள்
அர்த்தமுள்ள இந்து மதம் 8 : போகம் ரோகம் யோகம்
அர்த்தமுள்ள இந்து மதம் 9 : ஞானத்தைத்தேடி
அர்த்தமுள்ள இந்து மதம்10 : உன்னையே நீ அறிவாய்
நாடகங்கள்
தொகு
அனார்கலி
சிவகங்கைச்சீமை
ராஜ தண்டனை, 1956, அருணோதயம், சென்னை.
உரை நூல்கள்
தொகு
கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:

அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
ஆடவர் மங்கையர் அங்க இலக்கணம்
ஆண்டாள் திருப்பாவை
எதையும் நான் கேலி செய்வேன்: காளமேகம் பாடல்கள், 1978, கண்ணதாசன் இதழ்
கண்ணே கதவைத்திற!: கலிங்கத்துப்பரணி - கடைதிறப்புக் காட்சி, 1977 செப்டம்பர், கண்ணதாசன் இதழ்
சங்கர பொக்கிஷம்
சுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல்
தாசிவீடு சென்ற ஒருவனின் அனுபவங்கள்: சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது, 1977 நவம்பர், கண்ணதாசன் இதழ்
திருக்குறள் காமத்துப்பால்
பகவத் கீதை
மதுவும் மங்கையரும்: கம்பராமாயணம் உண்டாட்டுப் படலம், 1977, கண்ணாதசன் இதழ்
பேட்டிகள்
தொகு
கண்ணதாசன் பேட்டிகள் - தொகுப்பாசிரியர்: ஆர்.பி.சங்கரன், (மாசிலாமணி பதிப்பகம், சென்னை-4)
சந்தித்தேன் சிந்தித்தேன்
வினா-விடை
தொகு
ஐயம் அகற்று
கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும்
மெல்லிசை மன்னர் MS. விஸ்வநாதன் அவர்களின் பிறந்தநாள் இன்று

மனயங்கத்து சுப்பிரமணியன் விசுவநாதன் அல்லது எம். எஸ். விஸ்வநாதன் (M. S. Viswanathan), அல்லது பொதுவாக எம்எஸ்வி, (24 சூன் 1928 – 14 சூலை 2015) தமிழ்த் திரைப்படவுலகில் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஆவார். இவர் கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928ம் ஆண்டு மலையாளக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுப்பிரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள் (நானிக்குட்டி)[1]. விசுவநாதன் 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ம. கோ. இராமச்சந்திரனின் ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கும் இசையமைத்திருந்தார்.

வாழ்க்கை

தனது நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விசுவநாதன் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருசுணன் நாயர் வீட்டிற்கு சென்று வளர்ந்தார். பள்ளிப் படிப்புப் படிக்காத இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் அங்கு கருநாடக இசையை நீலகண்ட பாகவதரிடம் பயின்று 13​வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.[2] இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன் இசைக்குழுவில் இவர் ஆர்மோனியத்தையும் டி. கே. ராமமூர்த்தி வயலினையும் வாசிப்பவர்களாக பணிபுரிந்தார்கள்.

இசைப் பயணம்

உடல்நல குறைவு காரணமாக, சி. ஆர். சுப்புராமனுடைய மறைவால் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை அவரின் உதவியாளர்களாக இருந்த விசுவநானும் ராமமூர்த்தியும் முடித்துக்கொடுத்தார்கள். தேவதாஸ் (தமிழ் & தெலுங்கு) மற்றும் சண்டிராணி (தமிழ், தெலுங்கு & இந்தி) படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இப்படங்கள் வெற்றி பெற்றதால் இந்தியில் சங்கர்-ஜெய்கிஷன் என்ற பெயரில் புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பார்கள் இருந்தது போல் தமிழில் விசுவநாதன்-இராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளராக உருவாகலாம் என்ற எண்ணத்தை விசுவநாதன் இராமமூர்த்தியிடம் தெரிவித்து அவரது இணக்கத்தைப் பெற்றார். இவர்கள் இருவரும் பணம் என்ற திரைப்படத்திற்கு முதலில் இணைந்து இசையமைத்தார்கள்.[3] ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை இணைந்து இசையமைத்தார்கள். 1995-ல் சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் என்ற திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து இசையமைத்தார்கள். விஸ்வநாதன் தனியாக 950 படங்களுக்கு மேல் இசையமைத்தார். இளையராஜாவோடு சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவு, செந்தமிழ் பாட்டு, செந்தமிழ்ச்செல்வன் என மூன்று படங்களுக்கு இசை அமைத்தார்.[4] 1963ஆம் ஆண்டு சூன் மாதம் 16-ஆம் தேதி மதராசு திரிப்ளிகேன் கல்சுரல் அகாடமி சார்பில் இந்து நாளிதழ் உதவியுடன் இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் "சித்ராலயா"கோபு முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிவாஜி கணேசனால் விசுவநாதன்-இராமமூர்த்திக்கு மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது

நடிகராக விஸ்வநாதன்

கண்ணகி, காதல் மன்னன், காதலா காதலா போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏ. பீம்சிங், கிருஷ்ணன்-பஞ்சு, ஏ. சி. திருலோசந்தர், கே. பாலசந்தர் என்ற இயக்குநர்களுடன் அதிகமாக பணியாற்றினார். தமிழ்த் தாய் வாழ்த்தான நீராடும் கடலுடுத்த பாடலுக்கு மோகன இராகத்தில் இசைக் கோர்ப்பு செய்தவர் விசுவநாதன். வி.குமார், இளையராஜா, அ. இ. ரகுமான், கங்கை அமரன், தேவா, யுவன் சங்கர் ராஜா, ஜி. வி. பிரகாஷ் குமார் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடினார் [5].

இசையமைத்த திரைப்படங்கள்
தொகுப்பு

தமிழ் - 800 திரைப்படங்கள்
மலையாளம் - 80 திரைப்படங்கள்
தெலுங்கு - 30 திரைப்படங்கள்
கன்னடம் - 15 திரைப்படங்கள்

இராமமூர்த்தியுடன் இணைந்து சுமார் 750 திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்தார்.

பெற்ற விருதுகள்
தொகுப்பு

இசைப்பேரறிஞர் விருது, 2003. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[6]
கலைமாமணி விருது
மதிப்புறு முனைவர் பட்டங்கள் - 2
மறைவு
தொகு
எம். எஸ். விஸ்வநாதன் 2015 சூலை 14 அன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னையில் காலமானார்.[7]
*ஜூன் 25*

விஸ்வநாத் பிரதாப் சிங் (சூன் 25 1931 - நவம்பர் 27, 2008) இந்தியக் குடியரசின் 7 ஆவது இந்திய பிரதமர் ஆவார். இவர் வி. பி. சிங் என அறியப்படுபவர். 

டிசம்பர் 2, 1989 லிருந்து நவம்பர் 10 1990 வரை இவர் இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்தார்.


2023-இல் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங்குக்கு முழு உருவச் சிலை அமைக்கும் அறிவிப்பை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்  வெளியிட்டார்.

வி. பி. சிங்கை "இந்தியத் தலைமை அமைச்சர்களிலேயே மிகவும் அரிதான தலைமை அமைச்சராக இருந்தவர்" எனப் புகழ்ந்தார் தமிழறிஞர் கி. குணத்தொகையன்.

Prepared by
Covai women ICT_போதிமரம்
140 ஆண்டுகளுக்கு முன்பு 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கோயம்புத்தூர் ஜனோபகார நிதி லிமிடெட் என்கின்ற இந்த வங்கி சேவை நிதி நிறுவனத்தை 1883-ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி சி.சதாசிவம் முதலியார் தொடங்கி வைத்தார்.

இதுதான் கோவை நகரின் முதல் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனமாகும். இந்த வங்கியானது 15, வைசியாள் தெருவில் செயல்பட்டது.

இந்த வங்கியின் நீண்ட வரலாற்றில், வங்கியின் இயக்குநர்கள் குழுவில் பல சிறந்த ஆளுமைகள் இருந்தனர்.

01. எம்.சம்பந்த முதலியார் (ஆர்.எஸ்.
புரத்தில் உள்ள சம்பந்தம் சாலை.
அவர் பெயரில் உள்ளது)

02. பி.ரங்கே கவுடர் (ரங்கே கவுடர் வீதி
இவர் பெயரிலேயே அமைந்துள்ளது)

03. சுவாமிகண்ணு வின்சென்ட்
(கோட்டைமேடு மாலைமுரசு
சாலையானது வின்சென்ட் ரோடு
என்று இவர் பெயரிலேயே
அழைக்கப்படுகிறது)

04. விஜயரங்க முதலியார்,

05. என்.கிரிய செட்டியார்,

06. பில்லர் செட்டியார்,

07. எம்.எஸ். பழனியப்ப முதலியார்

08. லால்ஜி சைட்,

09. சி.எஸ்.மீனாட்சிசுந்தரம் முதலியார்,

10. டி.நாராயணசுவாமி கவுண்டர்

11. எல்.முனியண்ணா கவுண்டர்

போன்றவர்கள் இந்த நிறுவனத்தை கடினமான காலங்களில் சிறப்பாக வழி நடத்தினர்.

#குறிப்பு: இந்த வங்கியை துவங்கிய சதாசிவம் முதலியார் வேறு யாருமல்ல. 1906 முதல் 1926 வரை கோயம்புத்தூர் மாநகர சபையின் உறுப்பினராகவும், 1921 முதல் 1936 வரை அதன் தலைவராகவும், 1926 முதல் 1936 வரை சென்னை சட்ட மேலவை உறுப்பினராகவும் பணியாற்றிய இரத்தின சபாபதி முதலியாரின் தந்தையார் ஆவார். இவரின் பெயரில்தான் இரத்தின சபாபதி புரம் என்கின்ற இன்றைய ஆர்.எஸ்.புரம் அமைந்துள்ளது.
*ஜூன் 26*

பெயர் : ம. பொ. சிவஞானம்
இயற்பெயர் : மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்
பிறப்பு : 26-06-1906
இறப்பு : 03-10-1995
பெற்றோர் : பொன்னுசாமி, சிவகாமி
இடம் : சால்வன் குப்பம், சென்னை

புத்தகங்கள் : வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், வள்ளுவர் வகுத்த வழி, வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

வகித்த பதவி : பத்திரிகையாளர், கவிஞர், சுதந்திர போராட்ட வீரர்

மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே ம. பொ. சி. என்று ஆயிற்று.

சென்னை விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில் 26.6.1906 அன்று பிறந்தார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவரின் பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்போடு முடிந்தது.

ம. பொ. சிவஞானம், இந்தியாவைச் சேர்ந்த விடுதலைப் போராட்டக்காரரும், சிறந்த தமிழறிஞரும் ஆவார்.

இவர் ம.பொ.சி என அறியப்படுபவர். சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார்.

‘சிலம்புச் செல்வர்’ என்ற விருது சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களால் வழங்கப்பெற்றது.

சென்னை, மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தன.

மதுரைப் பல்கலைக் கழகம் ‘பேரவைச் செல்வர்’ என்ற பட்டம் வழங்கியது.

மத்திய அரசு பத்மஶ்ரீ விருது தந்து போற்றியது.

தமிழக மேலவையின் தலைவராக பணியாற்றினார். ’செங்கோல்’ என்ற ஒரு வார இதழை நடத்தி வந்தார். தமிழ் முரசு என்ற இதழை நடத்தினார்.

சென்னை மாநகராட்சியில் ஆல்டர்மேன் மற்றும் கல்விக் குழுத் தலைவராக பணியாற்றினார்.

2006 ஆம் ஆண்டில் இவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கி சிறப்பித்தது.
வரலாற்றில் இன்று.


26 - 06 - 2024.


WEDNESDAY.


திருவள்ளுவர் ஆண்டு 2055.

ஆனி 12-ந் தேதி.

புதன்கிழமை.

கிரிகோரியன் ஆண்டின் 177 ஆம் நாளாகும்.

நெட்டாண்டுகளில் 178 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 188 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்.

4 – உரோமைப் பேரரசர் அகஸ்ட்டஸ் திபேரியசைத் தனது வாரிசாக அறிவித்தான்.

363 – உரோமைப் பேரரசர் யூலியன் சாசானியாவில் இருந்து பின்வாங்கும் போது கொல்லப்பட்டார். தளபதி யோவியன் போர்க்களத்தில் பேரரசராக போர்வீரர்களால் நியமிக்கப்பட்டார்.

684 – இரண்டாம் பெனடிக்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1243 – கோசு டாக் போரில் மங்கோலியர் செல்யூக்குக்குகளைத் தோற்கடித்தனர்.

1295 – போலந்து மன்னராக இரண்டாம் பிரிசிமித் முடிசூடினார்.

1409 – மேற்கு சமயப்பிளவு: கத்தோலிக்க திருச்சபை இரண்டாகப் பிளவடைந்தது. பீசா பொதுச்சங்கம் உரோமின் திருத்தந்தை பன்னிரெண்டாம் கிரகோரியையும் பன்னிரண்டாம் பெனடிக்டையும் இணைத்ததை அடுத்து, பெத்ரோசு பிலார்கசு எதிர்-திருத்தந்தை ஐந்தாம் அலெக்சாண்டர் ஆக நியமிக்கப்பட்டார்.

1460 – வாரிக் பிரபு ரிச்சார்டு நெவில், மார்ச் பிரபு எட்வர்டு ஆகியோர் தமது படைகளுடன் இங்கிலாந்து திரும்பி, இலண்டனுக்கு சென்றனர்.

1483 – மூன்றாம் ரிச்சர்டு இங்கிலாந்தின் அரசனாக முடிசூடினார்.

1541 – இன்கா பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்த பிரான்சிஸ்கோ பிசாரோ லிமாவில் கொல்லப்பட்டார்.

1718 – உருசியாவின் முதலாம் பேதுரு மன்னரின் மகன் அலெக்சி பெத்ரோவிச் தந்தையினால் தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, மர்மமான முறையில் மரணமடைந்தான்.

1723 – பக்கூ நகரம் உருசியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

1794 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: புளூருசு போரில் முதற்தடவையாக வானூர்திகள் போரில் பயன்படுத்தப்பட்டன.

1803 – கண்டிப் போர்கள்: கண்டியில் சரணடைந்த பிரித்தானியப் படையினர் பெருமளவில் கொல்லப்பட்டனர்.[1][2]

1830 – நான்காம் வில்லியம் பிரித்தானியாவின் அரசராக முடிசூடினார்.

1843 – நாஞ்சிங் உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது. ஒங்கொங் தீவு பிரித்தானியாவின் கட்டுபாட்டுக்குள் வந்தது.

1870 – ஐக்கிய அமெரிக்காவில் கிறித்துமசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.

1886 – ஆன்றி முவாசான் புளோரின் தனிமத்தைப் பிரித்தெடுத்தார்.

1924 – ஐக்கிய அமெரிக்காவின் டொமினிக்கன் குடியரசு மீதான ஆக்கிரமிப்பு எட்டு ஆண்டுகளின் பின்னர் முடிவுக்கு வந்தது.

1936 – முதலாவது செயல்முறை ரீதியான உலங்கு வானூர்தி பறக்க விடப்பட்டது.

1941 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் வானூர்திகள் அங்கேரியின் காசா (இன்றைய சிலோவாக்கியாவில்) மீது குண்டுகளை வீசின. அடுத்த நாள் அங்கேரி போரை அறிவித்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: சான் மரீனோ மீது பிரித்தானிய வான்படை தவறுதலாகக் குண்டுத்தாக்குதல் நடத்தியதில் 35 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

1945 – ஐக்கிய நாடுகள் பட்டயம் சான் பிரான்சிஸ்கோவில் 50 கூட்டு நாடுகளினால் கையெழுத்திடப்பட்டது.

1948 – முதலாவது இருமுனை சந்தி திரான்சிஸ்டருக்கான காப்புரிமத்தை வில்லியம் ஷாக்லி பெற்றார்.

1960 – முன்னாள் பிரித்தானிய சோமாலிலாந்து சோமாலிலாந்து என்ற பெயரில் விடுதலை பெற்றது.

1960 – மடகாசுகர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1974 – உலகளாவிய தயாரிப்புக் குறியீடு முதன் முதலாக ரிக்லியின் மெல்லும் பசையின் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்டது.

1976 – கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

1977 – எல்விஸ் பிரெஸ்லி தனது கடைசி இசை நிகழ்ச்சியை இந்தியானாபோலிசில் நடத்தினார்.

1978 – டொரான்டோ சென்ற ஏர் கனடா 189 விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

1991 – யுகொசுலாவிய மக்கள் இராணுவம் சுலோவீனியா மீது 10-நாள் போரைத் தொடங்கியது.

1995 – கத்தாரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில், சேக் அமத் பின் கலீபா அல் தானி அவரது தந்தை கலீபா பின் அமது அல் தானியை கவிழ்த்து ஆட்சியைப் பிடித்தார்.

1995 – அடிஸ் அபாபாவில் எகிப்திய அரசுத்தலைவர் ஓசுனி முபாரக் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

2000 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அன்னை பாத்திமாவின் மூன்றாவது இரகசியத்தை அறிவித்தார்.

2007 – திருத்தந்தை தேர்தலில் வெற்றி பெறுபவர் மூன்றில் இரண்டு வாக்குகளைப் பெற வேண்டும் என திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் திருத்தம் கொண்டுவந்தார்.

2012 – கொலராடோவில் பரவிய தீயினால் 347 வீடுகள் எரிந்து சாம்பலாயின, இருவர் உயிரிழந்தனர்.

2013 – சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தில் இடம்பெற்ற கலவரங்களில் 36 பேர் உயிரிழந்தனர்.
2015 – ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் அரசமைப்பின் 14வது திருத்தத்தின் படி ஒரு-பால் இணையரின் திருமணம் புரிவதற்கு உரிமை உள்ளதென தீர்ப்பு வழங்கியது.


பிறப்புகள்.

1730 – சார்லசு மெசியர், பிரான்சிய வானியலாளர் (இ. 1817)

1797 – இமாம் சாமீல் செச்சினிய முஸ்லிம் அரசியல் தலைவர் (இ. 1817)

1824 – வில்லியம் தாம்சன், அயர்லாந்து-இசுக்கொட்டிய இயற்பியலாளர் (இ. 1907)

1873 – கௌஹர் ஜான், இந்தியப் பாடகி, நடனக் கலைஞர் (இ. 1930)

1874 – சாகு மகாராசர், கோல்காப்பூர் அரசர் (இ. 1922)

1892 – பெர்ல் பக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1973)

1904 – செருக்களத்தூர் சாமா, தமிழக நடிகர், பாடகர்

1906 – ம. பொ. சிவஞானம், தமிழக அரசியல்வாதி, தமிழறிஞர் (இ. 1995)

1908 – சால்வடோர் அயேந்தே, சிலியின் 29வது அரசுத்தலைவர் (இ. 1973)

1914 – இலைமன் சுட்டிராங் சுபிட்சர், அமெரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளர், வானியலாளர், மலையேறி (இ. 1997)

1916 – செம்மஞ்சேரி குன்னிராமன் நாயர், கேரள கதகளி நடனக் கலைஞர்

1924 – இளையபெருமாள், தமிழக தலித் அரசியல்வாதி (இ. 2005)

1930 – சு. சபாரத்தினம், ஈழத்துப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (இ. 2013)

1939 – அப்துல் ஜப்பார், தமிழக-இலங்கை ஊடகவியலாளர் (இ. 2020)

1943 – யாரொசுலாவ் வாச்செக், செக் தமிழறிஞர், இந்தியவியலாளர் (இ. 2017)

1954 – ஏ. பி. ஜிதேந்திர ரெட்டி, இந்திய அரசியல்வாதி

1960 – சுரேஷ் கோபி, மலையாள நடிகர்

1962 – ஒலாண்டா உமாலா, பெரு அரசியல்வாதி

1993 – அரியானா கிராண்டி, அமெரிக்க நடிகை, பாடகி


இறப்புக்கள்.

1274 – நசீருத்தீன் அத்-தூசீ, பாரசீக அறிவியலாளர், எழுத்தாளர் (பி. 1201)

1541 – பிரான்சிஸ்கோ பிசாரோ, எசுப்பானிய நாடுகாண் பயணி, அரசியல்வாதி (பி. 1471)

1796 – டேவிட் ரிட்டன்ஹவுஸ், அமெரிக்க வானியலாளர் (பி. 1732)

1827 – சாமுவேல் கிராம்டன், ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளர் (பி. 1753)

1830 – நான்காம் ஜார்ஜ், ஐக்கிய இராச்சிய மன்னர் (பி. 1762)

1856 – மக்சு இசுரேனர், செருமானிய மெய்யியலாளர் (பி. 1806)

1932 – அடிலைடே அமெசு, அமெரிக்க வானியலாளர் (பி. 1900)

1943 – கார்ல் லாண்ட்ஸ்டெய்னெர், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய மருத்துவர் (பி. 1868)

1972 – எம். எம். தண்டபாணி தேசிகர், தமிழிசைக் கலைஞர் (பி. 1908)

1975 – ஓசேமரிய எஸ்கிரிவா, எசுப்பானிய மதகுரு, புனிதர் (பி. 1902)

1985 – செ. எ. ஆனந்தராஜன், இலங்கைத் தமிழ் கல்வியாளர் (பி. 1932)

2010 – டி. சுதர்சனம், தமிழக அரசியல்வாதி (பி. 1941)

2015 – கே. எம். பஞ்சாபிகேசன், இலங்கை நாதசுரக் கலைஞர் (பி. 1924)


சிறப்புநாள்.

விடுதலை நாள் (மடகாசுகர், பிரான்சிடம் இருந்து 1960)

விடுதலை நாள் (சோமாலியா பிரித்தானியாவிடம் இருந்து, 1960)

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான பன்னாட்டு நாள்
*ஜூன் 27*

*பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களின் பிறந்த நாள்*

பங்கிம் சந்திர சட்டர்ஜி என அழைக்கப்படும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (Bankim Chandra Chattopadhyay ( ஜூன் 27, 1838[1] – ஏப்ரல் 8, 1894)[2] ஒரு வங்காள எழுத்தாளரும் கவிஞரும் இதழியலாளருமாவார்.

இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது.

இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார்.

இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.

Prepared by
Covai women ICT_போதிமரம்
*ஜூன் 27*

*பி. டி. உஷா அவர்களின் பிறந்தநாள்*

பி. டி. உஷா கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்திய தடகள விளையாட்டாளர் ஆவார். 1979ஆம் ஆண்டிலிருந்து இந்திய தடகள விளையாட்டுத் துறையில் பங்கெடுத்து வருகிறார்.

இந்தியத் தடகள விளையாட்டுக்களில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உஷா பலநேரங்களில் "இந்தியத் தட களங்களின் அரசி"எனக் குறிப்பிடப்படுகிறார்.

இவர் பய்யோலி எக்சுபிரசு என்றும் அழைக்கப்படுகிறார். 1985இலும் 1986இலும் உலகத் தடகள விளையாட்டுக்களில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்கினார்.

இவருக்கு முன்பும் பின்பும் இந்தப் பட்டியலில் வேறெந்த இந்தியரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Prepared by
Covai women ICT_போதிமரம்
*ஜூன் 27*

*ஹெலன் கெல்லர் அவர்களின் பிறந்தநாள்*

ஹெலன் கெல்லர் (Helen Adams Keller) (ஜூன் 27, 1880 - ஜூன் 1, 1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண்மணி ஆவார்.

பிறக்கும் பொழுது ஆரோக்கியமாகவே இருந்தார். அவர் பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாகக் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார். ஆன் சல்லிவன், கெல்லரின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்

ஆன் சல்லிவனை துணைக்கு வைத்துகொண்டு தொய்வின்றி உழைத்த கெல்லர் 1904 ஆம் ஆண்டு தன்து 24 ஆவது வயதில் இளங்கலை பட்டம் பெற்றார்.

கண் பார்வையின்றி காதும் கேளாமல் பல்கலைக் கழகத்தில் படித்து இளங்கலைப் பட்டம் பெற்ற முதற் பெண்மணி என்ற சிறப்பும் பெற்றார்.

1903 இல் 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கெல்லர். தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார். 

Prepared by
Covai women ICT_போதிமரம்
*ஜூன் 28*

*பி. வி. நரசிம்ம ராவ்  அவர்களின் பிறந்தநாள்*

பி. வி. நரசிம்ம ராவ் (ஜூன் 28, 1921 -டிசம்பர் 23, 2004) இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பணியாற்றியவர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்.

தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவராவார். இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

இந்திய அரசியலமைப்பில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்க பாடுபட்டவர்.

Prepared by
Covai women ICT_போதிமரம்
வரலாற்றில் இன்று.



27 - 06 - 2024.

THURSDAY.



திருவள்ளுவர் ஆண்டு 2055.

ஆனி 13-ந் தேதி.

வியாழக்கிழமை.

கிரிகோரியன் ஆண்டின் 178 ஆம் நாளாகும்.

நெட்டாண்டுகளில் 179 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 187 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்.

1497 – கோர்னியக் கிளர்ச்சியாளர்கள் மைக்கேல் கோஃப், தோமசு பிளமாங்க் இலண்டன் டைபர்ன் என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டனர்.

1556 – தமது சீர்திருத்தத் திருச்சபை நம்பிக்கைகளுக்காக 13 பேர் இலண்டனில் எரியூட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

1743 – டெட்டிஞ்சென் போரில் பங்குபற்றிய பிரித்தானிய மன்னர் இரண்டாம் ஜார்ஜ், போர் ஒன்றி நேரடியாகப் பங்குகொண்ட கடைசி பிரித்தானிய முடியாட்சியாளர் ஆவார்.

1759 – கியூபெக் மீதான பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பமானது.

1760 – செரோக்கீ போராளிகள் பிரித்தானியப் படைகளை எக்கோயீ போரில் (வட கரொலைனாவில்) வென்றனர்.

1806 – பிரித்தானியப் படையினர் புவனெசு ஐரிசைக் கைப்பற்றினர்.

1806 – டச்சு இலங்கையில் கத்தோலிக்கர் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.[1]

1844 – பின்னாள் புனிதர்களின் கிறித்து சபையை நிறுவிய இரண்டாம் யோசப்பு இசுமித்தும் அவரது சகோதரரும் இலினொய், கார்த்தேசு சிறையில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டனர்.

1898 – உலகை சுற்றும் முதலாவது பயணத்தை நோவா ஸ்கோசியாவைச் சேர்ந்த யோசுவா சுலோக்கம் வெற்றிகரமாக முடித்தார்.

1905 – உருசிய-சப்பானியப் போரின் போது, பொத்தெம்கின் என்ற உருசியப் போர்க்கப்பலில் கடற்படையினர் கிளர்ச்சியில் இறங்கினர்.

1941 – இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படைகள் பியாலிசுத்தோக் நகரை பர்பரோசா நடவடிக்கையின் போது கைப்பற்றின.

1941 – உருமேனியா லாசி நகரில் யூதர்களுக்கு எதிரான படுகொலைகளை ஆரம்பித்தது. இதன் போது குறைந்தது 13,266 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

1950 – கொரியப் போரில் போரிட அமெரிக்கா தனது படைகளை அனுப்பத் தீர்மானித்தது.

1954 – சோவியத் ஒன்றியத்தின் முதலாவது அணு மின் நிலையம் ஓபினின்ஸ்க் நகரில் திறக்கப்பட்டது.

1954 – இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.

1957 – டெக்சஸ்–லூசியானா எல்லையை சூறாவளி தாக்கியதில் 400 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

1973 – உருகுவை அரசுத்தலைவர் உவான் மரியா போர்டபெரி நாடாளுமன்றத்தைக் கலைத்து, நாட்டில் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தினார்.

1974 – அமெரிக்கத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன் சோவியத் ஒன்றியத்துக்கான பயணம் மேற்கொண்டார்.

1976 – ஏர் பிரான்சு 139 (டெல் அவீவ்-ஏதென்ஸ்-பாரிசு) பாலத்தீன விடுதலை இயக்கப் போராளிகளால் கடத்தப்பட்டு உகாண்டாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

1977 – சீபூத்தீ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1979 – முகமது அலி குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

1980 – பலெர்மோ நோக்கிச் சென்ற இத்தாலியின் ஏரோலைனீ 870 விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதில் அதில் சென்ற அனைத்து 81 பேரும் உயிரிழந்தனர்.

1981 – சீனப் பொதுவுடமைக் கட்சியின் நடுவண் செயற்குழு தனது "மக்கள் சீனக் குடியரசு உருவாக்கப்பட்டதில் இருந்து நமது கட்சியின் வரலாறு பற்றிய சில கேள்விகள் பற்றிய தீர்மானத்தை" வெளியிட்டது. இதில் சீனப் பண்பாட்டுப் புரட்சியின் விளைவுகளுக்காக மா சே துங் மீது குற்றஞ்சாட்டியது.

1982 – கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை மேற்கொண்டது.

1988 – பாரிசு நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 56 பேர் உயிரிழந்தனர்.

1991 – சுலோவீனியா தனது விடுதலையை அறிவித்த இரண்டாம் நாளில் யுகோஸ்லாவியா அதன் மீது படையெடுத்தது.

1994 – சப்பானில் ஓம் சிர்க்கியோ மதக்குழுவினர் மத்சுமோட்டோ நகரில் நச்சு வாயுவைக் கசியவிட்டதில் 7 பேர் கொல்லப்பட்டனர், 660 பேர் காயமடைந்தனர்.

1998 – கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது.

2007 – 1997 முதல் பதவியில் இருந்த பிரித்தானியத் தலைமை அமைச்சர் டோனி பிளேர் பதவி துறந்தார்.

2013 – சூரியனை ஆய்வு செய்வதற்காக நாசா விண்கலம் ஒன்றை ஏவியது.

2014 – ஆந்திரப் பிரதேசம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கெயில் இந்தியா நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் வெடித்ததில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர்.


பிறப்புகள்.

1789 – டானியல் புவர், இலங்கையில் கல்விச்சாலைகளை நிறுவிய அமெரிக்கக் கிறித்தவ மதகுரு (இ. 1855)

1838 – பங்கிம் சந்திர சட்டர்ஜி, இந்திய ஊடகவியலாளர், கவிஞர் (இ. 1894)

1869 – எம்மா கோல்ட்மன், லித்துவேனிய-கனடிய மெய்யியலாளர், செயர்பாட்டாளர் (இ. 1940)

1872 – ஏபர் தவுசுட் கர்டிசு, அமெரிக்க வானியலாளர் (இ. 1942)

1880 – ஹெலன் கெல்லர், அமெரிக்க எழுத்தாளர், செயர்பாட்டாளர் (இ. 1968)

1899 – சி. கணபதிப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1986)
1912 – ஈ. ஆர். பிரைத்வெயிட், கயானா-அமெரிக்கப் புதின எழுத்தாளர் (இ. 2016)

1922 – அகிலன், தமிழக எழுத்தாளர் (இ. 1988)

1927 – டொமினிக் ஜீவா, ஈழத்து எழுத்தாளர், இதழாசிரியர் (இ. 2021)

1939 – ராகுல் தேவ் பர்மன், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர் (இ. 1994)

1943 – உ. இராதாகிருஷ்ணன், ஈழத்து வயலின் இசைக் கலைஞர் (இ. 2015)

1958 – மரியா சூபர், அமெரிக்க வானியலாளர்

1962 – சுனந்தா புஷ்கர், இந்திய-கனடிய தொழிலதிபர் (இ. 2014)

1963 – சுசில் குமார் சிங், இந்திய அரசியல்வாதி

1964 – பி. டி. உஷா, கேரள தடகள விளையாட்டாளர்

1975 – தோபி மக்குயர், அமெரிக்க நடிகர்

1992 – கார்த்திகா நாயர், இந்தியத் திரைப்பட நடிகை


இறப்புக்கள்.

1839 – ரஞ்சித் சிங், சீக்கிய பேரரசை நிறுவியவர் (பி. 1780)

1844 – இரண்டாம் யோசப்பு இசுமித்து, பிற்காலப் புனிதர்களின் இயேசு கிறித்து சபையை நிறுவிய அமெரிக்கர் (பி. 1805)

1952 – சி. ஆர். சுப்பராமன், தென்னிந்திய இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் (பி. 1924)

1987 – எம். பி. நாச்சிமுத்து சென்னிமலை, கைத்தறி நெசவுத் துறையில் சமூக சேவகர் (பி. 1913)

1988 – ஆர். முத்துசாமி, ஈழத்து இசையமைப்பாளர், பாடகர் (பி. 1926)

1998 – நிகில் சக்கரவர்த்தி, இந்திய இதழிகையாளர் (பி. 1913)

2006 – கா. செ. நடராசா, ஈழத்து எழுத்தாளர், கவிஞர் (பி. 1930)

2007 – டி. எம். தியாகராஜன், தமிழக கருநாடக இசைக் கலைஞர் (பி: 1923)

2008 – சாம் மானேக்சா, இந்திய இராணுவத் தளபதி (பி. 1914)

2009 – இ. முருகையன், ஈழத்துக் கவிஞர் (பி. 1935)

2016 – ஆல்வின் டாப்லர், அமெரிக்க சமூக அறிவியலாளர், நூலாசிரியர், எழுத்தாளர் (பி. 1928)

2019 – விஜய நிர்மலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை, இயக்குநர் (பி. 1944)


சிறப்புநாள்.

பல்கலாச்சார நாள் (கனடா)

விடுதலை நாள் (சீபூத்தீ, பிரான்சிடம் இருந்து 1977)
2024/06/30 13:17:13
Back to Top
HTML Embed Code: